அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகாரத்திற்காக மதுரையை 'பங்கு போட்ட' அமைச்சர்கள்

Added : மார் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மதுரையை 'பங்கு போட்ட' அமைச்சர்கள்

மதுரை,: யார் அதிகாரம் செய்வது என்ற ஈகோ பிரச்னையால், அமைச்சர்கள் செல்லுார்ராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா ஆகியோர் மதுரையை 3 ஆக பிரித்து 'பங்கு போட்டு' கொண்டது தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பை பலப்படுத்துமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


நெருக்கடி


மதுரை நகர் செயலாளராக செல்லுார் ராஜூ உள்ளார். திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரான உதயகுமார், தனது தொகுதியில் கட்சி நிகழ்ச்சி நடத்த ஒவ்வொரு முறையும் மாவட்ட செயலாளராக இருந்த ராஜன்செல்லப்பாவிடம் கேட்க வேண்டியிருந்தது. சமீபகாலமாக முதல்வர் பழனிசாமியிடம் நெருக்கமாக இருந்து வரும் உதயகுமார், தனக்கு மதுரையில் தனி அதிகாரம் தேவை என கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். முதல்வரை மையப்படுத்தி மதுரையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.


விவாதம் சூடு பிடித்தது


இந்நிலையில் மதுரை வேட்பாளர் தேர்வில் மூன்று அமைச்சர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. 'ஒரே குடும்பத்தில் எம்.எல்.ஏ.,- மாவட்ட செயலாளர்- எம்.பி., வேட்பாளர் என இருந்தால் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். கட்சியினரே இதை ஏற்க மாட்டார்கள்' என ராஜன் செல்லப்பாவை குறிப்பிட்டு விவாதம் நடந்தது. ராஜன்செல்லப்பாவை சமரசம் செய்ய முயன்ற துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம், 'நீங்கள் துணைமுதல்வராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்துக்கொண்டு உங்கள் மகனுக்கு சீட் வாங்கி கொடுத்துள்ளீர்களே' என கேட்க, விவாதம் சூடுபிடிப்பதை அறிந்த முதல்வர் பழனிசாமி சமரசம் செய்தார்.


தனி அதிகாரம்


இந்த மோதல் தேர்தல் வெற்றியை பாதிக்கும் எனக்கருதிய பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சிறிது நேரம் ஆலோசித்தனர். பிறகு மதுரையை 3 ஆக பிரித்து மூவரையும் செயலாளராக நியமிப்பது என முடிவானது. மூவரும் ஏற்றுக்கொண்டனர்.இதன்பிறகே ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் மதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இதைதொடர்ந்து நகர் செயலாளராக செல்லுார் ராஜூ, கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜன்செல்லப்பா, மேற்கு மாவட்ட செயலாளராக உதயகுமார் நியமிக்கப்பட்டனர். அ.தி.மு.க., வெளியிட்ட முதல் அறிவிப்பில், செல்லுார் ராஜூவுக்கு மதுரை மேற்கு, தெற்கு, மத்திய தொகுதிகளும், ராஜன்செல்லப்பாவுக்கு மதுரை வடக்கு, கிழக்கு, மேலுார் தொகுதிகளும், உதயகுமாருக்கு திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், சோழவந்தான் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
இந்த ஒதுக்கீட்டால் செல்லுார் ராஜூவும், ராஜன்செல்லப்பாவும் அதிருப்தி அடைந்தனர். நகர் செயலாளரின் கீழ் இருந்த மதுரை வடக்கு தொகுதி மீண்டும் தனக்கு வேண்டும் என செல்லுார் ராஜூ அடம் பிடிக்க, ராஜன் செல்லப்பாவும் தனது வீடு அமைந்துள்ள திருப்பரங்குன்றம் தொகுதி தனக்கு வேண்டும் என போர்கொடி துாக்கினார்.இதனால் வேறுவழியின்றி கட்சி தலைமை இரண்டாவது அறிவிப்பை வெளியிட்டது. அதில், வடக்கு தொகுதி செல்லுார் ராஜூவுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதி ராஜன்செல்லப்பாவுக்கும் ஒதுக்கப்பட்டது. இதில் உதயகுமாருக்கு சிறிது மனவருத்தம் என்றாலும், தனக்கு தனி அதிகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மதுரை அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட இந்த மாற்றம், தேர்தலில் வெற்றி வாய்ப்பை பலப்படுத்துமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மார்-201908:24:32 IST Report Abuse
Srinivasan Kannaiya பணம் பதவிக்கு இவ்வளவு அடிதடி
Rate this:
Share this comment
Cancel
ராமநாதன் நாகப்பன் கவலைப்படாதீங்க! ஏழைத் தாயின் மகன் இப்போ காவலன் ஆகிட்டாரு. தேர்தலில் வெற்றி பெறுவதை அவரு அவங்க ஆள் மூலமா பார்த்துக்குவாரு. அம்மாவின் ஆன்மா பற்றியெல்லாம் இந்த விஷயத்தில் எல்லாம் கவலையே பட வேண்டிய அவசியமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X