இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை

Updated : மார் 21, 2019 | Added : மார் 21, 2019 | கருத்துகள் (49)
Advertisement

நியூயார்க்: இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்று என ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது






கடந்த 2012 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ம் தேதி உலக மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையடு்த்து ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நிலை குறித்து ஐ.நா.,பட்டியல் வெளியிட்டு வருகிறது. வருவாய், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியமான ஆயுட்காலம் சமூக ஆதரவு மற்றும் தராளமனப்பக்குவம் ஆகிய ஆறு வகைகளை மகிழ்ச்சியின் அளவுகோலாக கொண்டு முடிவு செய்யப்படுகிறது. இதன்படி கடந்த ஆண்டு இந்தியா 133 வது இடத்தில் இருந்தது. இந்தாண்டு அவை 7 இடங்கள் குறைந்து 140 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் 67-வது இடத்தையும், வங்கதேசம் 125-வது இடத்தையும்,சீனா 93 வது இடத்தையும் பிடித்துள்ளது.





மிக மோசமான நாடுகளின் பட்டியலில் மத்திய ஆப்ரிக்ககுடியரசு 155 வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 154 வது இடத்தையும், தான்சானியா 153 ருவாண்டா 152 வது இடத்தையும் பெற்றுள்ளன.

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் பின்லாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தையும், தொடர்ந்து டென்மார்க், நார்வே, ஐயர்லாந்து, நெதர்லாந்து நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
உலகின் பணக்கார நாடு என்ற பெருமை கொண்டிருக்கும் அமெரிக்கா 19-வது இடத்தை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajathiraja - Coimbatore,இந்தியா
22-மார்-201911:48:00 IST Report Abuse
Rajathiraja இந்த பிஜேபி அரசின் தோல்வியை நிரூபிக்க இதைவிட சான்று வேறு தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
22-மார்-201911:26:39 IST Report Abuse
hasan மீண்டும் மோடி வந்தால் கண்டிப்பாக இன்னும் பத்து இடத்துக்கும் மேல் பின்னோக்கி செல்வோம் , மீண்டும் மோடி வேண்டாம் மோடி
Rate this:
Share this comment
Cancel
Sathiyanathan - Paris,பிரான்ஸ்
22-மார்-201911:26:14 IST Report Abuse
Sathiyanathan யாரப்பா சொன்னது மகிழ்ச்சி இல்லையென்று, இங்கே பசுமாடு எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கு ஆமாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X