சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா| Dinamalar

சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (114)

புதுடில்லி: மரியாதை செலுத்துவதாக கருதி, தனது கழுத்தில் அணிந்திருந்த மாலையை, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு பிரியங்கா அணிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., கட்சியினர், கங்கை நீரால் கழுவி சிலையை புனிதப்படுத்தினர்.






காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாவின் மகளான, பிரியங்கா, சமீபத்தில் தீவிர அரசியலில் குதித்தார். இதையடுத்து அவர், கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில், பிரியங்கா, தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.







கங்கா யாத்திரையை துவங்கிய பிரியங்கா, படகு மூலம் சென்று, கரையோர பகுதி மக்களை சந்தித்து, காங்., கட்சிக்கு ஆதரவு திரட்டினார். படகு பயணத்தின் ஒருபகுதியாக, ராம்நகரிலுள்ள சாஸ்திரி சவுக் பகுதியில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த மாலையை எடுத்து, சாஸ்திரி சிலைக்கு அணிவித்து அவமரியாதை செய்தார்.




இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பிரியங்கா மாலை அணிவித்த சாஸ்திரி சிலை மீது, கங்கை நீரை ஊற்றி பா.ஜ., கட்சியினர் புனிதப்படுத்தினர். முன்னாள் பிரதமருக்கு அவமரியாதை செய்த பிரியங்காவுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X