பொது செய்தி

தமிழ்நாடு

வேலை இல்லாததால் போட்டி: சுயேச்சை வேட்பாளர், 'தமாஷ்'

Updated : மார் 23, 2019 | Added : மார் 22, 2019 | கருத்துகள் (12)
Advertisement
 வேலை இல்லாததால் போட்டி:  சுயேச்சை வேட்பாளர், 'தமாஷ்'

'வேலை கிடைக்காததால், தேர்தலில் போட்டியிடுகிறேன்' என, சுயேச்சை வேட்பாளர் கூறினார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த, என்.எல்.சி., ஊழியர் ஆறுமுகத்தின் மகன் பாலாஜி, 37. இவர், கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, கலெக்டர் அன்புச்செல்வனிடம் தாக்கல் செய்தார்.

ஐ.டி.ஐ., வரை படித்துள்ள பாலாஜி, வேட்பு மனு தாக்கல் செய்த போது அணிந்திருந்த பேட்ஜில், வள்ளுவர், வள்ளலார், இயற்கை விவசாயி நம்மாழ்வார், மறைந்த முன்னாள்அமைச்சர் கக்கன் ஆகியோரின் படங்கள் இருந்தன.

இது குறித்து அவர் கூறுகையில், ''இந்த நான்கு தலைவர்களின் வழியை பின்பற்றி, நடந்து வருகிறேன். ஐ.டி.ஐ., படித்துள்ள எனக்கு, வேலை கிடைக்கவில்லை; திருமணம் நடக்கவில்லை.
''வேலை கிடைக்காதால், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, எம்.பி.,யாகி, டில்லிக்கு சென்று வேலை செய்யப் போகிறேன். பார்லி மென்டில் பொது மக்களின் கோரிக்கைக்காக குரல் கொடுப்பேன்,'' என்றார்.பாலாஜி, தன் சொத்தாக, மோட்டார் சைக்கிளை காண்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-மார்-201917:52:03 IST Report Abuse
D.Ambujavalli நாட்டிலுள்ள வேலையில்லா இளைஞர்கள் /இளைஞிகள் எல்லாரும் சுயேச்சை மனு தாக்கல் செய்து தேர்தல் ஆணையத்தைப் பைத்தியம் பிடிக்க வைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sams - Palakkad,இந்தியா
23-மார்-201915:24:37 IST Report Abuse
sams 😂😂😂😂
Rate this:
Share this comment
Cancel
23-மார்-201910:46:58 IST Report Abuse
மதுவந்தி வேலை வாய்ப்பு இல்லாத நிலையை இதைவிட அருமையாய் உணர்த்த முடியாது. வேலைக்கான சந்தர்ப்பத்தை உண்டாக்கி கொண்டுள்ளார் .மக்கள் நிர்ணயம் செய்ய வேண்டிய விஷயம். சுய தொழில் களமா தேர்தல். anyway all the best.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X