அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - அ.தி.மு.க., ஜாதி வலை: சிக்குவார்களா தமிழக மக்கள்?

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (13)
Advertisement

சென்னை: பெரும்பாலான கட்சிகள் இந்தத் தேர்தலில், ஜாதி ஓட்டுகளை நம்பி களம் இறங்கியுள்ளன.

எல்லா தேர்தலிலுமே, ஜாதி ஒரு அம்சமாக இருந்தது என்றாலும், இந்தமுறை, வட தமிழகத்தில் உள்ள வன்னியர்களும், கொங்கு மண்டல கவுண்டர்களும் குறைந்தது, 14 எம்.பி.,க்களை நமக்குத் தருவார்கள் என, முதல்வர் பழனிசாமி எதிர்பார்க்கிறார்.கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., - - அ.தி.மு.க., இடையே, ஓட்டு வித்தியாசம் வெறும், 1.5 சதவீதம். ஆனால், அ.தி.மு.க., அதிக இடங்களை பிடித்து, ஆட்சியில் அமர, கொங்கு மண்டலம் முக்கிய காரணமாக அமைந்தது. ஈரோடு மாவட்டத்தில், மொத்தம் உள்ள எட்டு தொகுதிகள்; கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளில் சிங்காநல்லூரை தவிர்த்து, ஒன்பது; திருப்பூர் மாவட்டத்தில், எட்டு தொகுதிகளில், ஆறு; நாமக்கல் மாவட்டத்தில், ஆறு தொகுதிகளில், ஐந்து; சேலம் மாவட்டத்தில், 11 தொகுதிகளில், 10 இடங்களில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
எனவேதான், கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பழனிசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கு முக்கிய இலாகாக்களை கொடுத்து, அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. இந்த முறையும், கொங்கு பகுதியில் பெரும்பாலான இடங்களை, அ.தி.மு.க., தனக்கென வைத்துக் கொண்டுள்ளது. பா.ம. க.,வை சேர்த்ததன் மூலம், வட தமிழகத்தில் உள்ள வன்னியர் ஓட்டுகளை பெற்றுவிடலாம்; இதனால், வடக்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை வெல்ல முடியும் என்பது, பழனிசாமி கணக்கு. பா. ஜ.,வும் இருப்பதால், இந்த கூட்டணி வெற்றி வாகை சூடும் என, அ.தி.மு.க., தலைமை உறுதியாக நம்புகிறது.


ஆனால், கொங்கு மண்டலத்தில், கவுண்டர்கள் மட்டுமின்றி இதர சமூகத்தினரும், அ.தி.மு.க.,வுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர் என்பதையும், அதற்கு காரணம் ஜெயலலிதா என்ற ஆளுமைதான் என்பதையும் பழனிசாமியே மறுக்க முடியாது. தங்கள் பகுதியை சேர்ந்தவர் என்ற, ஒரே காரணத்துக்காக ஜெயலலிதா இடத்தில், பழனிசாமியை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. அதே போல, தேவேந்திர குல வேளாளர்களின் பிரதிநிதியாக, ஜான் பாண்டியனையும், கிருஷ்ணசாமியையும், தங்கள் அணியில் சேர்த்துள்ளார் பழனிசாமி.

கிருஷ்ணசாமி, தேவேந்திர குல வேளாளர்களை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு மாற்ற கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை அந்த சமூகத்து மக்களில் பெரும்பாலானோரே ஏற்றுக் கொள்ளவில்லை. கிருஷ்ணசாமியும், அவர் மகளும், இட ஒதுக்கீட்டு சலுகையை பெற்றுவிட்டு, மற்றவர்களுக்கு அந்த சலுகை வேண்டாம் என தடுக்க பார்ப்பது என்ன நியாயம் என்ற முணுமுணுப்பை அந்த சமூகத்தினரிடம் பார்க்க முடிகிறது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கையை வைக்கும் கிருஷ்ணசாமியே, தனி தொகுதியில் நிற்பது வேடிக்கை.

மறுபுறம், தி.மு.க.வும், கொங்கு பகுதியில் ஓட்டுகளை பெறுவதற்காக, கொங்கு ஈஸ்வரனுக்கு, ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது. பா.ம.க.,வை தங்கள் பக்கம் இழுக்க அக்கட்சி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தாலும், வட தமிழகத்தில், அது வன்னிய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ம.க.,வில் இருந்து பிரிந்து, தமிழக வாழ்வுரிமை கட்சியை நடத்திவரும், வேல்முருகனை தங்கள் பக்கம் இழுத்துள்ளது. இவர் வன்னிய ஓட்டுகளை பிரிப்பார் என, ஸ்டாலின் நம்புகிறார்.


