அரசியல் செய்தி

தமிழ்நாடு

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (43)
Advertisement

கோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., கனகராஜ் (64) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.


கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனது வீட்டில் இன்று காலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது கனகராஜிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே, அவரது உயிர் பிரிந்தது. சூலூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த கனகராஜிற்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.



கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வந்த கனகராஜ், மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். அதன் பிறகு கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கனகராஜின் உடல், அதிமுகவினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.




இரங்கல்

கனகராஜ் மறைவுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.கனகராஜ் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaagudiyan - Columbus,யூ.எஸ்.ஏ
22-மார்-201902:21:41 IST Report Abuse
Vaagudiyan RIP
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-201900:08:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் படத்திலே பின்னாடி பாருங்க.. பொக்லைன், கிரானைட் ன்னு - அடிச்ச காசை ஒக்காந்து அனுபவிக்க முடியலே.. ஹூம்.. சொந்தகாரங்க இவருக்கு மணிமண்டபம் கட்டி வெச்சா காத்தோட்டமா ரெஸ்ட் எடுப்பார்.. சமரசம் உலாவும் இடத்துக்கு போயிட்டாரு.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-மார்-201917:15:00 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅதான் விதி....
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
21-மார்-201915:30:49 IST Report Abuse
siriyaar சூலூர் எப்ப எலெக்சன் வச்சாலும் டோக்கன் கொடுத்தும் அதிமுக எழிதில் வெல்லும் அதிமுக முதலிடம் பிஜேபி இரண்டாமிடம் இன்னும் எழிதில் டெபாஸிட் வாங்கும் நிலையில் திமுக இருக்கிறது.
Rate this:
Share this comment
maharaja - Kuwait,குவைத்
21-மார்-201917:14:18 IST Report Abuse
maharajaஎழவு வீட்டிலும் ...........................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X