லோக்சபா தேர்தலில் அத்வானி போட்டி?

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (19)
Advertisement
லோக்சபா தேர்தலில் அத்வானி போட்டி?

ஆமதாபாத், லோக்சபா தேர்தலில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, 91, மீண்டும் போட்டியிடுவது பற்றி, இதுவரை, கட்சி சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர், அத்வானி.இவர், 1998ம் ஆண்டிலிருந்து, குஜராத் மாநிலம், காந்திநகர் தொகுதியின், எம்.பி.,யாக உள்ளார். மத்தியில், வாஜ்பாய் தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசில், உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தார்.
கடந்த, 1984ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பின், கட்சி அடைந்த அசுர வளர்ச்சிக்கு, அத்வானி தான் பெரிதும் காரணம்.கடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதற்கு, அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, கட்சியிலும், ஆட்சியிலும், அவர் ஓரம் கட்டப்பட்டார்.கடந்த லோக்சபா தேர்தலில், காந்திநகர் தொகுதியில் அத்வானி வெற்றி பெற்ற போதும், அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை; கட்சி பொறுப்புகளும் தரப்படவில்லை.இந்நிலையில், விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், அத்வானி மீண்டும் போட்டிடுவாரா என்பது, மர்மமாகவே உள்ளது.இது பற்றி, அத்வானியின்உதவியாளர், தீபக் சோப்ரா கூறுகையில், ''லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி, அத்வானி எந்த முடிவும் எடுக்கவில்லை. போட்டியிடுவது பற்றி, அத்வானியிடம் கட்சி தலைவர்களும் பேசவில்லை,'' என்றார்.'மீண்டும் போட்டியிட, அத்வானிக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி, கட்சியின் ஆட்சிமன்ற குழு தான் முடிவு செய்யும்' என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-மார்-201921:16:58 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஏதோ ஓர் மாநிலத்திற்கு ஆளுநர் பதவி கொடுத்து கௌரவிக்கலாம் .நீண்ட நெடிய அரசியல் அனுபவம் உள்ளவர்.அரசியலில் இருந்து விலக மனம் வரல அதனால் இப்படி செய்யலாம்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-201900:13:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்கவர்னர் ஆக்கினா நியாயமா இருக்கேன்னு அடம் பிடிப்பார். மோடி - அமித்சா கூட்டணியின் குதிரை பேர சாணக்கியத்துக்கு இவரு சரிப்பட்டு வரமாட்டார்....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201915:55:44 IST Report Abuse
Endrum Indian அரசு வேலையில் 60 ல் ரெட்டையர்மெண்ட் என்னும் பொது இந்த எம்.எல்.ஏ./ எம்.பி.க்கும் வயது நிர்ணயம் செய்யவேண்டும் ரிட்டயர்மென்டுக்கு ஏனென்றால் இதிலும் சம்பளம் (எம்.பி. எனில் CTC ரூ. 50 லட்சம் எம்.எல்.ஏ என்றால் ரூ. 35 லட்சம். அதாவது சம்பளம்+பஞ்சப்படி+வீடு வாடகை+கார் + டெலிபோன் + விமான பயணம் எல்லாமே சேர்த்தது). 5 வருடம் இந்த பதவியில் இருந்ததற்காக சாகும் வரை பென்சன் எழவு வேறே. அச்சு அசலாக அரசு உத்தியாரோகம்+நல்ல சம்பளம். அப்படி இருக்கும் போது நிச்சயம் பதவியில் அதிகப்படியான இருக்கும் வயது நிச்சயம் முறை செய்யப்படவேண்டும். மிக மிக அதிக வயது ரெட்டையர்மென்டுக்காக 70 எனக்கொள்ளலாம். இதை செய்வார்களா இந்த அரசியல்வாதி கூமுட்டைகள், செய்ய மாட்டார்கள், அவர்களுக்கு என்றால் ஒரு சட்டம், சாதாரண மக்களுக்கு என்றால் ஒரு சட்டம்????
Rate this:
Share this comment
Cancel
Halfmoon - Karaikudi,இந்தியா
21-மார்-201914:16:42 IST Report Abuse
Halfmoon ///லோக்சபா தேர்தலில் அத்வானி போட்டி//// அடேய் அல்லைக்கைஸ்... சர்ஜிக்கல் அட்டாக் வேலைக்கு ஆகலேன்னா.. அத்வனியை தானே கடைசி ஆயுதமா வச்சிருந்தீங்க.. அப்போ பிளானை மாத்தீட்டீங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X