அரசியல் செய்தி

தமிழ்நாடு

360 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்: எச்.ராஜா

Added : மார் 20, 2019 | கருத்துகள் (14)
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

தஞ்சாவூர்: ''லோக்சபா தேர்தலில், பா.ஜ., 360 தொகுதிகளை கைப்பற்றும்,'' என, அக்கட்சியின் தேசிய செயலர் எச். ராஜா தெரிவித்தார்.

தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு, பா.ஜ., தேசிய செயலர் ராஜா, குடும்பத்துடன், நேற்று காலை வந்தார். கோவில் நடந்த சத்ரு சம்ஹார திருசதை யாகத்தில், மூன்று மணி நேரம் பங்கேற்றார். இந்த யாகம், எதிரிகளை வீழ்த்தவும், தேர்தலில் வெற்றி பெறவும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின், அவர் அளித்த பேட்டி: மத்திய, பா.ஜ., அரசு வலிமையுடன் இருக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில், இந்திய அளவில், 360 தொகுதிகளை, பா.ஜ., கைப்பற்றும். தமிழகத்தில், 30 - 35 தொகுதிகளை கைப்பற்றும். தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி, தேச நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தால் பின்லேடன் சுட்டு கொல்லப்பட்டபோது, அவனது உடலை, அமெரிக்க மக்கள் யாரும் கேட்கவில்லை. ஆனால், இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகளை, ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியபோது, அதை நம்பாமல், உடல்களை காட்டுங்கள் என, பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ra ja - singapore,சிங்கப்பூர்
20-மார்-201914:31:59 IST Report Abuse
ra ja சிவகங்கையில் உங்களுக்கு டெபாசிட் கெடைச்சாலே பெரிய விஷயம்தான்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மார்-201911:50:16 IST Report Abuse
Malick Raja ஆடிஅடங்கும் வாழ்கையடா .. ஆடிய ஆட்டமென்ன .. தேடியசெல்வமென்ன .
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
20-மார்-201910:34:18 IST Report Abuse
Bhaskaran சோசியம் பார்த்தாரா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X