மீண்டும் மோடி? மே 23ல் தெரியும்

Updated : மார் 22, 2019 | Added : மார் 22, 2019 | கருத்துகள் (33)
Advertisement

'மத்திய அரசில், பெரிய அளவில் ஊழல் ஏதும் வெளியாகவில்லை' என்பதால் மட்டுமே, பா.ஜ.,வை மீண்டும் தேர்ந்தெடுக்க, மக்கள் தயாராக உள்ளனரா?



பொருளாதார நிபுணராக இருந்தாலும், சோனியாவின் கை பொம்மையாக செயல்பட்டதாலும், முக்கியமான எந்த தருணத்திலும், வாய் மூடி மவுனியாகவே, ஆட்சியை நடத்தியதால், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் மீது, மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், கடந்த ஆட்சி காலத்தில், நாள்தோறும் வெளிவந்த ஊழல்களால், 'காங்கிரஸ் கட்சிக்கான மாற்று என்ன?' என, மக்கள் தேடினர். அந்த சமயத்தில், குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியை, 'டிஜிட்டல்' கதாநாயகனாக, பா.ஜ., முன்னிறுத்தியது.
காங்., மீதான வெறுப்பும், கம்பீரமான தலைவர் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், மோடிக்கு பெரும் ஆதரவாக அமைந்தது. 2014 லோக்சபா தேர்தலில், 282 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை அரசாக, பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தது. மோடியும் பிரதமரானார். உண்மையாகவே, அதன்பின், இந்திய இளைஞர்கள் மத்தியில், உற்சாகம் ஊற்றெடுத்தது. அவரது பேச்சு, மக்களை கவர்ந்தது. 'துாய்மை இந்தியா, மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்கள், இந்தியாவின் கடைக் கோடி மக்கள் வரை சென்றடைந்து இருக்கிறது.
'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் மூலம், பண பரிமாற்றம் அடுத்தகட்டத்தை நோக்கி, குதிரை பாய்ச்சலில் சென்றுள்ளது. மொபைல் போன் வழியாகவே, வங்கி, உணவு, வாகனம், கட்டணம், வரி என, அனைத்து பரிமாற்றங்களும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மோடியின் ஆட்சியில், புல்லட் ரயில், மெட்ரோ ரயில் என, புதிய கட்டுமானங்கள் அதிகரித்தன. நிர்வாக முறைகேடுகள், பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளன. உலக அரங்கில், இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இதற்கெல்லாம், பா.ஜ., தலைமையிலான அரசின் நடவடிக்கை தான் காரணம்.
அதே சமயம், மக்களுக்கு என்னென்ன அதிருப்திகள் உள்ளன என்பதையும், பா.ஜ., தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான விளக்கத்தை, வெள்ளை அறிக்கை போல வெளியிட வேண்டும்.பண மதிப்பிழப்பு நடவடிக்கையில், பல்வேறு இடைஞ்சல்களை அனுபவித்த போதும், மக்கள் அதற்கு ஆதரவளித்தனர். ஏனெனில், ஊழல்வாதிகள், கறுப்பு பணம் பதுக்கி வைத்திருந்தோர், அகப்படுவர் என்ற எதிர்பார்ப்பு.



ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், என்ன பலன் கிடைத்தது; எத்தனை, கறுப்பு பண முதலைகள் சிக்கினர்; பொருளாதாரத்தையே சீர்குலைத்தோர் மீது என்ன நடவடிக்கை பாய்ந்தது; எவ்வளவு கறுப்பு பணம் மீட்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு, இதுவரை, பா.ஜ., அரசு, தெளிவாக விடை அளிக்கவில்லை. இதன் காரணம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், பெரும் கறுப்பு பண முதலைகள் யாரும் பாதிக்கப்படவில்லை; அப்பாவி மக்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டனர் என்பது தானா?
'பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், கறுப்பு பணம் வெளியே வரும்' என்றீர்கள்; ஆனால், சிறுவாடு சேர்த்து வைத்த அப்பாவி மக்கள் தான், வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையங்கள் முன், அவதிப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்தோர் யாரும், சிக்கவில்லை. அதேபோல, ஜி.எஸ்.டி., வரியால், நாடு முழுவதும், சிறு வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை, மறுப்பதற்கில்லை.
பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள் மற்றும், 'சூப்பர் மார்க்கெட்' எண்ணிக்கை, பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனால், சிறு வியாபாரிகள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் போதுமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.
பா.ஜ., ஆட்சி மீது, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு, 'ரபேல்' போர் விமானங்கள் வாங்குவதில், ஊழல் நடந்திருக்கிறது என்பது மட்டும் தான். ஆனால், அதையும் நிரூபிக்க முடியவில்லை. பா.ஜ., அரசு மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பது, மிக முக்கியமான, போற்றத்தக்க சாதனை தான். ஆனால் இது மட்டும் போதுமா?
மோடி தலைமையிலான மத்திய அரசு, ஐந்து ஆண்டுகள், ஆட்சியை நிறைவு செய்துள்ளது. அவர் எழுதிய தேர்விற்கான முடிவு, மே 23ல் தெரிந்துவிடும்.
- சி.கலாதம்பி, சமூகஆர்வலர்

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-மார்-201919:43:48 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மோடி அவர்கள் சுயநல வாதி அல்ல . பொதுநல வாதி. ஊழலுக்கு எதிரி. குடும்ப ஆட்சிக்கு முற்று புள்ளியானவர். அவர்மீண்டும் நாட்டை ஆள பெருந்தகுதியானவர். இறைவன் துணையுடன் மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
22-மார்-201917:56:24 IST Report Abuse
vnatarajan சிறு குறு வியாபாரிகளின் வோட்டு மற்றும் விவசாயிகளின் peruumpaamai ஓட்டுக்கள் பிஜேபி க்கு விழுவது சந்தேகமே. ஆனால் டிஜிட்டல் இந்தியாவின் வெற்றிக்கு மேலும் வளர கண்டிப்பாக இளைனர்கள் பிஜேபி க்கு வோட்டுப்போடுவார்கள். அடுத்த பிரதம மந்திரி மோடிதான். அவருக்கு அட்வான்ஸ் கங்கிராஜுலேஷன்.
Rate this:
Share this comment
Cancel
22-மார்-201915:33:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மீண்டும் மோடிதான் , அதில் சந்தேகமென்ன , பப்பு , பப்பியை நம்பி நாட்டை ஒப்படைக்க முடியாது. நாட்டை ஆள்வது சிறுபிள்ளை விளையாட்டல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X