கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நம்நாட்டில் சர்க்கரை நோயாளிகள் எத்தனை பேர் உயர்நீதிமன்றம் கேள்வி

Added : மார் 21, 2019
Advertisement

மதுரை, நம்நாட்டில் சர்க்கரை நோயாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரத்தை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை கேசவன் தாக்கல் செய்த மனு: முதல்வகை சர்க்கரை நோய் (டைப் 1) குழந்தைப் பருவத்தில் வருகிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோய் (டைப் 2) வயதானவர்களுக்கு வருகிறது. முதல்வகை சர்க்கரை நோயாளிகளுக்கு கண்காணிப்பு, மருத்துவ உதவிகள் தேவை. இப்பாதிப்புள்ள மாணவர்களை மருந்து, பழங்கள், சாக்லேட், குடிநீருடன் தேர்வறைக்குள் அனுமதிக்க மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ,) 2017 பிப்.,21 ல் சுற்றறிக்கை அனுப்பியது. பள்ளி பொதுத்தேர்வு, யு.பி.எஸ்.சி., 'நீட்' உட்பட போட்டித் தேர்வுகள் எழுதச் செல்லும்போது அவர்களுக்குஉரிய உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை தேர்வறைகளுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. அனுமதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.மதுரை அரசு மருத்துவமனை சர்க்கரை நோய் பிரிவு தலைமை டாக்டர் (பொறுப்பு) சுப்பையா, மதுரை இ.எஸ்.ஐ.,மருத்துவமனை முதுநிலை டாக்டர் ராஜ்குமார் ஆஜராகி, 'டைப் 1 சர்க்கரை நோய் பாதிப்புள்ள மாணவர்கள் நிலைமையை சமாளிக்க இனிப்பு, மருந்து வைத்துக் கொள்வது அவசியம்' என்றனர்.நீதிபதிகள்: நம்நாட்டில் 'டைப் 1, டைப் 2' சர்க்கரை நோயாளிகள் எத்தனை பேர், இவர்களை மாற்றுத் திறனாளிகள் நல உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டம் உள்ளதா, சர்க்கரை நோய் பாதிப்பை கண்டறிய மருத்துவ முகாம் நடத்தப்படுகிறதா, சர்க்கரை நோய் சிகிச்சைக்கு டாக்டர்கள் எத்தனை பேர் உள்ளனர், மனுதாரர் கோரும் நிவாரணத்திற்கு திட்டம் எதுவும் உள்ளதா என மத்திய, மாநில அரசுகள் ஏப்.,4 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X