அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்னியர்கள் ஓட்டு பா.ம.க.,வுக்கு விழுமா?

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (86)
Advertisement

சென்னை: வட தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள, வன்னியர்களின் ஓட்டுகளை, பாட்டாளி மக்கள் கட்சி தன் வசம் வைத்துள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அன்புமணியின் முரட்டு விமர்சனங்களை பொருட்படுத்தாமல், பா.ம.க.,வுக்கு அதிகப்படியான தொகுதிகளை, அ.தி.மு.க., தந்துள்ளது. ஏழு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா இடம் என்பது, பா.ம.க.,வின் தற்போதுள்ள ஓட்டு வங்கியின் அடிப்படையில் அதிகப்படியான இடங்களே.


கடைசியாக, 2016 சட்டசபை தேர்தலில், 232 இடங்களில் போட்டியிட்ட, பா. ம. க., 2.3 சதவிகிதம் ஓட்டுகளை மட்டுமே பெற்றது. பதிவான ஓட்டுகளில் அது, 5.36 சதவிகிதம் மட்டுமே. தி.மு.க., - அ.தி.மு.க. ஓட்டு வங்கிகளோடு ஒப்பிடுகையில், இது மிக மிக சொற்பம். ஆனால், 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், பா.ம.க.,வின் ஓட்டு வங்கி பெருமளவில் உதவும் என்று நம்பியே, பா.ம.க.,வின் பேரங்களுக்கு பழனிசாமி பணிந்தார். வன்னியர் சங்கத்தின் பலத்தில், பா.ம.க., உருவானது. வன்னியர் சங்கம் என்றாலே, அனைவர் மனதிலும் தோன்றும் உருவம், காடுவெட்டி குரு. கரடு முரடான பேர்வழி, முரட்டு ஆசாமி என்று தோன்றினாலும், வன்னிய இளைஞர்களை பொறுத்தவரை, அவர் ஆதர்ச நாயகன். பா. ம.க.,வின் வெற்றியில், குருவின் பங்கு மகத்தானது.

தி.மு.க., 2006ல், சிறுபான்மை அரசை நடத்தி வந்தது. காங்கிரஸ் ஆதரவு இருந்தாலும், பா.ம.க.,வின் ஆதரவும் முக்கியமாக இருந்தது. ஆனால், ராமதாஸ், தி.மு.க., அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கருணாநிதி, பா.ம.க.,வோடு கூட்டணி முறிந்தது என்பதை அறிவிக்க, காடுவெட்டி குரு ஒரு நிகழ்ச்சியில் பேசியதையே காரணமாக காட்டினார். ஜெயலலிதா ஆட்சியிலும், குரு குறி வைக்கப்பட்டார். மூன்று முறை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குருவை சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. இந்த அடக்குமுறைகள், குருவின் புகழை வன்னிய இளைஞர்களிடம் வளர்த்தது என்பதே நிதர்சனம். பா.ம.க., ஆண்டுதோறும் நடத்தும், சித்திரை திருநாள் நிகழ்ச்சியில், குருவின் பேச்சை கேட்பதற்காகவே, ஆயிரக்கணக்கில் வன்னிய இளைஞர்கள் கூடுவர்.
குருவின் திறமையால், பா.ம.க., வளர்ந்தது. ஆனால், அவரை ராமதாஸ் குடும்பம் புறக்கணித்தது என்றே வன்னிய சமூகத்தினர் கருதுகின்றனர். குரு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், ராமதாஸ் குடும்பம் போதுமான உதவிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை, குருவின் குடும்பம் சுமத்துகிறது. 'பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், அக்கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய குழு அமைத்துள்ளோம்' என்று அறிவித்துள்ளது. பா.ம.க.,வில் இருந்து வெளியேறி, வாழ்வுரிமை கட்சியை நடத்தி வரும் வேல்முருகன், குருவின் குடும்பத்துக்கு ஆதரவாக உள்ளார். வேல்முருகன் பின்னால், கணிசமான வன்னிய இளைஞர்கள் உள்ளனர்.

