அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்டாலின் மீது கருணாநிதிகு நம்பிக்கை இல்லை!
தி.மு.க., கூட்டணி மீது முதல்வர் பாய்ச்சல்

சேலம்:''யார் பிரதமர் என தெரியாமல், தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஸ்டாலின் மீது, அவரது தந்தைக்கு நம்பிக்கையில்லாதது போல், மக்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இல்லை,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.

 ஸ்டாலின் மீது, கருணாநிதிக்கே, நம்பிக்கை,இல்லை!,தி.மு.க., கூட்டணி ,மீது ,முதல்வர் , பழனிசாமி, பாய்ச்சல்

சேலம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
இதில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:


தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில், 'மெகா' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மோடி, மத்தியில் ஐந்து ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்து, நிலையான ஆட்சி கொடுத்துள்ளார். அவருடன் கூட்டணி வைத்தால், மதவாத

கூட்டணி என்கின்றனர். தி.மு.க., பதவி, அதிகாரத் துக்கு, ஏற்கனவே, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது. அவர்கள் வைத்தால் மதவாதம் இல்லையா?

கருணாநிதி உடல்நலம் பாதிக்கபட்டு,ஓராண்டுக்கு மேல் ஓய்விலிருந்த நிலையிலும், அவர் தான் தலைவர் பதவியை வகித்தார். ஸ்டாலின் செயல் தலைவராகவே இருந்தார். மகன் மீது கூட, தந்தைக்கு நம்பிக்கை இல்லாதபோது, மக்கள், ஸ்டாலின் மீது எப்படி நம்பிக்கை வைப்பர்.

சென்னையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், 'பிரதமராக ராகுலை தேர்வு செய்வோம்' என, அறிவித்தார். சந்திரபாபு நாயுடு, உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் நடந்த கூட்டத்தில் பேசியதலைவர்கள் கூட, 'தேர்தலுக்கு பின், பிரதமரை தேர்வு செய்வோம்' என, தெரிவித்தனர்.

அந்தக் கூட்டத்தில், ஸ்டாலினும் தன் கருத்தை மாற்றி பேசினார். இதனால், யார் பிரதமர் என்று கூட தெரியாமல், தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Advertisement

பச்சோந்தி கூட, சூழ்நிலைக்கேற்ப, மெல்ல மெல்ல நிறத்தை மாற்றும். ஸ்டாலினோ, உடனடியாக மாற்றிக் கொள்வார்.பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைகளை, படிப்படியாக நிறைவேற்ற, செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், நல்ல திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்ற, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
23-மார்-201902:34:13 IST Report Abuse

Baskarஇவர் மீது நம்பிக்கை இருந்து இருந்தால் எப்போதோ முதல்வர் ஆக்கி இருப்பார். இனி கருணாநிதி அரசியல் சாணக்கியம் சுடாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது. இனிமேல் கட்சியை கலைக்க வேண்டியது தான்.

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
22-மார்-201904:55:15 IST Report Abuse

meenakshisundaramஇவர் அப்பப்போ ஒரு வாசகம் சொன்னாலும் 'திருவாசகமாக' சொல்கிறார்.

Rate this:
Sanakkiyan - Erode,இந்தியா
21-மார்-201919:15:24 IST Report Abuse

Sanakkiyanபாய்ச்சலா???

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X