அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர் 'இறக்குமதி': தேறுமா தே.மு.தி.க.,

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (12)
Advertisement

சென்னை: மூன்று தொகுதிகளுக்கு உள்ளூர் வேட்பாளர்கள் கிடைக்காததால், வேறு மாவட்ட நிர்வாகிகளை வேட்பாளர்களாக, தே.மு.தி.க., அறிவித்துள்ளது. இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர் புலம்புகின்றனர்.






அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கள்ளக்குறிச்சியில் போட்டியிட, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் விருப்பம் தெரிவித்தார். மற்ற தொகுதிகளில் கட்சியினர் யாரும் போட்டியிட விரும்பாததால், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என தத்தளித்த தலைமை, வேறு மாவட்ட நிர்வாகிகளை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி - மாநில துணை செயலாளர் சுதீஷ்; வடசென்னை - கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ்; திருச்சி - அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், விருதுநகர் - மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, வடசென்னை தொகுதிகளில், தி.மு.க.,வுடனும், விருதுநகர், திருச்சி தொகுதிகளில், காங்கிரசுடனும் தே.மு.தி.க., மோதுகிறது.


சுதீஷ் (கள்ளக்குறிச்சி):


இவர், 2009, லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சியில், 1.32 லட்சம் ஓட்டுகள் பெற்று, தோல்வியடைந்தார். ஏற்கனவே தோற்ற கள்ளக்குறிச்சியில் சுதீஷ் மீண்டும் நிற்கிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, இத்தொகுதியின், தி.மு.க., வேட்பாளர். எனவே, தே.மு.தி.க., வேட்பாளராக பிரேமலதா அல்லது விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மீண்டும் சுதீசுக்கு வாய்ப்பு கொடுத்ததால், கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர்.







அழகாபுரம் மோகன்ராஜ் (வடசென்னை):

சேலத்தை சேர்ந்த அழகாபுரம் மோகன்ராஜ், 2009 ல், சேலம் தொகுதியில் தோல்வி அடைந்தார். 2011 ல், சேலம் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 2016 சட்டசபை தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். தற்போது வடசென்னை தொகுதியில், தலைமை நிர்பந்தத்தால் போட்டியிடுகிறார்.






டாக்டர் இளங்கோவன் (திருச்சி):

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் இளங்கோவன், 2009 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011 உள்ளாட்சி தேர்தலில், தர்மபுரி நகராட்சி சேர்மன் வேட்பாளர்; 2016ல், தர்மபுரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். திருச்சியில், வேட்பாளராக போட்டியிட கட்சியினர் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனால், தலைமை இவரை நிறுத்தியுள்ளது. இப்படி, நான்கு தொகுதிகளில், மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்குமதி செய்து, தே.மு.தி.க., தலைமை நிறுத்தி இருப்பது சொந்த கட்சியில் மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளிலும் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
22-மார்-201913:36:39 IST Report Abuse
Jaya Ram எது எப்படியானாலும் அவர்கள் ஜெயித்தாக வேண்டும் அப்போதுதான் திமுகவை ஆட்டம் காண வைக்கமுடியும் இந்த தேர்தலில் தோற்றால் ஏற்கனவே போன பார்லிமென்ட் தேர்தலிலும் தோல்வி , சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி , தொண்டர்கள் வெளியேறிவிடுவார்கள் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் அடுத்து தேமு தி க., வி சி , ம திமுக என்று வரிசையாக வீட்டுக்கு அனுப்பலாம் ஏற்கனவே காங்கிரஸ் , பிஜேபி ஆகிவற்றினை எழும்பவிடாமல் செய்தாகிவிட்டது அடுத்து இவர்களும் அமுக்கப்பட்டால் தமிழ் நாடு நல்ல தலைவர்களை நாட முடியும் தமிழ் உணர்வுள்ள தமிழை தாய் மொழியாக கொண்டவர் மட்டுமே தேர்தெடுக்கப்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-மார்-201909:02:32 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை... சும்மா பாவலா காட்டுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-மார்-201906:21:15 IST Report Abuse
D.Ambujavalli லட்டுபோல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும், 29 பேருடன் இருந்ததைக் காப்பாற்றிக் கொள்ள சமர்த்தில்லை இப்போது வேட்பாளர் கூடக்கிடைக்காமல் ஏலம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இவர்களையும் இணைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறதோ அதிமுக? அவர்களுக்கென்ன, தோற்றாலும் வென்றாலும் ‘வர வேண்டியது’ வந்துவிட்டது
Rate this:
Share this comment
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
22-மார்-201916:37:16 IST Report Abuse
M Selvaraaj Prabu//லட்டுபோல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும், 29 பேருடன் இருந்ததைக் காப்பாற்றிக் கொள்ள சமர்த்தில்லை// உண்மை. "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" பாட்டுதான் நினைவுக்கு வருகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X