பதிவு செய்த நாள் :
கைது!
வங்கி கடன் மோசடி மன்னன் நிரவ் மோடி...
சிறையில் அடைத்தது பிரிட்டன் கோர்ட்

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், ரூ.13 ஆயிரத்து, 500 கோடிக்கு மேல் மோசடி செய்த, நிரவ் மோடி, பிரிட்டன் தலைநகர் லண்டனில், அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு, 'ஜாமின்' வழங்க மறுத்த நீதிமன்றம், 29ம் தேதி வரை காவலில் வைக்க உத்தர விட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 வங்கி கடன். மோசடி. மன்னன். நிரவ் மோடி. கைது.சிறையில் அடைத்தது.பிரிட்டன்.கோர்ட்


குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன், நிரவ் மோடி; வைர வியாபாரி. இவரும், இவரது உறவினர் மெஹுல் சோக்சியும் சேர்ந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினர். அந்த கடனை திருப்பிச் செலுத்தவில்லை. முறை கேடு வெளியே தெரிந்ததும், நிரவ் மோடியும், மெஹுல் சோக்சியும் குடும்பத்தினருடன், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

கோரிக்கை:


இது தொடர்பான வழக்கை, சி,.பி.ஐ., விசாரித்து வருகிறது. நிரவ் மோடிக்கு எதிராக, சட்ட

விரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்து, அமலாக்கத்துறையும் தனியாக விசாரித்து வருகிறது. நிரவ் மோடியையும், மெஹுல் சோக்சியையும் பிடிக்க, சர்வதேச போலீசான, 'இன்டர்போலின்' உதவியை, சி.பி.ஐ., நாடியது.

இதற்கிடையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில், நிரவ் மோடி பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, 'நிரவ் மோடியை, இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும்' எனக் கோரி, பிரிட்டன் உள்துறை அமைச்சர், சஜித் ஜாவித்திடம், அமலாக்கத் துறை, சமீபத்தில் கோரிக்கை விடுத்தது.

லண்டனில் வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றில், லண்டனின் வெஸ்ட் என்ட் பகுதியில், ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில், நிரவ் மோடி வசிப்பதாக, படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.இதையடுத்து, அமலாக்கப்பிரிவு அதிகாரி கள், 'சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், நிரவ் மோடியை நாடு கடத்த அனுமதிக்க வேண்டும்' என கோரி, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.

இதையேற்று, நிரவ் மோடிக்கு எதிராக, லண்டன் நீதிமன்றம் கைது, 'வாரன்ட்' பிறப்பித்தது. இந் நிலையில், நிரவ் மோடி, லண்டனில் பிரிட்டன் போலீசாரால், அதிரடியாக கைது செய்யப் பட்டார். அவரை, வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில்,நீதிபதி,மேரி மலோன் முன்னிலையில், போலீசார் ஆஜர்படுத்தினர்.

Advertisement

நீதிமன்ற காவல்


இதையடுத்து, நிரவ் மோடி சார்பில், 'ஜாமின்' கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி மேரி மலோன் கூறிய தாவது:நிரவ் மோடிக்கு, ஜாமின் வழங்கப்பட்டால், அவர் தப்பிச் சென்று விடுவார். அதனால், அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நிரவ் மோடியை, 29ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்.இவ்வாறு நீதிபதி கூறினார்.

இதையடுத்து, நிரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், நிரவ் மோடி, லண்டனுக்கு கடந்த ஆண்டு வந்தது, தெரிய வந்து உள்ளது.லண்டனில் அவர், சில தொழில் களையும் நடத்தி வருகிறார். பிரிட்டனின் நிறுவனங்கள் பதிவேட்டில், 'வாட்ச்' மற்றும் நகைகளுக்கான மொத்த விற்பனையாளர் என, தன்னை அவர் பதிவு செய்து உள்ள தகவல், தற்போது வெளியாகி உள்ளது.

கார்களை ஏலம் விட அனுமதி

நிரவ் மோடி மீதான, சட்ட விரோத பணப் பரி மாற்ற வழக்கை, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, அவரது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்து களை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது.இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்த மான, 173 ஓவியங்களை விற்பனை செய்யவும், 11 கார்களை ஏலம் விடவும் அனுமதி கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இதற்கு நீதி மன்றம், அனுமதியளித்தது.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-மார்-201900:23:41 IST Report Abuse

Mani . Vஇதெல்லாம் நாம் நீரவ் மோடிக்கு செய்யும் துரோகம். அவனை பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பது மாதிரி அனுப்பி வைத்து விட்டு, பின்னாடியே போலீஸை அனுப்பி கைது செய்வது தர்மம் இல்லை.

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
21-மார்-201911:20:28 IST Report Abuse

Mohamed Ilyasலண்டனில் வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றில், லண்டனின் வெஸ்ட் என்ட் பகுதியில், ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில், நிரவ் மோடி வசிப்பதாக, படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது , சிபிஐ கண்டு பிடிக்கில ஒரு நாளேடு கண்டுபிடிச்சு வெளியே சொன்னதை ராகுல் விஷத்தை பெரிதாகியதற்கு அப்புறமா தான் இவளவு நிகழ்வும் , இதிலிருந்து சிபிஐ கண்டு பிடிக்க முயற்சித்ததா இல்லையா ? விஷயம் வெளியில் வரவும் வேறு வழி இல்லாமல் கோர்ட்டுக்கு போய் கைது வாரண்ட் வாங்க வேண்டியதாகிவிட்டது இது தான் நடந்தவை

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
21-மார்-201910:29:54 IST Report Abuse

Mohamed Ilyasலண்டனில் வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றில், லண்டனின் வெஸ்ட் என்ட் பகுதியில், ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில், நிரவ் மோடி வசிப்பதாக, படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது , சிபிஐ கண்டு பிடிக்கில ஒரு நாளேடு கண்டுபிடிச்சு வெளியே சொன்னதை ராகுல் விஷத்தை பெரிதாகியதற்கு அப்புறமா தான் இவளவு நிகழ்வும் , இதிலிருந்து சிபிஐ கண்டு பிடிக்க முயற்சித்ததா இல்லையா ? விஷயம் வெளியில் வரவும் வேறு வழி இல்லாமல் கோர்ட்டுக்கு போய் கைது வாரண்ட் வாங்க வேண்டியதாகிவிட்டது இது தான் நடந்தவை

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-மார்-201913:46:18 IST Report Abuse

ஆரூர் ரங்😂😂😂😂 ...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-மார்-201913:47:06 IST Report Abuse

ஆரூர் ரங்மோசடிக்கு உடந்தையா இருந்தவரே காட்டிக்கொடுத்தாக? காதில் பூ சுத்தாதீங்க ...

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
21-மார்-201916:21:50 IST Report Abuse

Darmavanஎப்படியோ பப்புவுக்கு பேர் வரணும்....இந்த திருடர்கள் ஏன் நிரவுக்கு தகுதிக்கு மீறி கடன் கொடுத்தான் என்று கேட்க அறிவில்லை. இவன் கடன் கொடுப்பானாம் மோடி அவனை பிடிக்க வேண்டுமாம் ....இந்த வக்கிர புத்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X