இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடந்தால் பாக்.,கிற்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை

Added : மார் 22, 2019
Advertisement

வாஷிங்டன், 'இந்தியா மீது, மீண்டும் ஒரு பயங்கர வாத தாக்குதல் நடந்தால், நிலைமை விபரீ தமாகி விடும்; அது, பாகிஸ்தானுக்கு பெரும் ஆபத்தாக அமையும்' என, அமெரிக்கா
எச்சரித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், சமீபத்தில் நடத்திய தாக்கு தலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்குள் நம் விமானப் படை புகுந்து, பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதனால், இந்திய - பாக்., எல்லையில், பதற்றம் நிலவியது.இந்நிலையில், அமெரிக்காவின் அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பயங்கரவாதிக ளுக்கு எதிராக, பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, அமெரிக்கா விரும்புகிறது.
குறிப்பாக, ஜெய்ஷ்- - இ - -முகமது, லஷ்கர் - இ - தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது உள்ள சூழலில், இந்தியா மீது, மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால், நிலைமை மிக மிக மோசமாகி
விடும்; அது, பாகிஸ்தானுக்கு பெரும்
ஆபத்தாகிவிடும்.
பாகிஸ்தான் தரப்பு, சில பயங்கரவாத அமைப்புகளை முடக்கியுள்ளது. பயங்கரவாதிகள் சிலரது சொத்துகளையும் முடக்கியுள்ளது. இது போதாது; உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள், சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிவதை, பாக்., தடுக்க வேண்டும். இது சம்பந்தமாக, அமெரிக்கா, பல நாடுகளுடன் பேசி, பாகிஸ்தானுக்கு நெருக்கடியை அதிகரிக்க முயற்சித்து வருகிறது.சர்வதேச அளவில், நிதி உட்பட பல்வேறு உதவிகளை பெற, பயங்கரவாதிகள் மீது, பாக்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிடில், சர்வதேச அளவில், பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு, அமெரிக்கா எந்த உதவியும் செய்யாது.
இவ்வாறு, அவர் கூறினார்.
சீனாவுக்கு பொறுப்பு உள்ளது
பயங்கரவாத விவகாரம் குறித்து, வெள்ளை மாளிகை அதிகாரி கூறியதாவது:
ஜெய்ஷ் - இ - முகமது தலைவன் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிவிக்க முடியாமல், சீனா முட்டுக்கட்டை போட்டது, ஏமாற்றம் அளிக்கிறது. பாகிஸ்தானை பாதுகாப்பதை நிறுத்தி விட்டு, பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வலியுறுத்தும் பொறுப்பு, சீனாவுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X