அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பிரசாரத்தை துவக்கினார் ஸ்டாலின்

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (79)
Advertisement

திருவாரூர் : திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூரில் இருந்து தனது லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தை இன்று (மார்ச் 20) துவக்கினார்.


திமுக தலைவர் ஸ்டாலின், தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் இன்று(மார்ச் 20) துவக்கினார். திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து விளக்கு வைத்து மங்களகரமாக பிரசாரத்தை துவக்கிய ஸ்டாலின், வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். திருவாரூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து அவர் ஓட்டு சேகரித்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது சிறுமிகளுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஸ்டாலின், மக்களிடம் கைகுலுக்கி ஓட்டு கேட்டார்.
ஏப்.,6ம் தேதி வரை முதல்கட்ட தேர்தல் பிரசாரம் செய்யும் ஸ்டாலின், ஏப்., 7 முதல் 16ம் தேதி வரை 2ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பிரசாரத்தின் போது 40 லோக்சபா, 18 சட்டசபை தொகுதிகளுக்கு, திமுக கூட்டணிக்கு ஓட்டு சேகரிக்க உள்ளார்.திருவாரூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 உடன் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரும். அப்போது தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலான ஆட்சியும் முடிவுக்கு வரும். ஆட்சி மாற்றம் வரும். 2014 ல் மோடி கூறி பொய்களை நம்பி மக்கள் ஓட்டளித்தனர்.
ஊழல் செய்தவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி வைத்துள்ளது வெட்க கேடானது. திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது. மோடி இரும்பு மனிதர் அல்ல. அடிக்கல் நாட்டுவதால் கல் பிரதமர். ஊழலை பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழக அரசு மீது தெரிவித்த ஊழல் புகாருக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-மார்-201903:13:51 IST Report Abuse
meenakshisundaram துர்க்கா ஸ்டாலின் தன கணவருக்கு விபூதி .குங்குமம் வச்சு அனுப்பி இருப்பார் ,சுடலை அதை கொஞ்ச நேரம் கழிச்சு அழிச்சுட்டுதானே கிளம்பி இருப்பார்?
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
20-மார்-201916:14:20 IST Report Abuse
Krish Sami எப்போதெல்லாம் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்கிறாரோ, நாமும் இங்கே செய்வோம். வாக்காளர்களுக்கு ஒரு ஆலோசனை. பா ஜ க டெல்லியில் வரக்கூடும் என கருத்து கணிப்பு சொல்வதால், கேடு கேட்ட தி மு க பா ஜ க வை தாக்குவதை சிறிது சிறிதாக குறைத்துக்கொள்ளும். நாளை அங்கே அமைச்சர் பதவி பெற்று, குடும்ப நலம் பேணி, ஆட்டம் போடலாமே? எனவே பா ஜ க வேண்டாம் என நினைப்பவர்கள் அ ம மு க வுக்கு போடுவதே அறிவுடைமை. தி மு க வுக்கு போட்டால் உங்களுக்கு நாமம் சாத்தி, நாளை அங்கே உறுதியாக போய்விடுவார்கள். கவனம் கவனம். பா ஜ க பிடிக்காதவர்கள் ஆதரிக்க வேண்டிய ஒரே இயக்கம் அ ம மு க. அதே போல, தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் (சோழம்/காவிரி, ஈழம்) செய்த காங்கிரஸ் வேண்டாம் என்பவர்கள் ஆதரிக்க வேண்டிய ஒரே இயக்கம் அ இ அ தி மு க. அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-மார்-201916:13:44 IST Report Abuse
Natarajan Ramanathan When he started his campaign, we are very much inside the SAME temple praying for the TOTAL DEFEAT of this ANTI HINDU IN ALL THE SEATS.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X