அரசியல் செய்தி

தமிழ்நாடு

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (25)
Advertisement
அதிமுக, தூத்துக்குடி, கனிமொழி, தமிழிசை

தூத்துக்குடி: தூத்துக்குடி, விளாத்திகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சின்னப்பன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசைக்கு பதில் கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில், கனிமொழி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பா.ஜ., ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக சின்னப்பன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று விளாத்திகுளம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சின்னப்பனுக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் சின்னப்பன் பேசும் போது, தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடனும், பிரதமராக இருந்து நாட்டை கட்டி காக்கின்ற மோடியின் ஆசி பெற்ற நமது கூட்டணி வேட்பாளர் அன்பு சகோதரி கனிமொழி என தவறாக கூறினார். இது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சிரிப்பையும் ஏற்படுத்தியது. இதன் பின் சுதாரித்து கொண்ட சின்னப்பன், தமிழிசை சவுந்திரராஜன் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-மார்-201914:38:09 IST Report Abuse
Malick Raja வாக்களிக்கப்படாமலே ,,வாக்குகள் எண்ணாமலே .. வெற்றி பெற்றிட வழிவகைகள் .. ஆக கலைஞரின் மகள் கனிமொழி அவர்களின் வெற்றிக்கு ஆக்கப்பூர்வ வாழ்த்துக்கள் சொல்லுமளவுக்கு அதிமுக பணியாற்றுகிறது வெளிப்படையாகிவிட்டது .. அதிமுக தொண்டர்கள் 99%. பிஜேபி கூட்டணிக்கு எதிரானவர்கள் பிஜேபியை ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவைக்கவே கூடாது என்று சபதம் செய்ய்துள்ளதாகவும் இரகசியம் இரகசியமாக லீக் ஆகி இருப்பதும் உண்மைதான்
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-மார்-201911:49:45 IST Report Abuse
Yaro Oruvanநீங்க எப்புடி பொலம்புனாலும் பாஜக தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.. ஜெலுசில் வாங்கி வைங்க. அப்புறம் ரொம்ப கஷ்டம்.. இருக்கவே இருக்கு ஏவம்.. பழியை தூக்கி EVM மேல போட்டுபுட்டு நாலு ஜெலுசில முழுங்கீட்டு வழக்கம்போல புலம்பலை ஆரம்பிச்சுரலாம்.. ஷ்ஷப்பாஆ இப்பவே கண்ண கட்டுதே....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்-201902:33:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உள்ளடி வேலைகள் வெளிப்படையாக ..
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201916:24:26 IST Report Abuse
Endrum Indian பெரும் செய்யற அளப்பரையும் சரியாகத்தானிருக்கு சின்னப்பா என்னப்பா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X