அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஊழல் பற்றி பேச
மோடிக்கு தகுதியில்லை: ஸ்டாலின்

திருவாரூர்:''ஊழல் பற்றி பேச, பிரதமர் மோடிக்கு எந்த தகுதியும் இல்லை,'' என, தி.மு.க., தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

 ஊழல் பற்றி, பேச ,மோடிக்கு, தகுதியில்லை, ஸ்டாலின்

திருவாரூரில், நேற்று, நடந்த பிரச்சார கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:என் பிரசார பயணத்தை, திருவாரூரில், துவக்கியுள்ளேன். தி.மு.க.,வின் தலைநகர் திருவாரூர். தாய்மொழி, தமிழ் மொழியை காத்திட, பள்ளி பருவத்திலேயே மாணவர்களை திரட்டி, போராட்டம் நடத்திய கருணாநிதி பிறந்த ஊர் திருவாரூர்.


பிரதமர் மோடியின் ஆட்சி, ஜூன் 3ல் முடிகிறது. கருணாநிதி பிறந்ததும், ஜூன், 3 தான்; இரண்டும் பொருத்தமாக அமைந்துள்ளது.மத்தியில், பாசிச ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், மத்திய அரசின், கொத்தடிமை ஆட்சி நடக்கிறது.இந்த இரு

ஆட்சிக்கும், விடைகாண ஓட்டு கேட்க வந்து உள்ளேன். லோக்சபா தேர்தல் மூலம், மத்திய ஆட்சியை மாற்ற இடம் உண்டு.


அதுபோல், 18 சட்டசபை தொகுதிகளிலும், நாம் வெற்றி பெறும் நேரத்தில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.முதல்வர் இ.பி.எஸ்., வகிக்கும், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையில், 3000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இது, தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. இதேபோல், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன் மீதும், குட்கா வழக்கு நிலுலையில் உள்ளது. இவற்றை, மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்களிடம், பிரதமர் மோடி கூட்டணி வைத்துள்ளார். ஊழல் பற்றி பேச, மோடிக்கு தகுதியில்லை.மத்திய அரசு மீதும், 'ரபேல் ஊழல் குற்றச்சாட்டும் உள்ளது. அ.தி.மு.க., அமைச் சர்கள் ஊழல் குறித்து, கவர்னரிடம் புத்தகம் கொடுத் தவர்களும், அவர்களுடன் கூட்டணிவைத்துள்ளனர்.

ஊழலில் சிக்கி உள்ளவர்கள் எந்த உணர்வோடு, மக்களை சந்திக்க உள்ளனர். ஊழல் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், யார் மீது ஊழல் வழக்கு இல்லை என, முதல்வர் இ.பி.எஸ்., கேட்கிறார். நான், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை

Advertisement

என்கிறார்.அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை, ஆதாரத்துடன், மத்திய அரசிடம் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

ஊழலை தாண்டி, ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா தொடர்பாக, ஐந்து கொலைகளும் நடந்துள்ளன. இது தொடர்பாக, முதல்வர் மீது, கூலிப்படையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையும், மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.

சிறு, குறு விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வோம் என,தேர்தல் அறிக்கை யில் குறிப்பிட்டு இருந்தோம். கூட்டணி கட்சி கள், விவசாய சங்கங்கள் கோரிக்கை களை ஏற்று, அனைத்து விவசாயிகளின் கடன்களை யும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு, மு.க.ஸ்டாலின் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
25-மார்-201910:40:10 IST Report Abuse

Manianஎன்னமோ ஊதல் - புகை பிடித்தல், புல்லாங்குழல் வாசித்தல் போன்றவை தெறியாது என்றுதானே சொன்னேன். அதை ஊழல் என்று தவறுதலாக பிரச்சாரம் பண்ணலாமா? ஊழல் எங்கள் குலச்சொத்து என்பதை நினைவே "விஞ்ஜானக் கொள்ளை மூலம்" நிரூபித்துவிட்டாரே. எதோ நைனா, மறதியால் உங்களை சொல்லிபோடடென் . எழுந்தது ஓடியார வேண்டாம்.

Rate this:
Subramanian Marappan - erode,இந்தியா
23-மார்-201913:38:23 IST Report Abuse

Subramanian Marappanஇது என்ன புதுக்கதை திமுக தலைநகர் திருவாரூர்.அப்போ அண்ணாதுரை திமுகவை துவக்கியவர் இல்லையா.எம்ஜிஆர் தயவில் 1969ம் ஆண்டு முதலமைச்சர் ஆனவர் வாரிசு இப்போது கருணாநிதிதான் திமுகவை தொடங்கினர் என்று வாய் கூசாது பொய் சொல்கிறார். அண்ணாதுரைக்கும் ஈ வெ ராமசாமிக்கும் ஊர் ஊருக்கும் சிலை வைத்து பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்து கட்சிக்காரன் எல்லாம் பிழைக்க திட்டங்கள் தீட்டி எல்லா பொறுக்கிகளும் சம்பாதிக்க விட்டு தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் அரசியல் கட்சிக்காரர்களுக்கு காசு கொடுத்து எட மாற்றம் பதவி உயர்வு .பெற்று வெவ்வேறு சான்றிதழ் வேண்டி வரும் மக்களிடம் கூசாமல் லஞ்சம் வாங்குகிறார்கள்.பத்திர பதிவு ,போக்குவரட்து,கட்டிட அனுமதி ஆகியவைகள் பெற கொடுக்கும் பணம் தனி.இப்படி அனைத்து அரசு துறைகளும் ஊழல் மயம் ஆக்கிவிட்டு இவர் சொல்றர் மோடி பத்தி.

Rate this:
skv - Bangalore,இந்தியா
22-மார்-201905:38:05 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இருபடிச்சவாளுக்கு தகுதிக்கு ஏற்ற வேலைகிடைப்பது இந்த கார்பொரேட் கம்பெனிகளாத்தானே, எந்த அரசும் படிச்சு ரேங் வாங்கின பட்டதாரிக்கு வேலையே தரலீங்க சாதியின் பேரால் ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கின (வித் பல அரியர்ஸ்) கூமுட்டைகளே இருக்கானுக பியூஸ் வயிறும் மாற்றத்தெரியாத எலெக்ட்ரிக்கல் இஞ்சினீர்களெல்லாம் மின்வாரியத்துலே சீப் எஞ்சினீராயிருக்காங்க (எல்லாத்துக்கும் லஞ்சம் வாங்கிண்டு (மந்திரிலேந்து மண்ணாங்கட்டிவரை பகிர்ந்துண்டு ) கொடிலே பொரண்டு ந்துருக்கானுக அவனுக மனைவியின் தாலிக்கொடியே மினிமம் 10பவுனாம் போதுமா எவன் லஞ்சம் வாங்கினாலும் அவனுக்கு வேலை போயிடணுமா அரசூலே இதுகளுக்குப்பல ஆயிரம் சம்பளம் இவனுக புரட்டுவது பல லக்ஷம் சர்வம் பிராடுமயம்

Rate this:
மேலும் 82 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X