பதிவு செய்த நாள் :
வேலைவாய்ப்பு வாக்குறுதி என்னாச்சு?
பிரதமருக்கு காங்., தலைவர் ராகுல் கேள்வி

இம்பால்: ''ஆண்டுக்கு, இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என கூறினீர்களே, அந்த வாக்குறுதி என்னவாயியிற்று,'' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர்ராகுல், கேள்வி எழுப்பி உள்ளார்.

முட்டாள்தனமானது


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர், பிரேன் சிங் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, லோக்சபா தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து உள்ளது. இம்பாலில் நேற்று நடந்த, காங்., தேர்தல் பிரசார பொது கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ராகுல் பேசியதாவது: கடந்த

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவ தாக,பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், 2018ல் மட்டும், ஒரு கோடி வேலை வாய்ப்புகளை, மோடி அழித்திருக்கிறார்; இது, அவரது நிர்வாக திறமையின்மையால் ஏற்பட்ட அவலநிலை.

இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவ தாக, மோடி கூறியது, அபத்தானமானது; முட்டாள் தனமானது. இதன் மூலம், தான்ஒரு, 'ஜோக்கர்' என, பிரதமர் நிரூபித்து விட்டார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதறடித்தார்.

அனுமதிக்க மாட்டோம்:


மணிப்பூருக்கு எப்போதெல்லாம் பிரதமர் மோடி வருகிறாரோ, அப்போதெல்லாம் மக்களின் கலாசாரம், வரலாற்றை காயப்படுத்துகிறார். பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா, 'குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படும்' என்கிறார். இவர்கள், வடகிழக்கு மாநிலங்களின்

Advertisement

கலாசாரத்தை அழிக்கக் கூடியவர்கள். அந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர்பேசினார்.

பிரபலப்படுத்தும் அமைச்சர் அலுவலகம்


மணிப்பூர் தலைநகர் இம்பாலில், மாநில திரைப்பட கல்லுாரி மாணவர்களுடன், ராகுல் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசிய தாவது:பிரதமர் மோடி, குறுக்கு வழியில், ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தி, பணமதிப் பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தினார். விளம்பரத்திற்காகவே, அவர் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்.

டில்லியில் உள்ள அவரது அலுவலகம், பிரதமர் அலுவலகமாக இல்லாமல், பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக உள்ளது. பிரதமரின் பல்கலை சான்றிதழை, இதுவரை எங்களால் பெற முடியவில்லை. பிரதமர் உண்மையிலேயே, கல்லுாரி அல்லது பல்கலைக்கு போய் உள்ளாரா என்பது, யாருக்கும் தெரியாது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமரின் பல்கலை சான்றிதழ் பற்றி கேட்டதற்கு, இதுவரை எந்த பதிலும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
21-மார்-201920:47:13 IST Report Abuse

adithyanசட்டி பானை செய்பவர்களிடம் நிறைய உண்டாக்க கொடுப்பார் ராகுல்.பின்னர் எல்லாருக்கும் ஒரு கலயம் வழங்கப்படும்.

Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
21-மார்-201916:32:26 IST Report Abuse

Dr.C.S.Rangarajanமோடி படித்ததோ, படித்து பட்டங்கள் வாங்கியதோ எந்த வகையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு, அவரின் படிப்பும்,பட்டங்களும் படிக்கற்களாகக்கூடும்.அவர் படிக்காத, பட்டம் வாங்காத குறைகள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைகற்கலாயினவா? மெத்தபடித்ததும், படிப்பில்லாமையும் அவர் ஒரு இருபது ஆண்டுகள் மாநில முதல்வராகவும், இந்திய பிரதமராகவும் இருந்தமைக்கு தடையாக இல்லையே. ராகுல் காந்தி படித்ததாக கருதினால், அவரின் படிப்பு, எந்த ஒரு ஆளுமையையும் அவரொரு தொழிலிலோ உற்பத்தியை பேருக்கும் வகையில் பணியாற்றியதாக வரலாறு குறிப்புகள் இல்லையே?'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை' என்ற தத்துவப்பாடல், அர்த்தங்கள் ஆயிரம் புதைந்ததென்றாலும், 'இதனை, இதனால்,இவன் முடிக்கும் என்றாராய்ந்து அதனை அவன் கண் விடல் ' என்ற வள்ளுவனாரின் கூற்றினை ஒத்தவகையில்,மோடியின் செயல்பாடுகள் தமிழ்நாடு தவிர உலகமெங்கும் போற்றுதலுக்கு உரித்தாயினவே.

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
21-மார்-201914:56:12 IST Report Abuse

sahayadhasஅதனால் தான் நான் காவலாளியாக மாறிவிட்டேன்.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X