கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மதுரை தேர்தலை தள்ளி வைக்க முடியாது' ஐகோர்ட்டில் ஆணையம் திட்டவட்டம்

Added : மார் 21, 2019
Advertisementசென்னை, 'மதுரை லோக்சபா தேர்தலை தள்ளி வைக்க இயலாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.தமிழகம், புதுச்சேரிக்கு, ஏப்., ௧௮ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்., ௧௮ம் தேதி, மதுரையில் தேரோட்டம், மறுநாள் கள்ளழகர், ஆற்றில் இறங்கும் விழா இருப்பதால், மதுரை லோக்சபா தேர்தலை தள்ளி வைக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பார்த்தசாரதி என்பவர் மனு தாக்கல் செய்தார்.மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. பின், இம்மனு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.ஆலோசனைதேர்தல் ஆணையம் சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தாக்கல் செய்த பதில் மனு:தேர்தல் ஆயத்தப் பணிகள் மற்றும் உள்ளூர் விடுமுறை குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியது. கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் விழா, ஏப்., ௧௯ என்பதால், அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.மாவட்ட தேர்தல் அதிகாரி, மதுரை போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், அறநிலையத் துறை இணை கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோருடன், பல முறை ஆலோசனை நடத்தப்பட்டது. ஏப்ரல், 18 ம் தேதி, காலை, ௬:௦௦ மணிக்கு தேரோட்டம் துவங்கி, மதியம், 12.:௦௦ மணிக்கு முடிகிறது.சுதந்திரமான தேர்தல் நடப்பதற்கு, அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. 112 ஓட்டுச்சாவடிகளில், இரண்டு மணி நேரம் கூடுதலாக ஓட்டுப்பதிவு நடத்த, மாவட்ட தேர்தல் அதிகாரி பரிந்துரைத்தார்.ஏப்., 19 ம் தேதி தான், வெளியூர்களில் இருந்தும், உள்ளூரில் இருந்தும், பெருமளவு பக்தர்கள் கூடுவர்.எனவே, கூடுதல் போலீஸ் படையை வைத்து, சுதந்திரமாக தேர்தலை நடத்தி முடிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. இந்தியா முழுவதும் தேர்தல் நடத்துவதை பரிசீலித்திருப்பதால், மதுரை தொகுதி தேர்தலை மாற்றுவதற்கு சாத்தியக்கூறு இல்லை. தேர்தல் நடத்தும் முறை பற்றி, இறுதி முடிவெடுக்க, ஆணையத்துக்கு தகுதி உள்ளது.அட்டவணைதேர்தல் நடத்துவது என்பது, நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயம்; அதை, கேள்வி கேட்க முடியாது. மத விழாக்கள், ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வு. இதை காரணம் காட்டி, தேர்தலை தள்ளி வைக்க முடியாது. தேர்தல் நேரத்தில், ரம்ஜான், நோன்பு, புனித வெள்ளி, மகாவீர் ஜெயந்தி போன்ற நிகழ்ச்சி கள் வருகின்றன.எல்லாவற்றையும் பரிசீலித்து தான், தேர்தல் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.ஏப்., 18 ம் தேதி, பெரிய வியாழன் வருவதால், கிறிஸ்துவ தேவாலயங்களை ஒட்டி உள்ள, பள்ளி களில் அமைக்கப்படும் ஓட்டுச் சாவடிகளை மாற்ற வேண்டும்.இல்லையெனில், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர், பேராயர் அந்தோணி பப்புசாமி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின், நிர்வாக அறங்காவலர், இனிகோ இருதயராஜ், மனுக்கள் தாக்கல் செய்தனர்.இதற்கு, தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தேர்தல் நடத்தும் போது, ஒருவரது மத வழிபாட்டு உரிமையில், எந்த குறுக்கீடும் செய்வது இல்லை. 'வழிபாட்டு தலங்களை அணுக, எந்த இடையூறும் ஏற்படாமல், தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கில், இரு தரப்பு வாதங்களும் முடிந்ததால், இன்று உத்தரவு பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X