மாணவர்களுடன் தகாத உறவு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுடன் தகாத உறவு பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்'

Updated : மார் 22, 2019 | Added : மார் 22, 2019 | கருத்துகள் (53)
Share
மாணவர்களுடன் தகாத உறவு பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்'

திருவண்ணாமலை ஆரணியில், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பணியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்
பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ்குமார், 45; கல்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி நித்யா, 30, மாமண்டூர் அரசு பள்ளி
ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.கடந்த, 2016-ல், பையூர் அரசு பள்ளியில் நித்யா பணிபுரிந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில பாடம் டியூசன் எடுத்தபோது, 17 வயது பள்ளி மாணவன் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஆசிரியை நித்யா, செங்கம் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கும் ஒரு மாணவனுடன் தொடர்பு ஏற்பட்டது. மாணவர்களுடன் தனிமையில் இருந்த போது, ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார். இரு மாணவர்களையும் தனித்தனியாக வெளியூர் அழைத்து சென்று, ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு உமேஷ்குமாருக்கு, மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
பள்ளி விடுமுறை நாளில், நித்யா வீட்டில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது போனை எடுத்து பார்த்த உமேஷ்குமார் அதிர்ச்சியடைந்தார்.
அதில், இரு மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, தனிமையில் இருந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதையடுத்து, மனைவியை பிரிந்தார் உமேஷ்குமார். மாணவர்களுடன் நித்யா, தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். பின், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் ஆகியோர் விசாரித்ததில் உண்மை என, தெரிய
வந்தது.
இதுகுறித்து, ஆரணி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து ஆசிரியை நித்யாவை, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து, நித்யாவை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X