அரசியல் செய்தி

தமிழ்நாடு

உச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்'

Updated : மார் 22, 2019 | Added : மார் 22, 2019 | கருத்துகள் (79)
Advertisement
உச்சகட்ட பேரம்,கட்சி தாவும்,தலைகள்

லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வில், 'சீட்' கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த முக்கிய பிரமுகர்கள், தி.மு.க.,விடம் பேரம் பேசுவதாக தெரிகிறது.

அ.ம.மு.க.,வில், மாவட்ட செயலர் பதவி வகித்த, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அக்கட்சி துணை பொதுச்செயலர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தி.மு.க.,வில் இணைந்தார்.
அவருக்கு, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என, தி.மு.க., தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

அதேபோல், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க.,வில் வாய்ப்பு அளிக்கவில்லை. அதிருப்தி அடைந்த அவர், சமீபத்தில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தார். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, ராஜகண்ணப்பன் பிரசாரம் செய்ய உள்ளார்.
அதற்கு பரிசாக, அவருக்கு அடுத்த சட்டசபை தேர்தலில், சீட் வழங்க, தி.மு.க., தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அ.ம.மு.க., சார்பில், மத்திய சென்னையில் போட்டியிட, மாவட்ட செயலர் கலைராஜன் விரும்பினார். ஆனால், அந்த தொகுதியை, கூட்டணி கட்சியான, எஸ்.டி.பி.ஐ.,க்கு, அ.ம.மு.க., ஒதுக்கியது. இதனால், அதிருப்தி அடைந்த கலைராஜன், திருச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.
அவருக்கும், அடுத்த சட்டசபை தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இப்படி, அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வில், சீட் கிடைக்காத பிரமுகர்கள், பேரம் பேசி, தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
francis - chennai,இந்தியா
28-மார்-201912:47:15 IST Report Abuse
francis குற்றவாளி என்று மகுடம் சூட்டப்பட்ட ஜெயாவும் அதன் கட்சியான அ தி மு க வெற்றி பெறவே கூடாது.. ஒருவேளை மக்கள் வெற்றி பெற வைப்பார்களே யானால்.. ஆட்சியாளர்கள் அனைவருக்கும் ஒரு எண்ணம் கண்டிப்பாக வந்து விடும்.. அது என்ன என்றால் மக்கள் அனைத்தும் மறந்து விடுவார்கள்.. அதனால் இப்போது நாம் என்ன கொள்ளை அடித்தாலும் அவர்கள் மறந்து விடுவார்கள் என்ற ஒரு மன நிலைக்கு வந்து விடுவார்கள்.. ஆகவே ஆட்சியாளர்கள் குற்றம் செய்வதும்.. செய்யாமல் இருப்பதும் மக்கள் கையில் தான் உள்ளது..
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-மார்-201919:40:40 IST Report Abuse
Malick Raja இம்முறை திமுக வெல்வது உறுதி .. காரணம் எதிர்கூட்டணி சரி இல்லாத ஒன்றாகிப்போனபடியால் திமுகவின் வெற்றி தவிர்க்கப்படமுடியாத ஒன்றாகிவிட்டது .அதிமுக தனித்து நின்றிருந்தால் கூட 5.இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும் ..
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-மார்-201905:02:31 IST Report Abuse
meenakshisundaram திமுக ஒரு பிரைவேட் company ஆக்கப்பட்டு இருபந்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மதியிழந்த நிலையில் ஒரு குரங்கின் கையிலே பூமாலையை கொடுத்த வண்ணம் ஆட்சிக்கு தேர்வு செயது விட்டனர். அதன் விளைவே பொது வாழ்வில் இப்போது சாக்கடை கலந்து விட்ட நிலை .இதை திருத்த கமல் அல்லது ரஜினியால் முடியாது.தமிழன் தானே சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.உண்மையில் தமிழ் நாட்டை ஆபத்தே சூழ்ந்துள்ளது.காங்கிரஸும் கார்த்தி சிதம்பரம் போன்ற ஆட்கள் பின்னாலே போகிற நிலைமை?
Rate this:
Share this comment
Ramanathan V - chennai,இந்தியா
26-மார்-201913:40:30 IST Report Abuse
Ramanathan Vதமிழ் நாட்டை அடியுடு அழித்தது MGR ம், JJ வும் தான். தமிழனை காப்பாற்ற DMK தான் உள்ளது. எதோ காசு கிடைக்கிறது என்று எதையாவுது பேசவேண்டாம்....
Rate this:
Share this comment
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
27-மார்-201910:19:30 IST Report Abuse
Yes your honorராமனாதன் உங்களுக்கு எவ்வளவு கிடைச்சது...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X