பதிவு செய்த நாள் :
ஜனநாயகத்தில் காங்.,க்கு நம்பிக்கையில்லை:
பிரதமர் நரேந்திர மோடி விளாசல்

புதுடில்லி: ''ஜனநாயகத்தில் காங்கிரசுக்கும், அந்த கட்சி தலைவர்களுக்கும் நம்பிக்கை கிடையாது; அந்த கட்சியினர், ஓட்டு வங்கி அரசியலையும், வாரிசு அரசியலையும் மட்டுமே முன்னிலைப் படுத்துகின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

ஜனநாயகத்தில்,காங்கிரசுக்கு,நம்பிக்கையில்லை,பிரதமர் மோடி , விளாசல்


பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ளதாவது:வாரிசு அரசிய லுக்கு எதிராகவும், ஓட்டு வங்கி அரசியலுக்கு மாற்றாகவும், 2014 லோக்சபா தேர்தலில், மக்கள் ஓட்டளித்தனர். நேர்மை, வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்காக ஓட்டளித்தனர்.

பெரும்பான்மை:


அதன் விளைவாக, 2014ல், வாரிசு அரசியல் இல்லாத கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

இதனால், ஒரு குடும்பத்தை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், நாட்டை முன்னிலை படுத்தி, அரசு பணிகள் நடந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முந்தைய, காங்., ஆட்சியில், அனைத்து அரசு இயந்திரங்களும் சிதைக்கப்பட்டன. ராணுவத் துறை, வருமானம் ஈட்டும் துறையாக மட்டுமே, காங்., ஆட்சியில் பார்க்கப்பட்டது.

முந்தைய ஆட்சியில், ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில், ஒவ்வொரு இடைத்தரகருக்கும், ஒரு குடும்பத்துடன் தொடர்பு இருந்தது.நாங்கள், பயங்கர வாதிகள் மீது தாக்குதல் நடத்தி யதைக் கூட, காங்., கேள்வி கேட்கிறது. காங்.,க்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை.

காங்., கட்சி யின் தலைமையே, மிகப் பெரிய ஊழல் வழக்கில், ஜாமினில் உள்ளது.காங்கிரசுக்கு, ஒரு குடும்பம் மட்டுமே முக்கியம்; நாட்டு மக்களை பற்றி, அவர்களுக்கு கவலையில்லை. அதனால் தான், காங்கிரஸ் ஆட்சியில், பார்லிமென்ட், நீதித்துறை, ராணுவம் உட்பட பல அமைப்புகள் அவமானப்படுத்தப்பட்டன.

Advertisement

சிந்திக்க வேண்டும்:


காங்., ஆட்சியில், அரசியல் சட்டத்தின், 356வது பிரிவை பயன்படுத்தி, பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. காங்.,கை சேர்ந்த,முன்னாள் பிரதமர் ராஜிவ், திட்டக்கமிஷனை, 'ஜோக்கர்கள் கூட்டம்' என, விமர்சித்தார்.மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை, அமைச்சரவையில் இடம் பெறாத ஒருவர், பத்திரிகையாளர்கள் முன் கிழித்து போட்டார்; அவர் யார் என, எங்களுக்கு தெரியும். மீண்டும் வாரிசு ஆட்சி வேண்டுமா என, மக்கள் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு மோடி, அதில் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-மார்-201922:17:26 IST Report Abuse

Pugazh Vகாங்கிரஸ் பற்றி இவருக்கு என்ன கவலை? ஏன் அவர்கள் கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டும்? நேருவின் குடும்பத்தில் அல்லாதவர் தலைவரானால், பாஜக கட்சி யை கலைத்து விட்டு காங்கிரஸ் ஸில் ஐக்கிய மாகிவிடப் போகிறாரா?

Rate this:
21-மார்-201916:37:56 IST Report Abuse

Nepolian Sஇவ்வளவு போட்டோ எடுத்தும் இன்னும் போட்டோவுக்கு முகம் காட்டும் பழக்கம் மாறவில்லை

Rate this:
RM -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201913:40:24 IST Report Abuse

RMungallukku vera vellai illai

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X