பா.ஜ., இல்லாத இந்தியாவா?' : ராகுல்

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (60)
Advertisement

இடாநகர்: 'பா.ஜ., இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என, நாங்கள் கூறுவதில்லை; அப்படி கூறவும் மாட்டோம்,' என, காங்., தலைவர் ராகுல் கூறினார்.


வடகிழக்கு மாநிலமான, அருணாச்சல பிரதேசத்தில், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இடாநகரில் நேற்று நடந்த, காங்., தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ராகுல் பேசியதாவது:

மத்தியில், காங்., ஆட்சி இருந்த போது, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. காங்., ஆட்சிக்கு வந்தால், வட கிழக்கு மாநிலங்களுக்கு, மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறார். 'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' என்கிறார்; ஆனால், 'பா.ஜ., இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' என, நாங்கள் கூறுவதில்லை; அப்படி கூறவும் மாட்டோம்.

வேலையில்லாத இளைஞர்கள் சுயதொழில் துவங்க, கடனுதவி அளிக்காமல், தொழிலதிபர்களின், 3.5 லட்ச கோடி ரூபாய் கடனை, பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
20-மார்-201920:47:06 IST Report Abuse
RajanRajan 😂😂😂😂
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
20-மார்-201914:28:37 IST Report Abuse
Snake Babu வழக்கமாக தவறுதலான புரிதலோடு கருத்து மோதல் நடந்தேறிக் கொண்டிருக்கிறது, பிஜேபி நண்பர்கள் எப்படியும் இதை புரிந்துகொள்வதற்கு தயாராகவும் இருக்க போவதில்லை. பிஜேபியினரின் கோஷங்கள், காங் இல்லாத இந்தியா, தேச விரோதி, பாகிஸ்தானுக்கு ஓடு, இடாலி அடிமை திராவிஷம், இப்படி பல, இதிலிருந்து தெரிவது அவர்களுக்கு முழுவதும் பிரிவினை வாதமே, அதிலும் எதிர்க்கருத்து ஒன்று இருக்கவே கூடாது என்கிற சர்வாதிகார போக்கு நன்றாகவே தெரிகிறது ....... ராகுலின் பேச்சு கண்டிப்பாக முதிர்ச்சிகள் தெரியத்தான் செய்கிறது, இவர் கூறியது பா.ஜ., இல்லாத இந்தியாவா?' : ராகுல் 'பா.ஜ., இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' என, நாங்கள் கூறுவதில்லை அப்படி கூறவும் மாட்டோம், ........ அருமை இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாறலானும் கெடும்....... இடித்து கூறுவதற்கு எதிரில் ஆட்கள் வேண்டும். இதை போலத்தான் கூறியிருக்கிறார், எனக்கு காங் மீது எந்த ஆதரவு மனப்பான்மை இல்லை, அதே நேரத்தில் பிஜேபி ஆட்சி சரியும் இல்லை. கொடுமை என்னவென்றால் நாட்டிற்கு ஒரு நல்ல தலைமை இல்லாததே ஆனால் பிஜேபி க்கு நான் பார்த்தவரையில் இப்படி இடித்து கூறும் யாரையும் பிடிப்பதில்லை, அதற்கு பதிலுரையாக எவ்வ்ளவு ஏச்சு வரும் என்று அனைவருக்கும் தெரியும். வாங்க வந்து என்னை எவ்வ்ளவு தூரம் திட்டமுடியுமோ அவ்வளவு தூரம் திட்டிவிட்டு செல்லுங்கள் நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
23-மார்-201907:29:13 IST Report Abuse
Cheran Perumalஆமா, தெரியாமத்தான் கேட்கிறேன், பார்லிமென்டில் கட்டிப்பிடித்துவிட்டு, கண்ணடித்து என்ன வகையான முதிர்ச்சி. முத்திப்போய்விட்டது என்பார்களே, அது மாதிரியா?...
Rate this:
Share this comment
Cancel
susainathan -  ( Posted via: Dinamalar Android App )
20-மார்-201911:50:21 IST Report Abuse
susainathan 3.5 Lacks crores credit cancelled buy modi rules wow so many poor peoples got a benefit business man all poor
Rate this:
Share this comment
natarajan s - chennai,இந்தியா
20-மார்-201915:17:42 IST Report Abuse
natarajan sபலர் கடன் தள்ளுபடி என்றே பதிவிடுகிறார்கள். எந்த வங்கியும் மக்களது பணத்தை சிலர் பதிவிடுவதுபோல் (பப்பு உள்பட பல தலைவர்கள் ) நினைத்த மாத்திரத்தில் அரசு சொல்லியது என்றெல்லாம் தள்ளுபடி செய்ய முடியாது. NPA (வார கடன் ) கணக்குகளுக்கு balance sheet இல் இருந்து நீக்க ஒரு வரைமுறை உள்ளது. லாபத்தில் 100 % provision மேற்படிக்கணக்குகளுக்கு வைத்தபின் மீண்டும் மீண்டும் அந்த கணக்குகளை வங்கியின் சொத்தாக (assets ) காட்டமுடியாது. ஆகவே Statutory Auditor களின் ஒப்புதலோடு வகையான கணக்குளை வெளியே எடுத்து Accounts Under Collection என்ற கணக்கில் வரவு வைப்பதற்கு பேர் Technical Write ஆப். அதைத்தான் இந்த வங்கிகள் செய்துள்ளது. அது தவறாக முழு தள்ளுபடி என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறை 1996 இல் இருந்து நடைமுறையில் உள்ளது. இப்பொது நிறைய கணக்குகள் இம்முறையில் balance sheet இல் இருந்து வெளியே எடுக்கப்படுவதால் ஊடகங்களில் இது பெரிதாக பேசப்படுகிறது. உண்மையில் இது தள்ளுபடியே இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X