பிரதமருக்கு ஓட்டளித்தால்...: கெஜ்ரி சர்ச்சை

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (55)
Share
Advertisement
புதுடில்லி : பிரதமர் மோடி குறித்து டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள டுவிட்டர் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.நான் நாட்டின் காவலாளி என சமீபத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. இதனையடுத்து டுவிட்டரில் தனது பெயரை காவலாளி நரேந்திர

புதுடில்லி : பிரதமர் மோடி குறித்து டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள டுவிட்டர் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



நான் நாட்டின் காவலாளி என சமீபத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. இதனையடுத்து டுவிட்டரில் தனது பெயரை காவலாளி நரேந்திர மோடி எனவும் மோடி மாற்றினார்.
மோடியை தொடர்ந்து பா.ஜ., தலைவர்களும் தங்கள் பெயருக்கு முன் காவலாளி என சேர்த்து, டுவிட்டரில் பெயர் மாற்றம் செய்தனர். இதற்கிடையில் எதிர்க்கட்சிகளும் இதை வைத்து பிரதமரை கடுமையாக விமர்சித்து வருகின்றன.


latest tamil news


இதில் தற்போது கெஜ்ரிவாலும் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மோடி, ஒட்டுமொத்த நாட்டையும் காவலாளியாக்க விரும்புகிறார். நீங்களும் உங்கள் குழந்தைகளை காவலாளி ஆக்க விரும்பினால் மோடிக்கு ஓட்டளியுங்கள். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க விரும்பினால், அவர்களை டாக்டர்கள், இன்ஜினியர்கள், வழக்கறிஞர்கள் ஆக்க விரும்பினால் நேர்மையான மற்றும் கல்வி அறிவு பெற்ற ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
26-மார்-201916:09:40 IST Report Abuse
Ramamoorthy P பதவியேற்ற போதே நான் பிரதமராக என்னை கருதவில்லை உங்கள் ஊழியனாக காவலனாக என்னை கருதுகிறேன் என்று சொல்லி பாராளுமன்றத்தை வணங்கி பதவியேற்றவர் மோடி .
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
25-மார்-201910:52:05 IST Report Abuse
madhavan rajan ஆக இவர் ஒத்துக்கொள்கிறார் இவர் பதவிக்கு வந்தது டில்லி மக்களின் நலனைக் காக்கும் தலைவனாக அல்ல. அப்படி காக்கும் தலைவனாக இருந்தால் ஐவரும் அவர்களுக்கு காவலாளிதான். இல்லை தன்னுடைய சுயநலத்துக்காக பதவிக்கு வந்திருந்தால் இவர் தன் வீட்டினருக்கு மட்டும்தான் பாதுகாவலாளி. மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது ஒரு தலைவனின் கடமை. அதை செய்வதால் பிரதமர் தன்னை காவலாளி என்று அழைத்துக்கொண்டார். IRS படித்துக்கூட இது புரியவில்லையென்றால் டில்லி முதல்வர் படித்ததே விரயம்தான். அதுபோன்ற புரிதல் இல்லாத கல்வியை மக்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு தர வேண்டியதே இல்லை.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-மார்-201911:33:05 IST Report Abuse
Natarajan Ramanathan Poor fellow.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X