பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பற்றாக்குறை: தேர்தலை புறக்கணிக்க வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை

Added : மார் 21, 2019
Share
Advertisement
கிருஷ்ணகிரி: குடிநீர் பற்றாக்குறையால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாகக்கூறி, கிராம மக்கள் வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் எருமாம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள, 18 கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல,

கிருஷ்ணகிரி: குடிநீர் பற்றாக்குறையால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாகக்கூறி, கிராம மக்கள் வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் எருமாம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள, 18 கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல, கூரம்பட்டி பட்டனூர் நீரேற்று கூட்டுறவு விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்க, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் இணைப்பதிவாளர் அலுவலர்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் சங்கத்தை பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு செய்வதாக நேற்று, 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாகக்கூறி காலிகுடங்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒப்படைக்க கூரம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல, இரண்டு கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. மக்கள் சார்பில், ஒரு கோடி ரூபாய் வழங்க முடிவு செய்து சங்கத்தை துவக்க விண்ணப்பித்தோம். ஆனால், பொதுப்பணித்துறையினரிடம் தடையில்லா சான்று பெற்று பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி சங்கத்தை பதிவு செய்யாமல் உள்ளனர். ஒரு டிராக்டர் தண்ணீரை, 700 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். எனவே, சங்கத்தை பதிவு செய்ய வலியுறுத்தி லோக்சபா தேர்தலை புறக்கணிப்பு செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X