அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 உளவு! ,தி.மு.க., - அ.தி.மு.க.,, தேர்தல்,வியூகங்கள், 'லீக்'

தி.மு.க., - அ.தி.மு.க.,வில், 'சீட்' கிடைக்காதவர்களின் ஆதரவாளர்களால், தேர்தல் வியூகங்கள், 'லீக்' ஆவதாக, இரு கட்சிகளின் தலைமைக்கும், அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, திடீர் ஒற்றர்களாக மாறிய, அதிருப்தியாளர்களை சரிக்கட்டும் நடவடிக்கைகளில், இரு கட்சிகளும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.

ஜெயலலிதா இருந்த போது, தேர்தலில், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரின் வெற்றிக்கு, கட்சியினர் தீவிரமாக வேலை செய்வர். அதேபோல, கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கும் வேலை பார்ப்பர்.20 - 20தற்போது, ஜெயலலிதா இல்லாத நிலையில், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், முதல் லோக்சபா தேர்தலை, அ.தி.மு.க., சந்திக்கிறது.

இந்த தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.இதனால், 20 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய, அ.தி.மு.க., 20ல் போட்டியிடுகிறது. அதில், ஆறு, எம்.பி.,க்களுக்கு மட்டும், மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே, 'சீட்' கிடைக்காமல், அதிருப்தியில் உள்ளவர்களின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க., தேர்தல் வியூகங்களை, மாற்று கட்சியினருக்கு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பலமான கூட்டணி அமைந்ததால், எம்.பி.,க்கள், மீண்டும், இந்த தேர்தலில் எப்படியாவது, சீட் வாங்க விரும்பினர். ஆனால், கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகமானதால், அவற்றுக்கு ஒதுக்கியது

போக, மீதமுள்ள தொகுதிகளில் தான், அ.தி.மு.க., போட்டி இடுகிறது. முதல் முறையாக, அ.தி.மு.க.,வில், மூத்த நிர்வாகிகளின் வாரிசுகள், நான்கு பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பகுதி செயலர், இணை செயலர் என, கட்சியில் சாதாரண பதவி வகிப்போருக்கும் சீட் வழங்கப்பட்டு உள்ளது.

'நோ' ரகசியம்!


இதனால், ஏற்கனவே, எம்.பி.,யாக இருந்த சிலர் சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த, மாவட்நிர்வாகிகள் பலர், கடும் அதிருப்தியில் உள்ளனர். சில தொகுதிகளில், தங்களின் சிபாரிசை மீறி, எதிர் கோஷ்டியினருக்கு சீட் கொடுத்துள்ளதால், ஆங்காங்கே சில மாவட்ட செயலர்களும், அதிருப்தியில் உள்ளனர்.

தற்போது, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில், தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பி உள்ளனர். அவர்கள், தொகுதி வாரியாக, வேட்பாளர் அறிமுக கூட்டம், செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி, 'வாக்காளர் கவனிப்பு, தேர்தல் நிதி' உள்ளிட்ட ரகசிய விஷயங்களையும், ஓட்டு சேகரிப்பு தொடர்பான வியூகங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த கூட்டத்தில் சீட் கிடைக்காதவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும், சம்பிரதாயத்திற் காக பங்கேற்கின்றனர். தலைமை எதிர்பார்ப்பது போல, அவர்கள் ரகசியம் காப்பதில்லை. அதனால், அங்கு பேசப்படும் விஷயங்களும், வியூகங்களும், எதிர் தரப்புகளுக்கு கசிந்து விடும் தகவல் தெரியவந்துள்ளது.

ஆடியோ, வீடியோ'


அ.தி.மு.க.,வின், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு, அதிருப்தி நிர்வாகிகள் பங்கேற்காமல், அவர்களின் ஆதரவாளர் களை மட்டும் அனுப்பி வைக்கின்றனர். அவர்கள், அங்கு நடக்கும் நிகழ்வுகளை, 'ஆடியோ, வீடியோ' பதிவு செய்து, 'வாட்ஸ் ஆப்' வழியாக, மாற்று கட்சியினரிடம் பகிர்கின்றனர். இரு தரப்பிலும் கவனிப்பதால், அவர்கள்உற்சாகமாக இந்த வேலையை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதேபோன்ற காட்சிகள், தி.மு.க.,விலும் காணப்படுகிறது. 'சீட்' கேட்டு கிடைக்காதவர்கள், இக்கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தென்காசி, வடசென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில், தி.மு.க.,வில் அதிருப்தி குரல் ஒலிக்கிறது.

