பொது செய்தி

தமிழ்நாடு

கிருதுமால் நதியில் மணல் திருட்டு: இரவு, பகலாக நடப்பதால் பள்ளம்

Added : மார் 21, 2019
Advertisement

நரிக்குடி:கிருதுமால் நதியில் இரவு, பகலாக மணல் திருட்டு நடப்பதால் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .நரிக்குடி அருகே உள்ள கிருதுமால் நதியில் ஆங்காங்கே மணல் எடுத்ததால் குண்டும் குழியுமாகி நீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. ஐந்து மாதங்களுக்கு முன் பெய்த கனமழைக்கு அதிக அளவில் காட்டுத் தண்ணீர் வந்தும் கிருதுமால் நதியில் மழை நீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தேங்கி நின்றது. இதனால் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாமல் வறண்டன. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. நரிக்குடி பகுதியில் பட்டா நிலங்களில் சவடு மண் குவாரி இயங்கி போது திருட்டு மணல் எடுப்பது குறைந்திருந்தது.
தற்போது சவடு மண் குவாரி இயங்காததால் மீண்டும் கிருதுமால் நதியில் இரவு, பகலுமாக மணல் திருட்டு நடக்கிறது. அதிகாரிகளிடத்தில் பொது மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆறு இருந்த அடையாளமே தெரியாமல் போனது. வேதனை அடைந்துள்ள அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X