நியூசி.,யில் துப்பாக்கி பயன்படுத்த தடை

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தில் துப்பாக்கி உள்ளிட்ட அனைத்து வகையான ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்.நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் மார்ச் 15 அன்று தொழுகை நடை பெற்றபோது, சில நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தில் துப்பாக்கி உள்ளிட்ட அனைத்து வகையான ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்.latest tamil news


நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் மார்ச் 15 அன்று தொழுகை நடை பெற்றபோது, சில நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர். இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில், நியூசி.,ல் அனைத்து விதமான கைதுப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்துவது போன்ற ஆட்டோமெடிக், செமி ஆட்டோமெடிக் ரக ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்த புதிய சட்டம் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறையை சார்ந்தவர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்ள சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-201908:03:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் /துப்பாக்கி உள்ளிட்ட அனைத்து வகையான ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்// இது ஒரு தைரியமான நடவடிக்கை. அமெரிக்காவில் அரசியல்வியாதிங்க இப்படி யோசிக்க சொன்னாலே போதும், ....போயிருவாங்க..
Rate this:
Cancel
21-மார்-201922:07:05 IST Report Abuse
kulandhai Kannan New Zealand PM is playing to the international gallery without realizing the ground reality
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-201908:21:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்She is standing tall and has the guts to save innocent New Zealanders, unlike the clowns bending down on their knees to corporate greed and war mongers....
Rate this:
Cancel
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
21-மார்-201913:11:15 IST Report Abuse
Jey Kay - jeykay@email.com மலேசியாவில் இந்து சமூகம் எல்லா துறைகளிலும் கோலாச்சி கொண்டா இருக்கிறது இல்லையே நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தானே இருக்கிறது, மலேசியாவில் இந்து சமூகம் கவர்னர் ஆகவோ அல்லது பிரதமராக வோ வர முடியாதே, இந்தியாவில் முஸ்லீம் சமூகம் ஒடுக்கப்பட்டா இருக்கிறது இங்கே முஸ்லீம் சமூகம் ஜனாதிபதியாக கூட ஆக முடியுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X