பொது செய்தி

இந்தியா

நிரவ் மோடியை முதலில் ‛அமுக்குவது' ஏன்

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: வங்கி கடன் மோசடி குற்றவாளியான விஜய் மல்லையாவை விட, இன்னொரு குற்றவாளியான நிரவ் மோடியை விரைவாக கைது செய்து இந்தியா கொண்டு வர பிரதமர் மோடி முனைப்பு காட்டுகிறார்.பார்ப்பதற்கு ஒரே மாதிரியான மோசடியாக தோன்றினாலும், மல்லையா, நிரவ் மோசடிகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது.வங்கிகளிடம் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை கட்ட முடியாமல், 2017 ல் இந்தியாவில் இருந்து

புதுடில்லி: வங்கி கடன் மோசடி குற்றவாளியான விஜய் மல்லையாவை விட, இன்னொரு குற்றவாளியான நிரவ் மோடியை விரைவாக கைது செய்து இந்தியா கொண்டு வர பிரதமர் மோடி முனைப்பு காட்டுகிறார்.



latest tamil news




பார்ப்பதற்கு ஒரே மாதிரியான மோசடியாக தோன்றினாலும், மல்லையா, நிரவ் மோசடிகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது.வங்கிகளிடம் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை கட்ட முடியாமல், 2017 ல் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லத்தகுந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி தப்பி ஓடினார் மல்லையா. இந்தியா கொடுத்த அழுத்தத்திற்குப் பிறகு ஒரு வழியாக மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உத்தரவிட்டது. இப்போது மல்லையாவின் மேல்முறையீடு அந்நாட்டு உள்துறை பரிசீலனையில் உள்ளது.


latest tamil news




ஆனால் நிரவ் மோடி, நிறைய நாடுகள் வழியாக பிரிட்டனுக்குள் செல்லாத பாஸ்போர்ட்டை பயன்படுத்தி நுழைந்தார். நிரவ் விவகாரத்தில், சி.பி.ஐ.,யும் அமலாக்கத் துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தன. அதில் ஏராளமான ஆவணங்கள் ஆதாரங்களாக காட்டப்பட்டன. 15 நாடுகளில் போலி கம்பெனிகள் மூலம் பணம் கையாளப்பட்டதும் நிரூபிக்கப்பட்டது.போலி கம்பெனிகள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6400 கோடி மோசடி செய்ததை குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தன சி.பி.ஐ.,யும் அமலாக்கத்துறையும். நிரவ் மோடியின் சொத்துகள் முடக்கப்பட்டன.


latest tamil news




கடந்த மார்ச் 19ம் தேதி லண்டனில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு துவக்க சென்ற போது நிரவை போலீசார் அமுக்கினர். ஜாமின் மனு மறுக்கப்பட்டு மார்ச் 29 வரை அவரை காவலில் வைக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டது. மோசடி செய்வதற்கான சதி திட்டம் தீட்டியதாக நிரவ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனாலேயே, மல்லையா வழக்கை விட, நிரவ் வழக்கில் அவரை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர முடிகிறது.


latest tamil news




பா.ஜ.,வுக்கு வெற்றி

நிரவை இந்தியாவுக்கு கொண்டு வந்துவிட்டால் அது பா.ஜ., அரசுக்கு பெரிய வெற்றியாக கருதப்படும் என அக்கட்சி நினைக்கிறது. நிரவ் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டால் மக்களின் காவலர் என்று மோடி அழைக்கப்படுவதற்கு ஏற்றதாக இருக்கும் என பா.ஜ., நினைக்கிறது. ‛‛திருட்டு காவலர்'' என மோடியை அழைக்கும் ராகுலுக்கு பதிலடி தந்தது போல் ஆகும் என்றும் பா.ஜ., கருதுகிறது.


latest tamil news




பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ், வெளிநாடு தப்பி ஓடியவர்களில் இதுவரை 18 பேரை மோடி அரசு இந்தியாவுக்கு கொண்டு வந்திருக்கிறது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் சம்மந்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலும் அதில் ஒருவர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-201908:56:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் .. சங்கர், ரகுராம் ராஜன் வாரா கடன்காரங்களோட லிஸ்டை வெளியிடணும்னு கேட்டுக்கிட்டார். அதை வெளியிட மறுத்துட்டாங்க. (யாருன்னு சொல்ல தேவையில்லை). ஸ்விஸ் வங்கி கருப்பு கணக்கு வச்சி இருந்தவங்க லிஸ்டும் அதே கதைதான். இதுவரைக்கும் வெளியிடவும் இல்லை. லிஸ்ட் வெளிவந்திருந்தால், மோடிஜிக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்குமே இந்த திருடனைப்பத்தி (எல்லா திருடன்களை பத்தியும்) தெரிஞ்சி இருக்கும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-மார்-201904:12:44 IST Report Abuse
J.V. Iyer எப்படி என்றாலும் கொள்ளை அடித்தவர்களையும், ஊழல் செய்தவர்களையும் நீதிக்கு முன் கொண்டுவரப்படவேண்டும். இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்ததே இந்த தேச விரோதிகள் மூலம் தான். ஜாமீனில் இருப்பவர்கள் குறை கூறி பயன் இல்லை. முதலில் தாங்கள் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-மார்-201900:10:02 IST Report Abuse
Mani . V நீரவ் மோ(ச)டி: "யோவ் ஜி, என்னை பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு இப்படி பின்னாடியே போலீஸை அனுப்பி கைது செய்கிறாயே இது தர்மமா? இது அடுக்குமா? இது எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியது ஆகாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X