சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (114)
Advertisement

புதுடில்லி: மரியாதை செலுத்துவதாக கருதி, தனது கழுத்தில் அணிந்திருந்த மாலையை, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு பிரியங்கா அணிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., கட்சியினர், கங்கை நீரால் கழுவி சிலையை புனிதப்படுத்தினர்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாவின் மகளான, பிரியங்கா, சமீபத்தில் தீவிர அரசியலில் குதித்தார். இதையடுத்து அவர், கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில், பிரியங்கா, தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.






கங்கா யாத்திரையை துவங்கிய பிரியங்கா, படகு மூலம் சென்று, கரையோர பகுதி மக்களை சந்தித்து, காங்., கட்சிக்கு ஆதரவு திரட்டினார். படகு பயணத்தின் ஒருபகுதியாக, ராம்நகரிலுள்ள சாஸ்திரி சவுக் பகுதியில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த மாலையை எடுத்து, சாஸ்திரி சிலைக்கு அணிவித்து அவமரியாதை செய்தார்.



இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பிரியங்கா மாலை அணிவித்த சாஸ்திரி சிலை மீது, கங்கை நீரை ஊற்றி பா.ஜ., கட்சியினர் புனிதப்படுத்தினர். முன்னாள் பிரதமருக்கு அவமரியாதை செய்த பிரியங்காவுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா
26-மார்-201914:05:09 IST Report Abuse
அருண் பிரகாஷ் எனக்கு காங்கிரஸ்க்கு ஓட்டு போடுவதில் எந்த தயக்கமும் இல்லை,ஒரே ஒரு கேள்வி மட்டும்,மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள் இதுவெல்லாம் செய்தோம் இதை வாஜ்பாய் அரசோ மோடி அரசோ செய்யவில்லை என்று 10 திட்டங்கள் கூற முடியுமா?அப்படி 10 நல்ல திட்டங்கள் செயல்படுத்தி இருந்தால் அதை சொல்லி ஓட்டு கேக்கலாமே?எங்காவது இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இந்த மாதிரியான சம்பவம் உண்டா?ஒன்றே ஒன்று மட்டும் பிரதானம் மோடி எதிர்ப்பு
Rate this:
Share this comment
Cancel
22-மார்-201918:46:38 IST Report Abuse
தெய்வசிகாமணி(விவசாயி அல்ல  ).S/o மாரப்ப கவுண்டர் ( விவசாயி) இறந்தவர்களின் சிலைகள் கடவுள் சிலைக்கு சமம் . எனவே பூ ஆடை என்று எதையும் சிலைகளுக்கு புதிதாகவே அணிவிக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.. அதுசரி இந்தமண்ணின் கலாச்சாரம் என்ன என்பது தெரிந்தால் தானே இதையெல்லாம் பின்பற்ற ? இவர்கள் இந்த கலாச்சாரத்தை போற்றி புகழ வேண்டாம். குறைந்த பட்சம் அவமதிக்காமல் இருந்தாலே போதும் .
Rate this:
Share this comment
Cancel
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
22-மார்-201905:11:06 IST Report Abuse
k balakumaran இந்த குடும்பம் தான் இந்தியாவை பிடித்த பீடைகள். பல நாடுகள் 15 , 20 வருடம்களில் வேகமாக வளர்ந்து உள்ளன. ஆனால், எல்லா வளமும் உள்ள இந்தியா மட்டும் 60 வருடம் மேல் ஒரே குடும்ப ஆட்ச்சியினால் வளர்ச்சியை எட்டவே இல்லை. கிறீஸ்தவ பெண்மணி எந்த முகத்துடன் இந்துவாக நடிக்கிறார்? தேர்தல் வரும்போது மட்டும் இந்து போல நடித்து இந்திய மக்களை ஏமாற்றுவது, அப்புறம் இத்தாலிய பெண்மணியாக வலம் வருவார். இந்து கீர்த்தனைகள் பாடிய ஜேசுதாஸ் மகனுக்கு ஞானஸ்நானம் செய்ய மறுத்து ஒதுக்கி வைத்த பாதிரிகள் ஏன் இவரை கண்டு கொள்ளவில்லை?? முன்பு காங்கிரஸ் ஆட்ச்சியில் கிராமம் கிராமம் ஆக இந்துக்களை பாதிரிகள் மதம் மாற்றம் செய்தனர். இவர்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் தொடரலாம் என்று தானோ அமைதி காக்கின்றனர். ஒரு கிறிஸ்தவர் தான் தனக்கு போட்ட மாலையை கழற்றி முன்னாள் பிரதமர் சிலைக்கு போட்டு அவமதிப்பார். ஒரு மாலை வாங்க கூட வசதி அற்ற குடும்பம் தானே. இந்தியாவை ஆளும் ஆசை வரும் முன் இந்திய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் பற்றி தெரிந்து பின் அரசியலுக்கு வாருங்கள் இத்தாலிய கடவுசீட்டு வைத்து இருக்கும் அம்மணிகள். உங்களுக்கு எதை பற்றியும் கவலை இல்லை, வைட்டமின் பணம் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் என்ற தெனாவெட்டு தான்.மக்கள் பணத்தில் இவர்கள் வெளிநாடுகளில் வாங்கி குவித்து வைத்துள்ள சொத்துக்கள் எண்ணில் அடங்காது. இந்த தேர்தலுடன் இந்த குடும்ப ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். அப்போது தான் இந்தியாவுக்கும், அப்பாவி இந்திய மக்களுக்கும் விடிவு கிட்டும்.
Rate this:
Share this comment
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
24-மார்-201906:47:13 IST Report Abuse
எதிர்க்குரல் மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள் பாலகுமாரன் நீங்கள் இருப்பது லண்டன் எனில் சொல்லுங்கள் மதவெறியர்கள் கிறித்தவர்களா ??? ஹிந்துக்களா??...
Rate this:
Share this comment
signin - Coimbatore,இந்தியா
25-மார்-201909:14:57 IST Report Abuse
signinஅதற்கு மனசாட்சி தேவை இல்லை பகுத்தறிவு தான் தேவை.. மதவெறியர்கள் கிறித்தவரோ, ஹிந்துக்களோ, இஸ்லாமியர்களோ இல்லை. அதை வைத்து அரசியல் செய்யும் d.m.k. மற்றும் காங்கிரஸ் தான்.. பிஜேபி உருவாக காரணமே அது தான்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X