கில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்'

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (83)
Advertisement

புதுடில்லி: இளைஞர்கள் அதிகம் உலாவும் சமூகவலை தளங்களை தனக்கு சாதகமாக பிரதமர் மோடி எப்படி சிறப்பாக பயன்படுத்துகிறார் என் தகவல் வெளியாகி உள்ளது.
மோடிக்காக சமூகவலை தளங்களில் பணியாற்ற 350 தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். இவர்கள் டில்லியிலும் குஜராத்திலும் பணியாற்றுகின்றனர். டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றில் அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவது தான் இவர்கள் பணி. அதுவும், உடனுக்குடன் பதிவுகளை தயார் செய்து சமூகவலை தளங்களில் பதிவேற்றுவதில் இவர்கள் கில்லாடிகள்.


வீடியோ அணி


மோடி மீது அன்பும் அபிமானமும் கொண்டு இவர்களில் 6 பேர் 30 விநாடி ஓடக்கூடிய வீடியோ தயாரிப்பில் நிபுணர்கள். வீடியோ தயாரிப்பு, எடிட்டிங், சவுண்ட், கிராபிக்ஸ் போன்றவற்றில் இவர்கள் புகுந்து விளையாடுவார்கள். ஒரு மணி நேரத்தில் ஒரு வீடியோவை தயாரித்து, தேவை ஏற்பட்டால் மொழி பெயர்த்து பதிவேற்றிவிடுவர்.இவர்களுடன் அடிக்கடி போனில் மோடி பேசுவார். ஏழைகளுக்காக அதிக பதிவுகள் வெளியாக வேண்டும் என மோடி விரும்புகிறார். ‛நான் ஒரு டீக்கடைக்காரன்‛‛, ‛‛சவுகிதார் (காவலன்)'' போன்ற வாசகங்கள் எல்லாம் அப்படி ஏற்பட்டது தான். வீடியோவுக்காக ஒரு நவீன 3டி தொழில்நுட்பத்தையும் ஜப்பானில் இருந்து வரவழைத்துள்ளார் மோடி. டில்லியில் மோடி பேசினால், அந்த வீடியோவை இன்டர்நெட் வழியாக அது 3டி தரத்தில் உடனுக்குடன் அனுப்ப முடியும். லேசர் தொழில்நுட்பத்திலும் மோடியை காண்பிக்க முடியும்.புதுமை


2019 தேர்தலுக்காக நவீன முறையில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் பேசி, அதை பொதுமக்களின் ஸ்மார்ட் போன்களில் காட்டும் ஏற்பாடும் நடக்கிறது. இக்குழுவில் நம்பிக்கைக்குரிய 2 பேர் முக்கிய பங்காற்றுகின்றனர். சமூகவலை தளங்களில் வெளியாகும் பதிவுகள் பற்றி அரை மணிக்கு ஒருமுறை மோடிக்கு தகவல் தருகின்றனர். மோடிக்கு செய்தி, செய்தி, செய்தி மட்டுமே பிடிக்கும். அதற்கேற்ப இந்த நிபுணர்கள் 15 ஆண்டுகள் குஜராத்தில் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். மத்திய அரசின் மக்கள் தொடர்பு துறையை மோடி நம்புவதில்லை. இதனாலேயே அவர் மீடியா ஆலோசகர் என யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. பிரதமர் ஆனதும் குஜராத்தில் இருந்து ஜெகதீஷ் தாக்கர் என்பவரை தனது அலுவலக மீடியா பிரிவுக்கு மோடி கொண்டு வந்தார். கடந்த மாதம் அவர் இறந்து விட்டார். அதன் பிறகு யாரையும் வைத்துக்கொள்ளாமல், மீடியாவை தானே கையாள்கிறார் மோடி.


‛‛தனது இமேஜை தானே உயர்த்திக்கொள்வதில் மோடி திறமையானவர். தான் பேச வேண்டிய உரையை தானே தயாரிக்கிறார். எந்த விஷயத்தை வெளிப்படுத்த வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எங்கு என்ன பேச வேண்டும், யாருக்காக பேசுகிறோம் என்பதில் திறமையாக செயல்படுகிறார் மோடி ''என்கிறார்கள் டில்லி பத்திரிகையாளர்கள்.

Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தெய்வசிகாமணி.S/o மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
22-மார்-201910:49:34 IST Report Abuse
தெய்வசிகாமணி.S/o மாரப்ப கவுண்டர் ராகுல் கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்குகிறார். இளைஞர் , இளைஞர்கள் , குறிப்பாக மாணவிகள் ராகுலால் கவரப்பட்டு அவரை ஆதரிக்கிறார்கள்... அப்புறம் அவர்களும் ஜமாய்க்கலாமே ? யார் தடுத்தது ?
Rate this:
Share this comment
Cancel
தெய்வசிகாமணி.S/o மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
22-மார்-201910:48:00 IST Report Abuse
தெய்வசிகாமணி.S/o மாரப்ப கவுண்டர் இதையே திமுக காரன் செய்த பொது சாமர்த்தியம் என்றும் அரசியல் சாணக்கியன் என்றும் தனக்கு தானே புகழ்ந்து கொண்டவன் டீம்கா காரன். அதற்கு தூபம் போட்டது பத்திரிக்கைகள் ..(இல்லேனா அடிக்கறாய்ங்களே .. அதுவும் ஒரு காரணமாக இருக்கும் ) அப்படி ஜலரா போடாமல் எதிர்த்தால் அந்த பத்திரிக்கையையே விலைக்கு வாங்கி விடுகுறார்கள் டீம்கா முதலாளிகள்.. மோடி தானாக முன் வந்து விரும்பி பணியாற்றும் இளைஞர்களை பயன் படுத்தி கொள்கிறார். யாரையும் அடிபணிய வைக்கவில்லை ..இன்றைய நாளில் படித்த விபரம் அறிந்த இளைஞர்களை அதிகம் கொண்டுள்ளது பாஜக தான் என்பதில் சந்தேகம் இல்லை. கொள்கை உணர்ச்சிபூர்வமான பேச்சுக்கள்,இடதுசாரி எழுத்தாளர்கள் கவிதைகள் மூலம் கம்யூனிஸ்டுகள் இளைஞர்களை ஈர்த்து வந்த காலம் மலையேறி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - CHENNAI,இந்தியா
21-மார்-201909:31:38 IST Report Abuse
Siva Kumar இப்படியே தமிழன் தமிழன் என்று பேசி தமிழனத்தை உருப்படாதவன மாத்த திராவிட திமுக கூட்டணி முயற்சி செய்து கொண்டே இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X