இதே போல, வட தமிழகத்தில் வன்னியர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் ஓட்டுகளை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பெற்றுத் தருவார் என்பது, ஸ்டாலின் கணக்கு. திருமாவளவனை சேர்த்ததால், இதர சமூகத்தினரின் ஓட்டுகளை இழக்க நேரும் என்று மூத்த தலைவர்கள் எச்சரித்ததை பொருட்படுத்தாமல், அவருக்கு, இரண்டு இடங்களை வழங்கியுள்ளார், ஸ்டாலின்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெளிப்படையாக ஜாதி ஓட்டுகளை நம்பியது இல்லை. ஜாதி செல்வாக்குகளை தாண்டியும் வெற்றியை தட்டிப் பறிக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. அந்த, இரு ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தி.மு.க., --- அ.தி.மு.க. தலைமைகள், 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. சொந்த செல்வாக்கை விட, ஜாதி செல்வாக்கை நம்பி, களம் இறங்குகின்றன.


கடந்த கால தமிழக தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால், பெரும்பான்மை சமூகங்களை சேர்ந்தவர்களை விட, சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்களே வெற்றி பெற்று முதல்வர் ஆகியிருக்கின்றனர். ஜாதி கணக்கை மட்டுமே நம்பி, களம் இறங்கும் கட்சிகளுக்கு தமிழக மக்கள் ஏமாற்றத்தையே அளித்து வந்துள்ளனர். இந்த தேர்தலிலும், அப்படியொரு தெளிவான முடிவை, மக்கள் வழங்குவார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு, அது சரியான பாடமாக அமையும்; அமைய வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-மார்-201911:13:54 IST Report Abuse
S.Baliah Seer வன்னியர்கள் கடுமையான உழைப்பாளிகள். உழைத்து மேலே வரவேண்டும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் .ஏன் மருத்துவர் அய்யா கூட நாடார் மக்களை பாராட்டி அவர்களைப் போல் வன்னிய மக்கள் உழைத்து மேலே வரவேண்டும் என்று மேடைகளில் பேசியுள்ளார்.எடப்பாடி அரசின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்ற சாட்டுகளைக் கூறி கவர்னரிடம் மனு கொடுத்திருக்கிறார். அது இன்னும் நிலுவையில் உள்ளது அப்படிப்பட்டவர் அண்ணா தி.மு.க வினரிடம் 500 கோடிக்குமேல் பணம் பெற்றுக்கொண்டு அண்ணா தி.மு.க -வுக்கு புகழாரம் சூட்டுகிறார் என்று காய்கறி வியாபாரம் செய்யும் வன்னிய மக்கள் கூட மருத்துவர் ஐயாவை வசைபாடுவதை கேட்டு வருகிறேன். காடுவெட்டி குரு குடும்பமும் இதைத்தான் சொல்லுகிறது . இலவசங்களை அடியோடு எதிர்த்தவர் இன்று அது நன் முறையில் போய் சேருகிறது என்று பேசுகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது ஜெ தங்களை பார்க்கவில்லை என்றும் அதே சமயம் மக்களோடு காற்று மழை வெள்ளம் என்று பார்க்காமல் நின்றவர் ஸ்டாலின் என்ற காரணத்தால் வன்னியர்களின் ஒட்டு சென்ற சட்டமன்ற தேர்தலில் பெருமளவில் தி.மு.க வுக்கு சென்றதை யாராவது மறைக்க முடியுமா . அப்படி இருக்க ஆட்சியில் இல்லாத திரு.ஸ்டாலினை வன்னியர்கள் புறக்கணிக்க காரணம் சொல்லுவாரா மருத்துவரய்யா. வெற்றிக்கூட்டணி என்றும் ,நாற்பதும் நமதே என்று ராமதாஸ் அய்யா அவர்கள் பேசுவது ....அவர் பேசிய நியாய தர்மத்தை அவரே குழிதோண்டி புதைத்ததை நியாயமான எந்த வன்னியரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.ஆக மருத்துவர் அய்யாவின் பின் வன்னியர்களும் ,திருமாவின் பின் தாழ்த்தப்பட்டவர்களும், டாக்டர் கிருஷ்ணசாமியின் பின் பள்ளர் வகுப்பினரும் அணிவகுத்து நிற்கிறார்கள் என்பது அறிவார்ந்த பேச்சாகாது.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
22-மார்-201910:18:04 IST Report Abuse
M.COM.N.K.K. தமிழர்கள் ஒருபோதும் சாதியை பார்த்து ஓட்டு போடமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
22-மார்-201909:22:29 IST Report Abuse
southindian தி மு க வை இந்த நாட்டில் இருந்து விரட்டினால் ஒழிய ஜாதி மதம் ஒழியாது . இவர்கள் போலி ஜாதி மத எதிருபாலார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X