பதிவு செய்த நாள் :
உ.பி.,யில் பா.ஜ., மீண்டும் ஜொலிக்குமா?

நாட்டில் மிக அதிக மாக, 80 லோக்சபா தொகுதிகளை கொண்டுள்ள உ.பி.,யில், கடந்த தேர்தலில், பா.ஜ., 71 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அது போன்ற வெற்றியை, தற்போதைய தேர்தலில் மீண்டும் பெறுவது, பா.ஜ.,வுக்கு சிரமமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.இங்கு, முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஏப்., 11ல் துவங்கி, மே 19 வரை, ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது.

 உ.பி.,யில் ,பா.ஜ., மீண்டும், ஜொலிக்குமா?


செல்வாக்கு
உ.பி., மாநிலம், நிர்வாக வசதிக்காக, மேற்கு உ.பி., மற்றும் கிழக்கு உ.பி., என பிரிக்கப்படு கிறது. தவிர, பண்டல்கண்ட், அவாதி பகுதி களை சேர்த்து, உ.பி.,யை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்,இந்த நான்கு பகுதிகளிலும், ஜாதி அடிப்படையில் கணக்கிட்டு வேட்பாளர்களை, கட்சிகள் தேர்வு செய்வது வழக்கம்.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை, பா.ஜ., மீண்டும் பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதாக, அரசியல் நோக்கர்கள்கருதுகின்றனர்.

கடந்த, 2014 தேர்தலின் போது, மத்தியில் இருந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக, மிகப் பெரிய அதிருப்தி அலை வீசியது. மாநிலத்தில் இருந்த, அப்போதைய முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ் வாதி கட்சி மீதும், மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த சூழலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக நிறுத்திய நரேந்திர மோடிக்கு இருந்த செல் வாக்கு, உ.பி.,யில், பெரும்பாலான தொகுதி களை அள்ள, பா.ஜ.,வுக்கு உதவியாக இருந்தது. இம்முறை, பா.ஜ.,வுக்கும், மோடிக்கும் எதிரான அம்சங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அமல் படுத் திய பின், 2017ல் நடந்த, சட்டசபைத் தேர்தலில், மூன்றில் இரு பங்கு ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றதை, தமக்கு சாதகமாக, பா.ஜ.,வினர் கூறிக் கொள்கின்றனர்.ஆனால், மத்திய, மாநில அரசுகள் மீது, மக்களிடம் காணப்படும்

அதிருப்தியை யாரும் மறுக்க முடியாது.உ.பி., யில் 7கட்ட தேர்தல் நடத்துவது, பா.ஜ.,விற்கு சாதகமான அம்சம்.

கூட்டணி முக்கியம்
இதனால், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சி களின் கூட்டணியால் ஏற்படும் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும். இங்கு, இரு மாதங்கள் தொடர்ந்து பிரசாரங்களில் ஈடுபடுவது, அனைத்து கட்சிகளுக்கும் சிரமமாகவே இருக்கும்.இதற்குத் தேவையான தொண்டர்கள் பலம், பணபலம் உள்ள கட்சிகள் மட்டுமே, வெற்றிகளைகுவிக்க முடியும்.

அந்த வகையில், பா.ஜ.,வை தவிர, பிற கட்சிகள், குறைந்தளவு பணபலமே பெற்றுள்ளன.உ.பி.,யை பொறுத்தவரை, கூட்டணி மிக முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இங்கு, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் - ராஷ்ட்ரீய லோக்தளம் அமைத்துள்ள கூட்டணியால், பா.ஜ.,வுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. குறைந்தளவு ஓட்டு வங்கியை வைத்திருப்பதால், காங்.,க்கு அதிக பாதிப்பு இருக்காது. காங்., வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியும், அதற்கு லாபமாகவே கருதப்படும்.

சமாஜ்வாதி, 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ், 38 இடங்களிலும், ராஷ்ட்ரீய லோக்தளம், மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றன.இந்த தொகுதியில் மட்டும், 2014ல் கிடைத்த ஓட்டுகள் அடிப்படையில் கணக்கிட்டால், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய லோக்தளம் கூட்டணி வேட்பாளர், 63 சதவீத ஓட்டுகளை பெறுவார் என தெரிகிறது.உ.பி., லோக்சபா தொகுதிகளில், அசம்கர், கோஸி, சீதாபூர் உட்பட, 10ல், முஸ்லிம், யாதவர், தலித்துகள் சேர்ந்து, 60 சதவீதத்துக்குஅதிகமாக உள்ளனர்.