தர்மபுரியில், முன்னாள் எம்.பி., உள்பட சிலர், 'சீட்' எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களில் யாருக்கும் தரப்படாமல், செந்தில்குமார் என்ற புதுமுகத்துக்கு கிடைத்துள்ளது. சேலம் தொகுதியில், தே.மு.தி.க.,வில் இருந்து வந்த, முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்திபனுக்கு, 'சீட்' கொடுத்துள்ளனர். இதனால், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அ.தி.மு.க., மற்றும் புதிய தமிழகம் கட்சிகளில் பொறுப்பில் இருந்தவரின் மகனுக்கு, தென்காசி தொகுதியில், தி.மு.க., வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர், முன்னாள் அமைச்சர் என்பதால், உள்ளூர் தி.மு.க.,வினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். வேட்பாளரை மாற்றக் கோரி, அறிவாலயத்திற்கு, புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

இதுபோன்ற, 'சீட்' கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள், தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமலும், வேட்பாளருடன் ஒட்டாமலும், தனித்து இயங்குகின்றனர். இவர்கள் வாயிலாக, தேர்தல் வியூகங்கள் கசிய வாய்ப்பு இருப்பதால், தி.மு.க., தலைமையும் கடும்அதிர்ச்சி அடைந்துள்ளது. எந்தெந்த தொகுதிகளில், யார் யார் அதிருப்தியாளர்கள் என்பதை கண்டறியும் பணி, இரு கட்சி வட்டாரத்திலும் நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவுக்கு முன், அவர்களை சரிக்கட்டும் பொறுப்பு, அ.தி.மு.க.,வில் அமைச்சர்களுக்கும், தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் தரப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (18+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
22-மார்-201912:17:22 IST Report Abuse

s.sivarajanஇது தேர்தல் season இப்ப கட்சிக்காரனைவிட ஊடகங்கள் அதிகமாக சம்பாதிக்க வாய்ப்பான காலம் கலக்குக

Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
22-மார்-201911:24:38 IST Report Abuse

சிவ.இளங்கோவன் .அதிமுக அடிமைகளை அவனுங்களுக்குள்ளே அடித்துக்கொண்டு சாகட்டும் .. மற்றவர்களுக்காகவாது விடிவுகாலம் பிறக்கும்

Rate this:
sridhar - Chennai,இந்தியா
22-மார்-201917:31:59 IST Report Abuse

sridharஅடித்துக்கொண்டு சாகட்டும்.. அடடா , என்ன நாகரீகம். நீங்க கொஞ்சம் செஞ்சி காட்டுங்களேன்....

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
22-மார்-201909:23:38 IST Report Abuse

கைப்புள்ளஅடுத்தவனோடாத ஆட்டையை போட்டு அனுபவிக்கிறதுல தி.மு.க காரனுகளை அடிச்ச்சுக்கவே முடியாது. அவனுகதான் நம்பர் ஒன். அது உயிரற்ற அசையா பொருட்கள் ஆன வீடு, நிலம், தோட்டம், தொரவு, பத்து, பாத்திரம் எதுவாக இருந்தாலும் சரி, அல்லது உயிருள்ள பொருட்ட்கள் ஆன கட்சிக்காரன், மற்றும் கட்சிக்காரன் பொ....., எதிர் கட்சிக்காரன், எதிர் கட்சிக்காரன் பொ....., பினாமி, பினாமியோட பொ...., அல்லது எதுலயும் சேராத அப்பாவி, அப்பாவியோட பொ..... இப்புடி எது இருந்தாலும் ஒரு வகை தொகை இல்லாம கண்டமேனிக்கு அபகரித்து திம்பதில் தி.மு.க காரனுகளை மிஞ்சவே முடியாது. இனி எவன் சொத்தை எல்லாம் ஆட்டையை போட போறானுகளோ, நெனச்சாலே கதி கலக்குது.

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
22-மார்-201912:55:49 IST Report Abuse

raghavanஇதெல்லாம் புரிஞ்சும், தெரிஞ்சும் இவனுங்களுக்கு ஒட்டு போடுறானுங்களே அவங்களை சொல்லணும்....

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X