ரூ.2000 நிதி திட்டம் நிறுத்திவைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.2000 நிதி திட்டம் நிறுத்திவைப்பு

Added : மார் 21, 2019 | கருத்துகள் (6)

சென்னை: தமிழக அரசின் சிறப்பு நிதி ரூ. 2000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரூ.2 ஆயிரம் வழங்குவது சரியல்ல. இதனை நிறுத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது.


அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ; வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில் சிறப்பு நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மக்கள் பலர் தங்களின் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் இருப்பதால், நாங்கள் இது தொடர்பான வழங்குதல் மற்றும் தகுதியானவர்கள் கணக்கெடுப்பு பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X