வன்னிய ஓட்டு வங்கியை பயன்படுத்தி, ராமதாஸ் குடும்பம், தங்களின் செல்வத்தை பெருக்கியுள்ளது என்ற குற்றச்சாட்டும், பரவலாக வன்னிய சமூகத்தின் இடையே நிலவுகிறது. வன்னியர் சங்க அறக்கட்டளையை நிறுவிய ராமதாஸ், உலகெங்கும் உள்ள வன்னியர்களிடம் பிற்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, பல கல்லூரிகளை தொடங்க வாக்குறுதி அளித்து, நிதி வசூல் செய்தார். ஆனால், அந்த அறக்கட்டளை சார்பாக தொடங்கப்பட்ட கல்லுாரிக்கு, 'சரஸ்வதி சட்டக் கல்லுாரி' என்று தன் மனைவி பெயரை வைத்தார் ராமதாஸ்.
ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் கூர்மையான அறிக்கைகள், தி.மு.க., தலைவர்களின் அறிக்கைகளை மிஞ்சும் விதத்தில் இருந்தது. மத்திய அரசையும், மாநில அரசையும், மூத்த ராமதாசும், இளைய ராமதாசும் விடாமல் விளாசி வந்தனர். குறிப்பாக, அன்புமணி, 8 வழி சாலையை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, அது தடை செய்ய பட்டதால், கடும் கோபத்தோடு, முதல்வரையும், துணை முதல்வரையும், 'டயர் நக்கி' என்ற அளவுக்கு விமர்சனம் செய்தார். 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார் மனுவை, கவர்னரிடம் அளித்தார் .

அப்படி, தன்னை தனித்துவம் மிகுந்த அரசியல்வாதியாக சித்தரித்துக் கொண்டு, பதவிக்காக எந்த சமரசத்தையும் செய்யக் கூடிய சராசரி அரசியல்வாதியாக, அம்பலப்பட்டு நிற்கிறார் அன்புமணி. கட்சிகள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது இயல்பு. ஆனால், மாற்றம் என்பது அன்புமணியின் முன்னேற்றத்திற்காக மட்டுமே என்பதே, அவர் மீது இருந்த நம்பிக்கையை குலைத்தது. கடந்த, 30 ஆண்டுகளில் அதிக முறை நிலைப்பாட்டை மாற்றியவர் அவரே.
பா.ம.க.,வை வைத்தே, வட தமிழகத்தில், அனைத்து இடங்களையும் கைப்பற்றலாம் என்ற கனவில் இருக்கும் பழனிசாமி, அக்கட்சியின் தொடர் சரிவையும், இழந்து வரும் மக்கள் ஆதரவையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அ.தி.மு.க., வட தமிழகத்தில் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலே, வெற்றி நிச்சயம். பா.ம.க.,வுக்கு அதிக இடங்களை கொடுத்து, பழனிசாமி, சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் என்றே தோன்றுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-201918:21:41 IST Report Abuse
Kalyanaraman கட்சியின் பெயர் பாமக. இதிலேயே சூசகமாக (பா)சமான (ம)கனுக்கான (க)ட்சி என்று ராமதாஸ் சொல்லிவிட்டார். உங்களுக்குப் புரியவில்லையென்றால் அவரென்ன செய்வார்.
Rate this:
Share this comment
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
20-மார்-201922:57:15 IST Report Abuse
எதிர்க்குரல் அன்பு மணி அதில் மணி என்பதற்கு ஆங்கிலத்தில் பணம் என்று அர்த்தம். குரு மற்றும் வேல்முருகன் இருவரும் உண்மையான வன்னிய மற்றும் தமிழ் தலைவர்கள் ஆனால் சின்ன மற்றும் பெரிய அய்யாக்கள் பணத்திற்கு அடிமைகள். இது வன்னியர்களுக்கு நன்கு தெரியும்....
Rate this:
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
27-மார்-201910:50:06 IST Report Abuse
R.BALAMURUGESANஉண்மை உண்மை இந்த ரெண்டு அய்யா மார்களும் பணம் கொடுத்தால் ஜாதியாவது மண்ணாவது என்று பணத்தை மூட்ட கட்ட ஆரம்பித்து விடுவார்கள்... வன்னியர்களுக்கு இந்த அய்யாமார்களால் எந்தவித உபயோகமும் இல்லை என்று வன்னிய மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்... நம்பாதீர்கள் மக்களே வேலைக்கு ஆக மாட்டார்கள் இந்த அய்யாசாமிகள்......
Rate this:
Share this comment
Cancel
20-மார்-201918:21:38 IST Report Abuse
Kalyanaraman கட்சியின் பெயர் பாமக. இதிலேயே சூசகமாக (பா)சமான (ம)கனுக்கான (க)ட்சி என்று ராமதாஸ் சொல்லிவிட்டார். உங்களுக்குப் புரியவில்லையென்றால் அவரென்ன செய்வார்.
Rate this:
Share this comment
Cancel
20-மார்-201914:52:46 IST Report Abuse
natarajan I WILL VOTE TO ANYBODY AGAINST DMK..........DMK PARTY IS TO BE BURIED.
Rate this:
Share this comment
pazhaniappan - chennai,இந்தியா
20-மார்-201918:22:04 IST Report Abuse
pazhaniappanபாவம் விரக்தியின் வெளிப்பாடு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X