முடிவு
உ.பி.,யில், பிரதான வேட்பாளர்கள் போட்டி யிடக் கூடிய, அமேதி, ரேபரேலி, மைன்புரி உள்ளிட்ட, 37 லோக்சபா தொகுதிகளில், முஸ்லிம், யாதவர், தலித்து ஓட்டுகள், 50 - 60 சதவீதம் இருக்கும் என, கூறப்படுகிறது.பிரதமர், நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி உட்பட, மேலும், 33 லோக்சபா தொகுதிகளில், முஸ்லிம், யாதவர், தலித்து ஓட்டுகள், 40 - 50 சதவீதம் என கணக்கீடுகள்தெரிவிக்கின்றன.

கடந்த லோக்சபா தேர்தலில், குறிப்பிடத்தக்க இடங் களை கைப்பற்றாத போதும்,பகுஜன் சமாஜ் கட்சிக்கு, 20 சதவீத ஓட்டு களும், சமாஜ்வாதிக்கு, 22.5 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.இந்த இரு கட்சிகள் பெற்ற மொத்த ஓட்டுகள், தேசிய ஜனநாயக கூட்டணி

Advertisement

பெற்ற ஓட்டு களுக்கு நிகரானவை. இதனால் தான்,இந்த கட்சிகள், பா.ஜ.,வுக்கு எதிராக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தன.

காங்.,கை பொறுத்தவரை, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பெற்ற வெற்றி, அந்த கட்சியினருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. மேலும், உ.பி., கிழக்கு பகுதி பொதுச் செயலராக, பிரியங்கா நியமிக்கப் பட்டது, கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

உ.பி.,யில், தலித் சமூகத்தை சேர்ந்த கட்சி யான, பீம் ஆர்மியின் தலைவர், சந்திரசேகர் ஆசாத்தை, பிரியங்கா சந்தித்து பேசியது, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சற்று கவலையடையச் செய்துள்ளது.பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி - ராஷ்ட்ரீய லோக்தளம் கூட்டணி யில், காங்.,கை சேர்த்திருந்தால், பா.ஜ., படு தோல்வியை சந்திக்க நேர்ந்திருக்கும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முஸ்லிம்கள், 19 சதவீதம்உ.பி.,யில் உள்ள, 80 தொகுதிகளில், 47ல், முஸ்லிம்கள், யாதவர் கள், தலித்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள், மொத்த ஓட்டுகளில், 50 சதவீதத் துக்கு மேல் உள்ளனர். இம்மாநிலத்தில், 2011ல் எடுத்த மக்கள் தொகை கணக்குப்படி, முஸ்லிம்கள், 19 சதவீதம்; தலித்துகள், 21 சதவீதம். பிற சமூகத்தினர் பற்றிய விகிதம் தெரியவில்லை. இருப்பினும், யாதவர்கள், 10 சதவீதம் இருக்கலாம் என, கூறப்படுகிறது.

சாதனை நாயகன்
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அசம்கர் தொகுதியில் போட்டியிட்ட, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், 3.4 லட்சம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இது, பதி வான ஓட்டுகளில், 35.4 சதவீதம். இரண்டா மிடம் பிடித்த, பா.ஜ., வேட்பாளர், 27.75 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற முடிந்தது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-மார்-201921:32:44 IST Report Abuse

SIVA. THIYAGARAJANநல்லவர்கள் ஊழலை ஒழிக்கனும் என எண்ணம் கொண்டவரக்ள அனைவரும் பா.ஜ,க .வை ஆதரிப்பர் சந்தேகமே இல்லை .ஆண்ட ஊழல் பெருச்சாளிகள் மீள ஆள துடியாய் துடிக்கின்றன. குடும்ப வாரிசுகள் இனி ஆள இடம் தரக்கூடாதுங்க. கோடான கோடி சொத்துக்களை சேர்த்தவிட்டனர்.பல தலை முறைகளுக்கு போதும்.

Rate this:
Ubaidullah Razzaq - al khobar,சவுதி அரேபியா
21-மார்-201910:42:31 IST Report Abuse

Ubaidullah Razzaqஉத்தர பிரதேசத்தில் பலமுனை போட்டி நிலவுவதால் யார் வருவார் என்பதாகி யூகிக்க முடியவில்லை

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201909:32:02 IST Report Abuse

Srinivasan Kannaiyaவெறும் கையால் முழம் போட்டால் ஜொலிக்கமுடியுமா

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X