பதிவு செய்த நாள் :
விண்ணை முட்டும் பிரசாரம்!
ஹெலிகாப்டர், விமானங்கள், 'ஹவுஸ்புல்'

ஒரே நாளில், அதிக இடங்களில் பிரசாரம் செய்வதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் நம்புவது, சிறிய ரக விமானங்கள், ஹெலி காப்டர் போன்ற உலோகப் பறவைகளையே! ஆனால், நாட்டில், வாடகைக்கு கிடைக்கும் ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், இதற்கான முன்பதிவு, ஏற்கனவே முடிந்துவிட்டது. இதனால், வாடகை ஹெலிகாப்டர் நிறுவனங்கள், 'ஹவுஸ்புல்' போர்டு வைத்து விட்டன.தேவை அதிகம்


தேர்தல் சமயத்தில், அரசியல் கட்சித் தலைவர் கள், சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்வ தற்கு, சாலை, ரயில் மார்க்கத்தை விட, ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமானங் களையே அதிகம் நம்புகின்றனர். இவ்வாறு பிரசாரம் செய்வதற்காக, தமிழக முதல்வராக இருந்த, மறைந்த ஜெயலலிதா, தனியாக ஹெலிகாப்டர் வாங்கியது நினைவிருக்கலாம்.
ஒரு மாநிலத்துக்குள் பயணிப்பதற்கே, ஹெலிகாப்டர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது, லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், நாடு முழுவதும் பயணிப்பதற்கு, 'உலோகப் பறவைகளின்' தேவை மிகவும் அதிகமாக உள்ளது.பொது பயன்பாட்டுக்கான ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதற்கு, ஆர்.டபிள்யூ.எஸ்.ஐ., எனப்படும், இந்திய ரோட்டரி விங்க் சொசைட்டி என்ற அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.


இந்த அமைப்பின் கணக்கின்படி, நாடு முழுவதும், 275 ஹெலிகாப்டர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மத்திய - மாநில அரசுகள், மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் களும் இதில் அடங்கும். அதன்படி, தனியார் வாடகை ஹெலி காப்டர்கள் நிறுவனங்களிடம், 75 ஹெலிகாப்டர்கள் மட்டுமே உள்ளன.

இவற்றையே, நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதி கள்,தேர்தலின்போது பயன்படுத்த உள்ளனர்.ஒரு மணி நேரத்தில், 300 - 400 கி.மீ.,யை அடையக்கூடிய, 2,000 - 3,000 அடி உயரம் வரை பறக்கக் கூடிய ஹெலிகாப்டர்களையே, அரசியல்வாதிகள் அதிகம் விரும்புகின்றனர்.
இரட்டை இன்ஜின்


பிரதமர் மட்டுமே, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியும். அதனால், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் என, பலரும், தனியார் வாடகை ஹெலிகாப்டர்களையே பயன்படுத்துகின்றனர்.ஆனால், நம் நாட்டில், தனியார் வாடகை ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஒற்றை இன்ஜின் உள்ள ஹெலிகாப்டர்களை, பாதுகாப்பு கருதி பயன்படுத்த தடை உள்ளது.

அதனால், இரட்டை இன்ஜின் உள்ள ஹெலிகாப்டர் களே வாடகைக்கு கிடைக்கின்றன. அவற்றிற்கு கிராக்கி, அதிகம் உள்ளது. ஹெலிகாப்டர்களைத் தவிர, சொகுசு வசதிகளுடன் கூடிய, குறைந்த

Advertisement

அளவினர் பயணிக்கும் சிறிய ரக விமானங் களுக்கும், கட்சித் தலைவர்களிடையே மவுசு உள்ளது; ஆனால்,செலவு கொஞ்சம் அதிகம்.

முன்பதிவு

காங்கிரஸ் தலைவர், ராகுல், பா.ஜ., தலைவர், அமித் ஷா ஆகியோர், பாதுகாப்பு கருதி, இது போன்ற விமானங்களையோ, ஹெலிகாப்டர் களையோ, நீண்ட துார பயணத்துக்கு பயன்படுத்த முடியாது. தனியார் விமான நிறுவனங்களின் விமானத்தில், குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று, அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் செல்வர். தற்போதைய நிலையில், மே மாத இறுதி வரை, அனைத்து ஹெலிகாப்டர்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

எங்கிருந்து வந்தது

இதில், 50 சதவீதம், பா.ஜ., பதிவு செய்துள்ளது. பெரும்பாலான கட்சிகள், 45 - 60 நாட்களுக்கு முன்பதிவு செய்து உள்ளன. அரசியல் தலைவர் களை சுமந்து, வானத்தில் வலம் வரும் உலோகப் பறவைகளை அண்ணாந்து பார்த்து, ஆச்சரியப்பட தான் முடியும். அவற்றை வாடகைக்கு பெற, கட்சிகளுக்கு பணம் எங்கு இருந்து வந்தது என்பதை, கேட்க தான் முடியாதே!
செலவு எவ்வளவு?


விமானத்தின் வகையைப் பொருத்து, அவற்றின் வாடகைச் செலவு நிர்ணயிக்கப் படுகிறது. சராசரியாக, ஒரு மணி நேரத்துக்கு, ஹெலிகாப்டர் வாடகை, 75 ஆயிரத்திலிருந்து, 3.50 லட்ச ரூபாய் வரை உள்ளது.ஒரு நாளில், குறைந்தபட்சம், 3 மணி நேரம் வாடகைக்கு எடுக்க வேண்டும். பயன்படுத்தாவிட்டாலும், கட்டணம் செலுத்த வேண்டும்.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201909:34:56 IST Report Abuse

Srinivasan Kannaiyaஒன்று மட்டும் தெரிகிறது மக்களுக்கு சேவை செய்த எந்த கட்சியும் பிரச்சாரம் சேய்யவேண்டிய தேவை இல்லை... ஆனால் இங்கேதான் எல்லா அரசியல்வாதியும் தனுக்குதானே சேவை செய்து கொண்டு உள்ளார்கள்..

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201909:23:44 IST Report Abuse

Srinivasan Kannaiyaசோழியன் சிண்டு சும்மாவா ஆடும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201909:23:24 IST Report Abuse

Srinivasan Kannaiyaஐந்து ஆண்டுகள் தொடர்ந்து சம்பாரிக்க ஐம்பது நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X