அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரசாரத்தில் குதிக்கும் விஜயகாந்த் மகன்கள்

Added : மார் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement

தேர்தல் பிரசாரத்தில், விஜயகாந்தின், இரு மகன்களும் குதிக்கவுள்ளதால், தே.மு.தி.க.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிடுகிறது.

அக்கட்சிக்கு, வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி என, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலை பொறுத்தவரை, தொடர் தோல்விகளுக்கு, அக்கட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. இதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை, அதன் தலைமை எடுத்து வருகிறது.தே.மு.தி.க., போட்டியிடும், நான்கு தொகுதிகளில், தலா, 10 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில், மாவட்ட செயலர்களுடன் இணைந்து பணியாற்ற, தலா, இரண்டு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இது மட்டுமின்றி, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், பொருளாளர், பிரேமலதா, பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளில் மட்டும், விஜயகாந்த், பிரசாரம் செய்யவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதும், இருவரும் பிரசாரத்திற்கு புறப்படுகின்றனர். இவர்களுடன், மகன்கள், விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் ஆகியோரும், பிரசார களத்தில் குதிக்கவுள்ளனர். இதனால், தே.மு.தி.க.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-மார்-201923:08:48 IST Report Abuse
Mani . V பார்த்து குதிங்க தம்பிகளா - குதிக்கும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டு விடாமல். ஆமா உங்கள் கட்சி என்ன சாதித்தது என்று சொல்லி ஒட்டு கேட்பீர்கள்? எது அம்மாவின் (பிரேமலதா) மரியாதையான(?) பேச்சை சாதனையாக சொல்வீர்களா?
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
20-மார்-201912:29:47 IST Report Abuse
Girija கோவிந்தா கோவிந்தா அப்பாவ பார்த்தாச்சு, அம்மா அதிரடி பேரத்தை கண்டாச்சு, முளைக்கிற முளையிலேயே முத்த புள்ள டா போட்டு பேசுவதை கேட்டாச்சு, அடுத்த புள்ள என்ன செய்யுமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X