பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : மார் 21, 2019
Share
Advertisement

கழிப்பிட வசதி வேண்டும்: பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளி பூங்காவிற்கு, பல இடங்களில் இருந்தும், தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், வழக்கத்திற்கு மாறாக, கூட்டம் அதிகரிக்கும். கோடை விடுமுறையில், நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவர். இங்கு, போதுமான கழிப்பிட வசதி இல்லாததால், மிகவும் அவதிப்படுகின்றனர். கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ராதாகிருஷ்ணன், பாப்பம்பாளையம்.

பஸ்கள் வராததால் தவிப்பு: எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை பஞ்., நெய்க்காரன்பாளையத்தில், 100க்கும் அதிகமான குடியிருப்புகளில் வசிக்கிறோம். இப்பகுதியில் இதுவரை பஸ் வசதி இல்லை. மாறாக, நான்கு, கி.மீ., தொலைவில் இருக்கும் பெரிய மணலி சென்றுதான், பஸ் ஏற வேண்டியுள்ளதுது. மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, எங்கள் பகுதிக்கு பஸ்கள் வந்து செல்ல, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

- டி.பிரபு, நெய்க்காரன்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X