பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை: அருண் ஜெட்லி

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி: ''ஜி.எஸ்.டி., கவுன்சில் போன்ற அமைப்பு, கிராமப்புற வளர்ச்சி, வேளாண், ஆரோக்கிய பராமரிப்பு துறைகள் ஆகியவற்றுக்கும் தேவை,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார்.







புதிய இந்தியா:


அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய - மாநில அரசு களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரிகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும், கூட்டாட்சி அமைப்பாக, ஜி.எஸ்.டி., கவுன்சில் உள்ளது. மிகச் சிறந்த இந்த அமைப்பு, 34 கூட்டங்கள் மூலம், ஆயிரக்கணக்கான பிரச்னைகளை விவாதித்து, தீர்வு கண்டுள்ளது. இதன் மூலம், வர்த்தகர்களும், மக்களும் பயன் பெற்று வருகின்றனர். புதிய இந்தியாவை உருவாக்குவதில், இந்த அமைப்பின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.






கூட்டாட்சி அமைப்பு:


அத்தியாவசிய துறைகளின் வளர்ச்சிக்கு, மத்திய - மாநில அரசுகள் உடனான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெற வேண்டும். அதற்கு, ஜி.எஸ்.டி., கவுன்சில் போன்ற கூட்டாட்சி அமைப்பை, கிராமப்புற மேம்பாடு, வேளாண், ஆரோக்கிய பராமரிப்பு துறைகளிலும் ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம், ஏழை மக்கள் பெரிதும் பயன் பெறுவர். அரசியல் கட்சி என்ற முறையில், இத்திட்டத்திற்கு, பா.ஜ., ஆதரவளிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-201900:14:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தேவைன்னு தான் சொன்னாங்க.. 2014 வரைக்கும் வேண்டாமுன்னு குதிச்சது யாருன்னு புரட்டி பாருங்க..
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201911:48:03 IST Report Abuse
ஆப்பு மொதல்ல அந்த 150 லட்சம் கோடி கருப்பு பணம் வசூல் பண்ணீங்களா? இல்லே வசூல் ஆகாமலேயே gst வசூல் பண்ணிட்டீங்களா?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-201907:59:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அப்போ என் பதினைந்து லெச்சம் என் அக்கவுண்ட்லே போட்ருவாய்ங்களா?...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201909:42:33 IST Report Abuse
Srinivasan Kannaiya என்னென்னமோ சொல்லறீங்க... ஆனால் செய்தது எதுவும் தெரியவில்லை... புரியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X