அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'உள்குத்து!,'அதிருப்தி, கோஷ்டிகளால், வேட்பாளர்களுக்கு,சிக்கல்

அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியில், வேட்பாளர்கள் அறிவித்த நிலையில், 'சீட்' கிடைக்காதவர்களும், வேட்பாளர்களை பிடிக்காத நிர்வாகிகளும், உள்குத்து வேலைக்கு தயாராகி வருகின்றனர். ஆங்காங்கே முளைக்கும் அதிருப்தி கோஷ்டிகளால், வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, வாரிசு வேட்பாளர்களை வீழ்த்த, ரகசிய வியூகம் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை, எப்படி சமாளிப்பது என தெரியாமல், இரு கட்சிகளின் தலைமைகள் தவித்து வருகின்றன.லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் துவங்கி விட்டது. தேர்தலுக்கு, ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள், அதிவேகமாக தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன.தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. பல சிறிய கட்சிகள், தனித்து போட்டியிட்ட போதிலும், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி இடையே தான், நேரடி போட்டி உருவாகி உள்ளது.
அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தை துவக்கி உள்ளன. கூட்டணிக்கு தலைமை தாங்கும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தலா, 20 தொகுதிகளில் களம் இறங்குகின்றன.இரு கட்சிகளிலும், வாரிசுகளுக்கு சீட் வழங்கப் பட்டது, கட்சியினரிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன், ரவீந்திரநாத்; அமைச்சர் ஜெயகுமார் மகன், ஜெயவர்தன்; எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா மகன், ராஜ்சத்யன் ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.இது, அ.தி.மு.க.,வில் பலரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பன்னீர்செல்வம், தனி அணியாக இருந்தபோது, அவருடன் இருந்த பலர், 'சீட்' கிடைக்காததால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்கண்டேயன், 'சீட்' கிடைக்காததால்,

விளாத்திகுளம் சட்டசபை இடைத்தேர்தலில், தனித்து போட்டியிடுவதாகஅறிவித்துள்ளார்.
ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயனும், கட்சி தலைமை மீதான கோபத்தில், கட்சி ஆபீஸ் பக்கமே வராமல் ஒதுங்கி இருக்கிறார். தனது அதிருப்தியை, முகநுால் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். 'என் கால்களில் சற்று வலி ஏற்படும்போது, நான் சிறிது இளைப்பாறுகிறேன். நான் இளைப்பாறுவது, ஓய்வெடுப்பதற்குத் தானே ஒழிய, ஓய்ந்து போவதற்கு அல்ல... காத்திருக்கும் வரை, நம் பெயர், காற்று என்றே இருக்கட்டும்; புறப்பட்டுவிட்டால் புயலென புரிய வைப்போம். கவிஞர் மேத்தா எழுதிய, பொருள் பொதிந்த, யதார்த்தமான வரிகள்' என, குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில், ராஜன் செல்லப்பா மகனுக்கு, 'சீட்' வழங்கப்பட்டது, அமைச்சர்கள் உதயகுமார், ராஜு ஆகியோரிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும், அதிருப்தி அடைந்தவர்கள், உள்ளடி வேலை பார்க்கும் அபாயம் உருவாகி உள்ளது. திருவண்ணாமலை தொகுதியில், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்ட, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, உள்ளூர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற நிலை, பல தொகுதிகளில் காணப்படுகிறது.
அதே நிலை, தி.மு.க., விலும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வில், கருணாநிதி மகள், கனிமொழி, துரைமுருகன் மகன், கதிர்ஆனந்த், முன்னாள்அமைச்சர் வீராசாமி மகன், கலாநிதி, மறைந்த மத்திய அமைச்சர் மாறன் மகன்,

தயாநிதி, முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன், கவுதமசிகாமணி ஆகியோருக்கு, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.இவர்களுக்கும், கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
'பொன்முடி தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட செயலராக இருந்து வரும் நிலையில், அவரது மகனுக்கு, சீட் வழங்கக் கூடாது' என, அம்மாவட்ட நிர்வாகிகள், தி.மு.க., தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதையும் மீறி, அவருக்கு சீட் வழங்கப்பட்டிருப்பது, கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.அதேபோல், மற்ற வாரிசுகளுக்கு எதிராகவும், கட்சியில் புகைச்சல் கிளம்பியுள்ளது.
'ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, நாங்கள் சேவகம் புரிய வேண்டுமா' என, குரல் எழுப்பி உள்ளனர். வாரிசுகள் வெற்றி பெற்றால், மீண்டும், அந்த குடும்பத்தின் ஆதிக்கமே ஓங்கும் என்பதால், அவர்களை வீழ்த்த, எதிர் தரப்பினர் வியூகம் அமைத்து வருகின்றனர். இரு கட்சிகளிலும், உள்குத்து வேலை பார்க்க, பலரும் தயாராகி வரும் நிலையில், அவர்களை பணத்தால் சரி செய்யும் பணியில், வாரிசுகளின் தந்தைகள் களம் இறங்கி உள்ளனர்.
இதற்கிடையில், இதுபோன்ற அதிருப்தியாளர்களை இழுக்க, மாற்று கட்சிகள் வலை விரித்து உள்ளதால், வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற கலக்கத்தில், வாரிசுகள்உள்ளனர்.
வாரிசுகள், 13; விசுவாசிகள், 2!
கருணா1நிதி மகள், கனிமொழி, இதுவரை, ராஜ்யசபா, எம்.பி.,யாக மட்டுமே தேர்வு செய்யப் பட்டு வந்தார். முதல்

முறையாக, மக்களை நேரில் சந்திக்கும், லோக்சபா தேர்தல் வேட்பாளராகி உள்ளார்.திருவிடைமருதுார் தொகுதியில், நான்கு முறை, எம்.எல்.ஏ.,வாக இருந்த, ராமலிங்கம், மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராகி உள்ளார்.

