எதிர்க்கட்சிகளை கேள்வி கேளுங்கள்: மோடி விளாசல்

Updated : மார் 22, 2019 | Added : மார் 22, 2019 | கருத்துகள் (102)
Advertisement

புதுடில்லி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து நமது படைகளை சந்தேகிக்கும் வகையில் பேசி வரும் எதிர்க்கட்சி தலைவர்களை கேள்வி கேட்க வேண்டும் என இந்தியர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.



புல்வாமா தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்., தலைவர் ராகுலின் நம்பிக்கைக்குரியவரும், காங்., முக்கிய நிர்வாகியுமான சாம் பிட்ரோடா கடுமையாக விமர்சித்ததுடன், மத்திய அரசை கேள்வி கேட்டுள்ளார். சாம் பிட்ரோடா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிறதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.



அதில் அவர் காங்., தலைவரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர், வழிகாட்டியுமானவர் காங்.,கிற்காக பாக்., தேசிய தினத்தை கொண்டாடியும், இந்திய படைகளின் துணிச்சலான செயல்பாட்டை தவறாகவும் கூறி உள்ளார். பயங்கரவாதத்திற்கு பதில் சொல்ல காங்., தயாராக இல்லை என்பதை நாடு ஏற்கனவே அறியும். அதை காங்., மற்றும் ராகுல் குடும்ப விசுவாசியும் உறுதிப்படுத்தி உள்ளார். இது புதிய இந்தியா. பயங்கரவாதிகளுக்கு அவர்கள் மொழியிலேயே, அவர்களுக்கு புரியும் வண்ணம் பதிலளிப்போம்.



பயங்கரவாதிகளிடம் மன்னிப்பு கேட்பதும், நமது ராணுவத்தை கேள்வி கேட்பதும் எதிர்க்கட்சிகளின் இயற்கை குணம். காஷ்மீரை பாதுகாப்பதற்காக தங்களின் உயிரை கொடுத்தவர்களை அவமதிக்கும் விதமாக ராம்கோபால் போன்ற மூத்த தலைவர்களின் பேச்சு கண்டிக்கதக்கது. நமது வீரர்களின் குடும்பங்களின் மீது கருணையில்லாமல் உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் நமது படைகளை மீண்டும் அவமதித்து வருகின்றன. இவ்வாறு பேசும் எதிர்க்கட்சி தலைவர்களை கேள்வி கேட்கும் படி இந்திய குடிமக்களை கேட்டுக் கொள்கிறேன். அவர்களிடம் சொல்லுங்கள், 130 கோடி இந்தியர்களும் அவர்களின் பேச்சுக்களை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இந்தியா எப்போதும் நமது படைகளின் பக்கம் திடமாக நிற்கின்றன என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - CHENNAI,இந்தியா
28-மார்-201916:51:31 IST Report Abuse
Siva Kumar பூனை கண்ண மூடினா உலகம் இருண்டு விடும் என்று சொல்வது போல் ஒரு தொகுதியில் ஒட்டு போடுபவர் குண்டு சட்டியில் குதிரை ஒற்ற மாதிரி எல்லாரும் தமிழ் நாட்டுலேயே இல்ல பல மாநிலங்களில் ஏன் உலகின் பல இடங்களில் இருக்கிறார்கள் அவர்கள் லீவு போட்டு வந்து ஒட்டு போடாம? இந்தியாவின் பெருமை அதன் வளமை இப்போதுதான் பெருகி இருக்கு. மோடியின் தெளிவான முடிவினால். அவர் கொண்டு வந்த அத்தனை ஸ்கீம்களும் நாட்டின் வளர்ச்சிக்கு என்று படித்த அறிவுடைய அனைவருக்கும் தெரிந்ததே. ஜெய் ஹிந்த். VOTE FOR பி ஜே பி .
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-மார்-201903:40:52 IST Report Abuse
J.V. Iyer அப்படி சொல்லுங்கள் பிரதமரே இந்தியாவின் மூன்றாவது பெரும் பணக்காரியாக மாறுவதற்கு ராகுல் பாப்புவின் அம்மா என்ன பெரிய தொழில் அதிபரா??? எப்படி பணம் வந்தது?? ராகுல் பாப்புவின் சகோதரியின் கணவர் எப்படி மாபெரும் பணக்காரர் ஆனார்?? இதெற்க்கெல்லாம் ராகுல் பாப்பு பதில் இருக்கிறதா??? இதையெல்லாம் மறைக்கத்தான் இவர் பிரதமர் மீது சேற்றை வாரி இறைக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்-201900:40:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "ஹரேன் பாண்ட்யாவை கொன்னது யாரு?", "கோத்ரா சம்பவத்தில் உங்க பங்கு என்ன?", "ரபேல் ஒப்பந்தத்தில் எவ்வளவு மோடி கோஷ்டி எவ்வளவு கோடி அடிச்சாங்க ?" , "உண்மையாகவே மோடி கல்லூரி படிப்பு படிச்சாரா ?" "மோடிக்கு பதவி, அமைச்சர்களுக்கு பணம், கார்ப்பரேட்டுக்கு கொள்ளையடிக்க வசதி என்று இருப்பது உண்மையா" - இதையெல்லாம் எதிர்க்கட்சி கிட்டே கேட்டா ஆதாரத்தோடு கழுவி கழுவி ஊத்துறாங்க தலைவரே.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
23-மார்-201908:45:23 IST Report Abuse
Pannadai Pandianஹரேன் பாண்டியனை கொன்னது ஜிஹாதிகள்…..அதில் என்ன சந்தேகம் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X