அரசியல் செய்தி

தமிழ்நாடு

'லெட்டர் பேடு'கள் தொல்லை தாங்கல!

Added : மார் 21, 2019 | கருத்துகள் (7)
Advertisement
'லெட்டர் பேடு'கள் தொல்லை தாங்கல!

தமிழகத்தில், சட்டசபை, லோக்சபா, உள்ளாட்சி என, எந்த தேர்தல் வந்தாலும், 'லெட்டர் பேடு'களிலும், பதிவெண்களிலும் இயங்கும், சில ஜாதி அமைப்புகள், வரிந்து கட்டி, களத்தில் இறங்கி விடுகின்றன.

இவர்கள் பேச்சை, அந்த ஜாதியிலேயே பெரும்பான்மையினர் கேட்க மாட்டார்கள் என்றாலும், வேறு வழியில்லாமல், குறிப்பிட்ட ஜாதிகளின் ஆதரவு, தனக்கு உண்டு எனக்காட்ட, வேட்பாளர்கள், இவர்களை மடியில் கட்டித் திரிவர். வேட்பாளர் சார்பில், தேர்தல் செலவு கணக்கில் வராத கார் ஒன்று, 'லெட்டர் பேடு' தலைவர்களுக்கு வழங்கப்படும். காருக்கு டீசல் போட, கூட வரும் ஜாதி சகாக்களுக்கு மது, சாப்பாடு என, ஓட்டு போடும் நாள் வரை, 'லெட்டர் பேடு'களின் காட்டில், ஒரே பண மழை தான்.

அதேநேரம், வேட்பாளருக்கு ஆதரவாக, தன் ஜாதி மக்களிடம் கூவுவர் என பார்த்தால், அதுவும் இருக்காது. இதனால், 'பிள்ளை பூச்சியை வயித்துல கட்டுன கதை' போல், இவர்களை கழற்றிவிடவும் முடியாமல், 'கவனிக்கவும்' முடியாமல், வேட்பாளர்கள் புலம்புவர்.

தற்போது, லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலுக்காக காத்திருக்கின்றனர். அனைத்து கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும் வெளியானதும், அடுத்த நிமிடமே, ஏதாவதொரு வேட்பாளரிடம், தன் ஜாதி அமைப்பையும், பதிவு எண்ணையும் காட்டி ஐக்கியமாகி விடுவர். அப்புறம் என்ன... அடுத்த சில வாரங்கள், 'லெட்டர் பேடு' கட்சி பிரமுகர்களின் காட்டில் மழை தான்!

-நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-மார்-201911:48:41 IST Report Abuse
Lion Drsekar மிக மிக அருமையான செய்தியை வெளியிட்ட தினமலருக்கு நன்றி, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
21-மார்-201909:28:33 IST Report Abuse
தமிழ்மைந்தன் ஜாதிகட்சி மற்றும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவிற்கு கஷ்டமாக காலம்தான்........டெபாசிட் இழந்தாலும் பரவாயில்லை என இவைகளை ஒதுக்குவது திமுகவிற்கு நல்லது என தோன்றுகிறது
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-மார்-201909:27:53 IST Report Abuse
RajanRajan இந்த லெட்டர் பேட் கட்சிகளை ஒழிக்கும் சட்டம் போட்டு ஒடுக்குங்கள். இவனுங்களுக்கு வேற பொழைப்பே கிடையாது. காசுக்காக எந்த எடுபிடி வேலையும் யாருக்கு வேணும்னாலும் செய்வானுங்க .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X