பதிவு செய்த நாள் :
பின்னணியில் நிதின் கட்கரி:
கோவாவில் பா.ஜ, அரசு வெற்றி

பனாஜி: கோவா மாநிலத்தில், பா.ஜ., ஆட்சியை தக்க வைத்ததன் பின்னணியில், அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான, நிதின் கட்கரிஇருந்ததாக தெரிய வந்துள்ளது. கோவா சட்டசபையில், மனோகர்பரீக்கரின் இடத்தையும் சேர்த்து, தற்போது நான்கு இடங்கள் காலியாக உள்ளன. மீதம், 36 இடங்கள் தான் மொத்தமே உள்ளன. இதில், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமெனில், 19 இடங்கள், பா.ஜ.,வுக்கு தேவைப்பட்டன.
நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், 20 எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு ஆதரவாக ஓட்டுபோட்டதை அடுத்து, பா.ஜ., தன் ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில், கோவாவில் இரண்டு நாட்கள் நடந்த, கச்சிதமான அரசியல் நகர்வுகளின் பின்னணியில், மத்திய அமைச்சர், நிதின் கட்கரியே முக்கிய பங்கு வகித்தார்.
லோக்சபா தேர்தலுக்காக, மூத்த தலைவர்கள் அனைவருமே, தீவிர தேர்தல் பணியில் இருந்தபோது, மனோகர் பரீக்கர் காலமானதை

அடுத்து, நிலைமையை சமாளிக்கும் பொறுப்பு, கட்கரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பக்கத்து கடற்கரை மாநிலமான, மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால், கோவா அரசியலின் நெளிவு சுளிவுகள், நிதின் கட்கரிக்கு அத்துபடி. மேலும், இது போன்ற கூட்டல், கழித்தல் வேலைகளில், தற்போதுள்ள, பா.ஜ., தலைவர்களிலேயே, ஜெட்லியும், கட்கரியும் தான் திறமையானவர்கள்.

தன்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதுமே, காங்கிரஸ் தலைவர்கள் அணுகுவதற்கு முன், கூட்டணி கட்சி தலைவர்களை வளைத்து, அவர்களுக்கு வேண்டிய கோரிக்கைகள் என்ன என்பதை, உடனடியாக செய்து கொடுத்து விட்டார்.

'முதல்வர் பதவிக்கு பிரமோத் சாவந்த் தான் பொருத்தமாக இருப்பார்' என்ற யோசனையையும், கட்கரியே முன்வைத்தார். இந்த வெற்றிக்கு, கடைசி நேரத் திருப்பமாகவும், மிக முக்கிய காரணமாகவும் சுட்டிக் காட்டப்படும், துணை முதல்வர் பதவிகள்யோசனையும், கட்கரி உடையது தான்.

கூட்டணி கட்சிகளின் நோக்கம், இது தான் என்பதை அறிந்து, துணை முதல்வர் பதவி என்ற வியூகத்தை வைத்து, கோவாவில், பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி, அழகு பார்த்துள்ளார், கட்கரி. சட்டசபையில், தனிப்பெரும் கட்சியாக இருந்தும், இரண்டாவது முறையாக, காங்கிரசை, பரிதாபமாக மண்ணையும் கவ்வ வைத்து விட்டார் கட்கரி.

2-வது முறையாக மண்ணை கவ்வியது காங்.,



கோவா சட்டசபையில் நடந்த நம்பிக்கை

Advertisement

ஓட்டெடுப்பில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

கோவா சட்டசபைக்கு, 2017ல் நடந்த தேர்தலில், எந்தகட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. எம்.ஜி.பி., எனப்படும், மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி, ஜி.எப்.பி., எனப்படும், கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன், பா.ஜ., ஆட்சி அமைத்தது. முதல்வராக, மனோகர் பரீக்கர் பதவியேற்றார்.கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட பரீக்கர், சமீபத்தில் காலமானார். இதையடுத்து, மாநிலத்தில், அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

சட்டசபையில், தனிப்பெரும் கட்சியாக உள்ள, காங்., ஆட்சியமைக்க உரிமை கோரியது.ஆட்சி கவிழாமல் தடுக்க, பா.ஜ., தீவிரமாக முயற்சித்தது. பல மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டசபை தலைவராக, அப்போது சபாநாயகராக இருந்த, பா.ஜ.,வை சேர்ந்த, பிரமோத் சாவந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணி கட்சிகளான, எம்.ஜி.பி., - ஜி.எப்.பி., ஆகியவற்றுக்கு, தலா ஒரு துணை முதல்வர் பதவி வழங்கவும், முடிவு செய்யப்ட்டது.

இதைத்தொடர்ந்து, முதல்வராக சாவந்த், நேற்று முன்தினம் பதவியேற்றார். துணை முதல்வர் களாக, எம்.ஜி.பி.,யின் சுதின் தவாலிகர், ஜி.எப்.பி.,யின் விஜய் சர்தேசாய் பதவியேற்றனர். ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர். சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபிக்க, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, கவர்னர் மிருதுளா சின்ஹாவுக்கு, பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற கவர்னர்,சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.

பனாஜியில் நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத் தில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அரசுக்கு ஆதரவாக, 20 பேரும், எதிராக, 15 பேரும் ஓட்டளித்தனர்.பா.ஜ.,வின், 11 எம்.எல்.ஏ.,க்கள், எம்.ஜி.பி., - ஜி.எப்.பி., ஆகியவற்றின் தலா, மூன்று, எம்.எல்.ஏ.,க்கள், சுயேச்சைகள் மூவர், அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.அரசுக்கு எதிராக, காங்கிரசின், 14 எம்.எல்.ஏ.,க்களும், தேசியவாத காங்கிரசின் ஒரு, எம்.எல்.ஏ.,வும் ஓட்டளித்தனர். இதையடுத்து, சாவந்த் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு, வெற்றி பெற்றது.
- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-மார்-201921:49:50 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக ஆட்சி அமைச்சு, என்னாச்சு? இன்னிக்கி அஞ்சாம் நாள்.

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
21-மார்-201910:24:10 IST Report Abuse

சுந்தரம் காங்கிரஸ் தோற்றால் மண்ணை கவ்வியது. பாஜக தோற்றால் காங்கிரஸ் வென்றது

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
21-மார்-201917:14:41 IST Report Abuse

சுந்தரம் காங்கிரஸ் தோற்றால் மண்ணை கவ்வியது. பாஜக தோற்றால் காங்கிரஸ் வென்றது என்று எழுதவேண்டும். ...

Rate this:
Suri - Chennai,இந்தியா
21-மார்-201909:41:50 IST Report Abuse

Suri😂😂😂😂

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X