முன்னாள், எம்.எல்.ஏ., - டி.என்.வடிவேல் கவுண்டரின் பேரன், செந்தில்குமார், தர்மபுரியிலும், ராஜபாளையம் முன்னாள், எம்.எல்.ஏ., தனுஷ்கோடி மகன், குமார், தென்காசியிலும் களமிறங்குகின்றனர். இப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே, மீண்டும் பதவி பெறும் வகையில், 13 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
இதை தவிர, சொந்த தொழில் செய்பவர்களும், களமிறக்கப்பட்டு உள்ளனர். பொள்ளாச்சி வேட்பாளர் சண்முகசுந்தரம், திருப்பூரில், பின்னலாடை நிறுவனம் நடத்தி வருபவர். கடலுார் வேட்பாளர், டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், முந்திரி நிறுவன அதிபர். திருவண்ணாமலையில், கட்டுமான தொழில் அதிபரும், முன்னாள் அமைச்சர், எ.வ.வேலுவின் ஆதரவாளருமான, அண்ணாதுரை நிறுத்தப்பட்டு உள்ளார்.
சேலம் தொகுதி வேட்பாளராகியுள்ள, எஸ்.ஆர்.பார்த்திபன், தே.மு.தி.க.,வில் இருந்து வந்தவர். அக்கட்சி சார்பில், 2011ல், மேட்டூர், எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்.இதற்கிடையில், விசுவாசிகள் சிலருக்கும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. உதாரணமாக, காஞ்சிபுரம் வேட்பாளர், வழக்கறிஞர், ஜி.செல்வம், 1996 முதல், முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்தவர். திண்டுக்கல் வேட்பாளர் வேலுச்சாமி, கட்சியின் நீண்ட நாள் விசுவாசி. சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
மொத்தத்தில், குடும்ப வாரிசுகள் அடிப்படையில், 13 பேர்; தொழில் அதிபர்கள், மூன்று பேர்; பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களில், இரண்டு பேர்; கட்சி விசுவாசிகள், இரண்டு பேர் என, தி.மு.க.,வில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (29+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divahar - tirunelveli,இந்தியா
21-மார்-201914:33:57 IST Report Abuse

Divaharதேர்தலால் நாட்டில் சரக்கு விற்பனை அதிகமாக இருக்கும்

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
21-மார்-201914:16:57 IST Report Abuse

சந்தோசு கோபு'திமுகவின் மூத்த தலைவர்' உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. வாரிசுகள் என்பதால் மட்டுமில்ல, திறமையானவர்கள் என்பதாலும் தான் அவர்கள் வேட்பாளர்களாக்கப் பட்டிருக்காங்கனு சொல்றார்.. 20 வேட்பாளர்கள்ல 6 பேர் வாரிசுகள்.. அப்போ 'திமுகவின் மூத்த தலைவர்' உதயநிதியின் கூற்றுப்படி, திமுகவில் இருக்கும் அடிமட்ட தொண்டர்களை விட பதவியிலிருக்கும் நிர்வாகிகளின் வாரிசுகள் தான் அதிகத் திறமையானவர்கள் என்று அர்த்தமாகிறது.. இதை விட கேவலமா ஒரு கட்சியின் தொண்டர்களை யாரும் கேவலப்படுத்த முடியாது..

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
21-மார்-201914:16:27 IST Report Abuse

சந்தோசு கோபுவாரிசுகளுக்கு எதிராக அடிமட்டத் தொண்டர்கள் கிளர்ந்தெழுவது என்பது நல்ல விஷயம்.. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.. வாரிசு அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.. அதிமுகவினர் வாரிசுகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது, பொசுக்கென்று போய்விடும் வாய்ப்பு அதிகம்.. காசு கைக்கு வந்தா சைலண்டா ஆயிடுவானுங்க.. அவனுங்க அடிமைத்தனம் அப்பேர்ப்பட்டது.. ஆனால் திமுக தொண்டர்கள் அடிமைகள் அல்ல.. நிச்சயம் வாரிசு அரசியலை எதிர்ப்பார்கள்.. அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரையே இன்று வரை பெரும்பாலான திமுக தொண்டர்கள் மனதளவிலும் ஏற்று கொள்ளவில்லை... திமுக தொண்டர்கள் ஏற்று கொண்ட ஒரே வாரிசு ஸ்டாலின் அவரகள் மட்டுமே.. ஸ்டாலினே, கருணாநிதி குடும்பத்திலிருந்து திமுகவில் ஆதிக்கம் செலுத்தும் கடைசி வாரிசாக இருப்பார்.. இல்லையெனில் திமுக அழிவதை யாராலும் தடுக்க முடியாது..

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X