கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ் வெற்றி செல்லாது: ஐகோர்ட்

Updated : மார் 22, 2019 | Added : மார் 22, 2019 | கருத்துகள் (42)
Advertisement

சென்னை: 'மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., போஸ் வெற்றி பெற்றது செல்லாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.







கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, அ.தி.மு.க., சார்பில், சீனிவேல் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு அறிவிக்கும் முன், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த, சீனிவேல் மரணமடைந்தார். இதனால், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், அ.தி.மு.க., சார்பில், ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த, டாக்டர் சரவணன், உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.






மனுவில் கூறியிருப்பதாவது: வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும், இரண்டு படிவங்களில், கட்சியின் தலைமை பொறுப்பு வகிப்பவரின் கையெழுத்து இடம்பெற வேண்டும். கட்சி வேட்பாளர் என அங்கீகரித்தும், சின்னம் ஒதுக்கியும், அந்த படிவங்கள் இணைக்கப்படும். வேட்பாளர், ஏ.கே.போஸ் தாக்கல் செய்த படிவங்களில், கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதில், கைரேகை இடம் பெற்றது. இந்த வேட்புமனுவை ஏற்கக்கூடாது என ஆட்சேபித்தும், அதை தேர்தல் அதிகாரி ஏற்றார். படிவங்களில், விரல் ரேகையை பதிவு செய்யும் போது, மருத்துவமனையில், ஜெ., இருந்தார். அவர், சுயநினைவுடன் தான், விரல் ரேகையை பதிவு செய்தாரா என்ற, சந்தேகம் உள்ளது. எனவே, ஏ.கே.போஸ் வேட்புமனுவை ஏற்றதும், தேர்தலில் வெற்றி பெற்றதும் செல்லாது என, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது.

மனுவை, நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அரசு டாக்டர் பாலாஜியின் முன்னிலையில், ஜெ.,யின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டதால், அவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம், டாக்டர் சரவணன் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் அருண், குறுக்கு விசாரணை செய்தார்.தேர்தல் வழக்கு விசாரணை, நிலுவையில் இருக்கும் போது, ஏ.கே.போஸ் மறைந்தார். இதையடுத்து, வழக்கை தொடர்ந்து நடத்த, யாராவது விருப்பம் தெரிவிக்கின்றனரா என, அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, இரண்டு பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

பின், தேர்தல் வழக்கில் விசாரணை நடந்தது. சரவணன் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன் வாதாடினார். இரு தரப்பு வாதங்கள் முடிந்து, தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார். இதற்கிடையில், தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட, மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.






இந்நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில், நீதிபதி வேல்முருகன், தீர்ப்பு அளித்தார். அதில், ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்றும், சரவணன் வழக்கை ஏற்பதாகவும், நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளார்.

தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர் அருண் கூறியதாவது: வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் படிவங்களில், விரல் ரேகை வைக்கும்போது, ஜெ., சுயநினைவில் இருந்தார் என்பது, ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. டாக்டர் பாலாஜி முன்னிலையில் தான், விரல் ரேகை பெறப்பட்டது என்பதும் நிரூபிக்கப்படவில்லை.எனவே, வேட்பாளரை அங்கீகரித்து அளித்த படிவங்களை, தேர்தல் ஆணையம் ஏற்றது சரியல்ல. அதனால், ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது. சரவணன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு ஏற்கப்படுகிறது என, தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
25-மார்-201914:07:10 IST Report Abuse
Gnanam யாரை குறைகூறுவது. இப்படி நீதிமன்றம் செயல்பட்டால் … ஒரு வழக்கை இத்தனை நாட்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்திற்கு ஒரு கெடு விதிக்கவேண்டும். அப்போதுதான் வழக்குகள் தேங்காது,
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-மார்-201905:01:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அந்த கீச்சு மூச்சு ஆணையர், அவனை கழுவி ஊத்தியிருக்கிறது நீதிமன்றம்.
Rate this:
Share this comment
Cancel
23-மார்-201912:48:20 IST Report Abuse
ஆப்பு . மக்களாட்சிங்கற பேரில் மக்களை ஏமாத்தி ஆட்சி செய்யறாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X