28 மாநிலம்; 225 பொதுக்கூட்டம்: மோடியின் ‛மின்னல்' திட்டம்

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (51)
Advertisement

புதுடில்லி: கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவதற்குள் நாடு முழுவதும் 28 மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கி.மீ., பயணம் செய்து 225 பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.மார்ச் 28 முதல் உ.பி.,யில் இருந்து லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் மோடி. அதன் பிறகு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கி.மீ., பயணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதில் 28 மாநிலங்கள், 225 பொதுக்கூட்டங்களும் அடங்கும்.







45 மொழிகள்:

பொதுக்கூ்டடங்களில் அந்தந்த பகுதிகளின் மொழிகளில் சில வார்த்தைகளை பேசவும் மோடி எண்ணி உள்ளார். இதற்கான ஒத்திகையும் நடந்து வருகிறது. அநேகமாக அவர் மொத்தம் 45 மொழிகளில் பேசுவார் என்கிறார்கள் அவரது கட்சியினர்.பொதுக்கூட்ட மேடை ஏற்பாடுகள், ஆடியோ ஸ்பீக்கர் சிஸ்டம் போன்றவற்றுக்கு மாநில கட்சியினரை நம்பி மோடி இருப்பதில்லை. இதிலும் தனக்கென்று தனி ஸ்டைலை வைத்திருக்கிறார். பந்தல் அமைக்கும் பொருட்கள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றுடன் 150 லாரிகள் தயாராக இருக்கின்றன. இவை நாடு முழுவதும் 15 இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.






இவை 200 கி.மீ., துாரம் வரை பயணம் செய்து மோடியின் கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும். இந்த லாரிகளில் பணியாற்றுவோர் இந்த விஷயத்தில் பயிற்சி பெற்றவர்கள். 2014 தேர்தலிலும் இவர்கள் மோடிக்காக வேலை செய்தவர்கள். இத




னால், மாநில பா.ஜ., நிர்வாகிகளுக்கு வேலை எளிதாகி விட்டது.பிரசாரத்திற்காக இந்திய விமானப்படை விமானத்தை மோடி பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளது. ஏற்கனவே இந்திரா, ராஜிவ் போன்றவர்களை வன்முறைக்கு இழந்துள்ளதால், மோடிக்கு தேர்தல் நடத்தை விதிமுறையில் இருந்து சுப்ரீம் கோர்ட் விலக்கு அளித்துள்ளது. ஆனால், விமானத்திற்கு ஆகும் செலவை பா.ஜ., ஏற்றுக்கொள்ளும். இதுவே 400 கோடி ரூபாய் வரை ஆகும் என்கிறார்கள்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-201908:04:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 225 குல்லா தொப்பி, 225 சட்டை, 225 ஜாக்கெட்டு, 225 மேடை, 225 பொதுக்கூட்டம் - ஒரே பொய்யி..
Rate this:
Share this comment
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
24-மார்-201903:34:24 IST Report Abuse
Varatharaajan Rangaswamyஅப்போ இவ்வளவு வருஷமா காங்கிரஸ் சொன்ன பொய்யுரைகளை நம்பித்தான் மக்கள் வோட்டு போட்டார்களா? இதென்ன பிதற்றலான வாதம்? ஜனநாயகத்தில் யாருக்கும் பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது ஆனாலும் ராகுல் இன்னமும் நரேந்திர மோதியை ஒவ்வொரு கூட்டத்திலும் வசைபாடுகிறார் எதிர் கட்சிகளின் தேச விரோத செயல்களுக்கு நரேந்திர மோதி அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளதை பொறுக்க முடியாத அனைவரும் கூட்டு சேர்ந்து நரேந்திர மோதியை எதிர்க்கின்றனர் என்பதே இந்த பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மக்கள் அறிந்துள்ள உண்மை...
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201922:03:20 IST Report Abuse
kulandhai Kannan இம்முறை பாஜக தனிப்பெரும்பான்மையாக 300 இடங்களுக்குமேல் வெல்லும்.
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-மார்-201914:42:08 IST Report Abuse
Malick Raja391.தொகுத்தியை பிஜேபி பீடிக்கும் என்று சொல்கிறார்கள் உண்மைதாநா...
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
21-மார்-201921:10:52 IST Report Abuse
Ramakrishnan Natesan நேர்மை கட்சி ஊழல் என்றால் என்னவென்றே தெரியா கட்சி இவ்வளவு 28 மாநிலம் 225 பொதுக்கூட்டம் இதற்ற்கு கோடி கணக்கில் ஆகும் பணம் எப்படி ஒருவேளை இவர்கள் காம்ரேடுகள் கிண்டல் செய்வார்களே உண்டி குலுக்கி என்று அதை செய்வார்களோ
Rate this:
Share this comment
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
24-மார்-201903:40:36 IST Report Abuse
Varatharaajan Rangaswamyநேர்மையான கட்சி என்றால், நன்கொடை வசூலித்து பொதுக்கூட்டம் நடத்தக் கூடாதா? கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை ஆட்டையை போட்டவனெல்லாம் இப்போ மக்கள் பணம் பற்றி பேசுவதாலேயே, நேர்மையாக கட்சி நடத்த வேண்டும் என்று விரும்பும் பாரதீய ஜனதாவை வசைபாடுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X