அரசியல் செய்தி

தமிழ்நாடு

9 தொகுதி, 20 கோடி, 300 பேர்: முட்டி மோதும் 'தலை'கள்

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (14)
Advertisement

சென்னை: ஐந்தாண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இல்லாத, காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான பண வறட்சி. இந்த சூழ்நிலையில் தான், தமிழக காங்கிரசுக்கு, 'ஜாக்பாட்' அடித்துள்ளது.தி.மு.க., கூட்டணியில், தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சீட் வாங்க இதுவரை இல்லாத கடும் போட்டி நிலவுகிறது. பெரிய, 'தலை'கள் முட்டி மோதுகின்றன. சென்னைக்கும், டில்லிக்கும் பறந்து பறந்து, 'லாபி' செய்வோர் ஏராளம். திடீரென்று ஏன் இந்த கடும் போட்டி என்பதை ஆராய்ந்தபோது அம்பலமானது, 'ஜாக்பாட்' ரகசியம்.

காங்., வேட்பாளர்களுக்கு பண வரவுக்கு வழி திறந்திருக்கிறது. அதுவும் கூட்டணிக்கு தலைமை தாங்கும், தி.மு.க.,வில் இருந்து. அதை கைப்பற்றத்தான் இந்த அடிதடி. வழக்கமாக, அ.தி.மு.க., தான் கூட்டணி கட்சிகளின் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கும். தி.மு.க.,மேலிடத்தில் சல்லிக் காசு கண்ணில் காட்ட மாட்டார்கள். தலைமைக்கு நெருக்கமாக இருந்தால், கொஞ்சமாக கிடைக்கும். மற்றபடி, கொடுக்கும் பழக்கமே அங்கு கிடையாது.அது இந்த தேர்தலில் மாறியிருக்கிறது. அதற்கும் காரணம் இருக்கிறது.


கடந்த, 2009 தேர்தலில், காங்., 15 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறையும் அதே, 15 கேட்டது. 'தேசிய அளவில், பா.ஜ.,வுக்கு ஈடு கொடுக்கும் ஒரே கட்சி காங்கிரஸ். மூன்று மாநிலங்களில், ஆட்சியை பிடித்துள்ளோம். எனவே, 15 தர வேண்டும்' என, காங்., அடம் பிடித்தது. தி.மு.க., சம்மதிக்கவில்லை. கடைசியில், காங்கிரசை பணிய வைக்க, தி.மு.க.,வுக்கு இருந்த ஒரே அஸ்திரம், பணம். 'புதுச்சேரியை சேர்த்து, 10 தொகுதிகள் தருவோம். தமிழகத்தில் உள்ள, ஒன்பது தொகுதிகளுக்கு, தலா, 20 'சி' வீதம், 180 'சி' தேர்தல் செலவுக்காக தருகிறோம்' என்றது.


கஜானா காலியாக இருப்பதால் கவலையில் இருந்த காங்கிரசுக்கு இந்த, 'டீல்' பிடித்து விட்டது. சந்தோஷமாக ஒப்புக் கொண்டது. இந்த விஷயம் தெரிந்து தான், சத்திய மூர்த்தி பவனில் அத்தனை பெரிய கூட்டம். சென்னையில் உள்ள விடுதிகள் காங்., 'தலை'களால் நிரம்பி வழிகின்றன என்றால் பாருங்களேன். இருப்பதோ, ஒன்பது தொகுதி. அதை பிடிக்க, 300 பேர் போட்டி போடுகின்றனர். உதாரணமாக, காங்கிரசுக்கு செல்வாக்கே இல்லாத திருவள்ளூர் தொகுதியில், சீட் கேட்டு, 25 பேர் மோதுகின்றனர். காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள, திருச்சி தொகுதிக்கு செம, 'டிமாண்ட்'.

பைசா பிரயோசனம் இல்லாத பதவிகளுக்கே நாற்காலிகள் பறக்கும், வேட்டிகள் கிழியும். 20 'சி' வீதம், 180 'சி' வருகிறது என்றால் கேட்கவா வேண்டும். காங்., தலைமை, தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளது. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டு, பிரசாரத்தை தொடங்கி விட்டன. காங்கிரசில் வேட்பாளர் பட்டியலே ரெடியாகவில்லை. சீட் கிடைத்து விட்டால், தி.மு.க., தரும், 20 'சி'யில் செலவு போக, கணிசமாக ஒரு பகுதி சொந்தமாகும் என்ற கனவில் அட்வான்சாக அதற்கென சில, 'சி' செலவழிக்கவும் சிலர் தயார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
22-மார்-201907:42:03 IST Report Abuse
அம்பி ஐயர் 20 சி யா....??? திமுகவா....??? கொடுப்பார்களா....???ம்ஹூம்.... எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.... வாங்கி வாங்கி பழக்கப்பட்ட கைகள்.... கொடுக்குமா என்ன....??? அப்படியே கொடுத்தாலும் தன் கட்சிக்காரர்களே கேட்கமாட்டார்களா.... செலவுக்குப் பணம்....???
Rate this:
Share this comment
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
22-மார்-201906:23:13 IST Report Abuse
Ivan Bjp na udane Ambani atharni nu polambal, olachi sambarika mudiyatha teamuka fraud pathiri groups
Rate this:
Share this comment
Cancel
22-மார்-201906:20:13 IST Report Abuse
Aravamuthan Senthilkumar ....வேல பாக்குற...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X