அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகள் கண்காணிப்பு

Updated : மார் 20, 2019 | Added : மார் 20, 2019 | கருத்துகள் (18)
Advertisement
அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகள் கண்காணிப்பு

சென்னை, ''அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகள் மற்றும் பணப் பரிமாற்றம் கண்காணிக்கப்படும்,'' என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:வங்கிகளிலிருந்து, ஏ.டி.எம்., மையங்களுக்கு அல்லது வேறு இடத்திற்கு, பணம் எடுத்து செல்லும்போது, ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். பணம் எடுத்து செல்லும் விபரத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தெரிவித்து, அவரிடம் பெற்ற சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.வங்கி பணம் என்ற பெயரில், வேறு நபர்கள், பணம் எடுத்து செல்வதை தடுக்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணையதளம் வழியே, பத்து லட்சம் ரூபாய்க்கு மேல், பணப் பரிமாற்றம் செய்யப்பட்டால், அதை, வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிப்பர்.




அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகளும், அதன் பணப் பரிமாற்றமும் கண்காணிக்கப்படும்.எந்த பரிமாற்றமும் இல்லாத வங்கி கணக்குகளில் இருந்து, திடீரென ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், பரிமாற்றம் நடந்தால், அது கண்காணிக்கப்படும். இது தொடர்பான விசாரணையை, வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வர்.தேர்தல் செலவின பார்வையாளர்கள் தொகுதிகளுக்கு வந்துள்ளனர். பொது பார்வையாளர்கள், வேட்புமனு தாக்கல் முடிவதற்கு முந்தைய நாள் வருவர்.தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுவர் விளம்பரம் எழுதியதாக 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்திய, 'மொபைல் ஆப்' வழியே, 470 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 119 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


24ல் பயிற்சி வகுப்பு



தமிழகத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் பணியில் 3.45 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு மூன்று கட்டமாக தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.முதல் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 24ம் தேதி துவங்குகிறது. அடுத்த கட்ட பயிற்சி வகுப்பு தேதிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் முடிவு செய்வர்.94 கிலோ தங்கம், துப்பாக்கி பறிமுதல்தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 12.80 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 3.78 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர 94 கிலோ தங்கக் கட்டி மற்றும் நகைகள், ஒரு கைத்துப்பாக்கி, ஒரு இரட்டை குழல் துப்பாக்கி, 1.8 கிலோ வெள்ளி பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மதுரையை சேர்ந்த கிருபாகரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கரூரில் 94 கிலோ நகைகளை எடுத்து சென்றுள்ளார். அவற்றை பறிமுதல் செய்து விசாரித்துவருகின்றனர்.


கட்சிக்கொடி கட்ட தடை


அரசியல் கட்சியினர் தங்கள் வாகனங்களில் கட்சிக் கொடி கட்டுவது வழக்கம். மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்தின் முகப்பில் கொடி கட்ட அனுமதி பெற வேண்டும்.தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டுமே கட்சி கொடிகளை கட்டலாம். அனுமதி பெறாத வாகனங்களில் கொடி கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
21-மார்-201913:16:18 IST Report Abuse
pattikkaattaan ///வங்கிகளிலிருந்து, ஏ.டி.எம்., மையங்களுக்கு அல்லது வேறு இடத்திற்கு, பணம் எடுத்து செல்லும்போது, ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.../// ... மூன்று கண்டைனர்கள் ...500 கோடிகள் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது ...
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201911:50:37 IST Report Abuse
ஆப்பு அது மட்டுமில்லீங்க. எல்லாருடைய கணக்குகளையும் கண்காணியுங்க. நீங்க மட்டும்தான் 2000 ரூவா வங்கி கணக்குல போடணும். எதிர்க்கட்சி களவாணிகளும் எங்க வங்கி கணக்குல 4000, 5000ம்னு போட்டுறப் போறாங்க.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-மார்-201908:54:19 IST Report Abuse
S.Baliah Seer இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதாக கூறி தினகரனிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்ட தேர்தல் கமிஷனின் ஆசாமிகள் யார் என்ற கேள்விக்கே இதுவரை பதில் இல்லை.தினகரன் என்ன லூசா பணத்தை எடுத்துக்கொண்டு தேர்தல் ஆணையம் வரை செல்ல.இந்த லட்சணத்தில் அரசியல்வாதிகளின் பேங்க் கணக்கை இவர்கள் கண்காணிக்கிறார்களாம்.அவர்களின் பினாமிகள் இவர்களுக்கு தெரியுமா.ஏன் சார் இப்படியெல்லாம் கூடவா நீங்கள் காமடி செய்ய முடியும். பேசாமல் முக்காடு போட்டுக்கொண்டு எங்காவது மூலையில் அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் அறிக்கை விடுவதை பார்த்து மக்கள் மிகுந்த எரிச்சலுக்கு ஆளாகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X