அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
யாருக்கு, 'வாய்ஸ்' அதிகம்?

'உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா...' - பல லட்சம் தொண்டர்களையும், அசால்டாக, 'டீல்' செய்த கம்பீர குரலை, யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது.

 யாருக்கு, 'வாய்ஸ்' அதிகம்?

'என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே...'என, கரகரத்த குரலில் கருணாநிதி முழங்கினால் போதும், குழுமியிருக்கும் மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்க துவங்கிடும். இந்த காந்தக் குரல்களுக்கே உண்டான வசீகரம், இனி, வரும் அரசியல் தலைவர் களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே! இவ்விரு

ஆளுமைகளும் இல்லாமல், முதல் முறையாக சந்திக்க போகும் தேர்தல் களம் இது.


இதில் யாருடைய, 'வாய்ஸ்' மேலோங்கும் என்ற போட்டி ஒருபக்கம் இருந்தாலும்,இவ்விரு தலைகளின், 'மேக்னடிக்' குரலையே, கருவியாக பயன்படுத்த ஆயத்தமாகி விட்டனர்,
அரசியல் கட்சியினர்.ஆமாங்க... 'அம்மா'வே, ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடும்படி கேட்கப் போகிறாராம்.


பொதுவாக, பிரசார சமயங்களில் ஓட்டு கேட்பது போல், கட்சி தலைவர்களின் குரலை பதிவு செய்து, வாக்காளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பி வைப்பதுவழக்கம்.ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க., - ஐ.டி., குழுவினர் இதை செய்தனர். அவர் இறந்த பிறகும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இதே யுத்தி, 'ஒர்க் அவுட்' ஆனது.வரும் லோக்சபா தேர்தலி லும், இதே ஐடியாவை பயன்படுத்த, அ.தி.மு.க.,

Advertisement

திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஐ.டி., குழு, ஸ்பெஷலாக அமைக்கப்பட்டு, மும்முரமாக வேலை செய்து வருகிறது.

இதில், ஹைலைட்டான விஷயமே, 'அம்மா' வே வாக்காளர் பெயரைச் சொல்லியே கூப் பிட்டு ஓட்டு கேட்கும்படி, குரல் பதிவு செய்யப் படுகிறதாம்.தி.மு.க., தரப்பிலும் கருணாநிதி குரலை பயன்படுத்தும், 'ஐடியா' உள்ளதாக, தகவல் கிடைத்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALU - HOSUR,இந்தியா
24-மார்-201900:47:24 IST Report Abuse

BALUதற்போதைய திமுக தலைமை இந்த யுக்தியைப் பயன்படுத்தாது. ஏனெனில் ஊழலின் ஊற்றுக்கண் கருணாநிதியின் குரலைக் கேட்டால், திமுக வுக்கு வரும் சொற்ப ஓட்டுகளும் இல்லாமல் போய்விடும். அந்தளவு சோஷியல் மீடியாக்களில் கருணாநிதி பெயர் நாறிக் கிடக்கிறது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23-மார்-201915:49:21 IST Report Abuse

Endrum Indianபேச்சிலே மத்தாப்பு ஆனா பக்கத்தில் போனா ஊழலே என் உயிர்மூச்சு என்னும் புஷ்வாணம் இந்த காமராஜுக்கு பின் வந்த எல்லாரும் கேடு கெட்ட டாஸ்மாக்கினாடு அரசியல்வாதிகள்.

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
23-மார்-201915:45:37 IST Report Abuse

தமிழ்மைந்தன் அம்மா கொடுத்தே பழக்கப்பட்டவர்......கருணாநிதி எடுத்தே பழக்கப்பட்டவர்....... இருவரும் எப்படி சமமாக முடியும்

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
23-மார்-201919:26:14 IST Report Abuse

வந்தியதேவன்////அம்மா கொடுத்தே பழக்கப்பட்டவர்......கருணாநிதி எடுத்தே பழக்கப்பட்டவர்....... இருவரும் எப்படி சமமாக முடியும்//// ஆமாம்... ஆமாம்... எப்படி சமமாக முடியும்...? ...

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X