பொது செய்தி

இந்தியா

சொத்து விபரம் வெளியிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

Added : மார் 22, 2019 | கருத்துகள் (17)
Advertisement

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில், தற்போது, 27 நீதிபதிகளில், தலைமை நீதிபதி உட்பட, ஏழு நீதிபதிகள் மட்டுமே, தங்கள் சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.



'நீதித்துறையின் செயல்பாடு ஒளிவு மறைவற்று இருக்க வேண்டும் என்பதற்காக, நீதிபதிகள், தங்கள் சொத்து விபரங்களை, தாங்களே முன் வந்து தெரிவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில், சொத்து விபரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில், 27 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உட்பட, ஏழு நீதிபதிகள் மட்டுமே, தங்கள் சொத்து விபரங்களை, இதுவரை வெளியிட்டுள்ளனர்.



தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், கடந்த ஆண்டு ஜூனில், தன் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளார். அதில், தன் தாய், தனக்கு அன்பளிப்பாக வழங்கிய, அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள நிலத்தை விற்றதில், 65 லட்சம் ரூபாய் கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும், தனக்கும், தன் மனைவிக்கும், சொந்தமாக வாகனங்களும் இல்லை என்றும், கடனும் இல்லை என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள், பானுமதி, கன்வில்கர், அசோக் பூஷண், அருண் மிஸ்ரா, என்.வி.ரமணா, எஸ்.வி.பாப்டே ஆகியோரும், தங்கள் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
22-மார்-201914:36:14 IST Report Abuse
.Dr.A.Joseph மற்றவர்கள் மடியில் கனமோ என்னவோ?
Rate this:
Share this comment
Cancel
22-மார்-201911:40:06 IST Report Abuse
சுடலை ஊருக்கு உபதேசம் செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
P.Rengaraj - Madurai,இந்தியா
22-மார்-201911:28:49 IST Report Abuse
P.Rengaraj இதை மோடி தட்டி கேட்டால் நீதி துறையில் தலையீடு என்று எதிர்க்கட்சிகள் கூச்சலிடும் . நீதி அனவைருக்கும் சமம் தானே? சட்டம் அனைவருக்கும் ஒன்றுதானே? அரசு சம்பளம் வாங்கும் அனைவரும் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும் இல்லாவிடில் சம்பளம் கிடையாது என்று எல்லா மாநில அரசுகளும் சட்டம் இயற்றுமாறு உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி அல்லது ஜனாதிபதி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர் அனைவரின் கடமை என அந்த உத்தரவில் தெளிவு படுத்தவேண்டும். இதில் பாரபட்சம் யாருக்கும் கிடையாது என்றும் உத்தரவிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X