அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
துட்டுக்கு துரத்தும் துக்கடாக்கள்!
கூட்டத்தை பார்த்து மிரண்டு ஓடும் வேட்பாளர்கள்

தமிழகத்தில், லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், ஏப்ரல், 18ல், நடக்கிறது. பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - புதிய நீதி கட்சி - புதிய தமிழகம் கட்சிகளுடன், அ.தி.மு.க., மெகா கூட்டணி அமைத்துள்ளது.

துட்டு,வேட்பாளர்கள்


தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்., - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்டுகள் - விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இரு கூட்டணி கட்சிகளும், வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை துவக்கி உள்ளன.

இந்நிலையில், வேட்பாளர்களின் வீடுகளுக்கு, கூட்டணி கட்சியினரும், 'லெட்டர் பேடு' கட்சியினரும், படையெடுத்து வருகின்றனர். அதிகாலையில் குவியும் கூட்டத்தை பார்த்து, வேட்பாளர்களே மிரண்டு போகின்றனர். 'கூட்டம் கூடுவது நல்லது தானே; ஆதரவாளர்கள் வரத்து, ஓட்டுகளாகத் தானே மாறும்; அது, வெற்றிக்கான அறிகுறி தானே' என, பலர் சொல்லலாம்.ஆனால், கூடிய கூட்டம் எல்லாம், ஆதரவு தருகிறோம் என, கூறுவதற்காக வந்ததல்ல. 'தேர்தல் நேரம், எங்களையும் கவனியுங்கள்... உங்களுக்கு, எங்கள் ஆதரவு அமோகமாக கிடைக்கும்' என, வசூல் வேட்டை நடத்தத் தான். இதனால் தான், வேட்பாளர்கள்மிரளுகின்றனர்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், தொகுதிகளுக்கு சென்று, கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஊர் பெரியவர்களை சந்தித்து வருகின்றனர். பிரசாரத்தை துவக்கும் முன், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று,

அந்த பகுதியில் உள்ள, தங்கள் கட்சி மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து, வாழ்த்துபெறுகின்றனர்.

வேட்பாளருடன், அவருடைய கட்சியின், மாவட்ட, நகர செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் செல்கின்றனர்.தேர்தல் பணி தொடர்பாக ஆலோசிக்க, அந்த தொகுதியில் உள்ள, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

அதில், 'உங்கள் கட்சி தொண்டர்களை, நம் வேட்பாளருக்கு தீவிர களப்பணி ஆற்ற சொல்லுங்கள்' எனக்கூறி, தேர்தல் செலவாக, கட்சியின் வலிமைக்கு ஏற்ப, கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகி களிடம், முதல் கட்டமாக, 1 லட்சம் ரூபாய் வரை வழங்கப் படுகிறது. இந்த விபரத்தை அறிந்து, அந்த தொகுதியில் உள்ள, கூட்டணி கட்சி நிர்வாகிகளின், எதிரணி மற்றும் சார்பு அணியினர், வேட்பாளரை சந்தித்து, 'நாங்கள், இந்த கட்சியில் இருந்து வருகிறோம்; உங்களுக்கு பிரசாரம் செய்ய, செலவுக்கு பணம் தர வேண்டும்' என, கேட்கின்றனர்.

'ஏற்கனவே, உங்கள் மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டுள்ளது' என, வேட்பாளர்கள் கூறுகின்றனர். அதற்கு அவர்கள், 'அவர், எங்களுக்கு தர மாட்டார்; நாங்கள் மாவட்ட இளைஞரணி தலைவர், தொழிலாளர் அணி தலைவர்' என, சார்பு அணிகளின் பெயரை கூறி, பணம் கேட்கின்றனர். இந்த விபரத்தை நன்கு தெரிந்து வைத்துள்ள, கட்சியின் மாவட்ட செயலர்களும், 'இதை எல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது; சற்று குறைத்தாவது கொடுங்கள்' என, வேட்பாளர்களிடம் கூறுகின்றனர். பிரதான கட்சிகளுக்கு தான், கிளை கழகம் வரை, நிர்வாகிகள் உள்ளனர்.

சிறு கட்சிகளில், அந்த அளவுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் கட்டமைப்பு இல்லை. அந்த கட்சியை சேர்ந்தவர்களும், பல்வேறு பிரிவுகள் எனக்கூறி, 'கல்லா' கட்ட படையெடுக்கின்றனர். அரசியல்

Advertisement

கட்சிகளில் இருந்து ஓரங்கப்பட்டவர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், உழைக்க ஆர்வம் இல்லாத இளைஞர்கள் உள்ளிட்ட சிலர், லெட்டர் பேடு கட்சிகளை நடத்தி வருகின்றனர்.

அவர்கள், தங்கள் பகுதியில் நடக்கும், கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு, முக்கிய பிரமுகர்களிடம் நன்கொடை வசூலிக்க, தங்கள் கட்சியின் பெயர் அச்சிடப்பட்ட, 'விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு' ஆகியவற்றை பயன்படுத்தி வரு கின்றனர்.மேலும், அவர்கள், பள்ளி, கல்லுாரிகளில், குழந்தைகளுக்கு இடம் வாங்கி தருவதாக கூறி, கல்வி அறிவு இல்லாத பெற்றோரிடம் இருந்து, பணம் வசூலிப்பதை வழக்கமாக வைத்து உள்ளனர்.

தற்போது, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, லெட்டர் பேடு கட்சியினரும், அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை சந்தித்து, பிரசாரம் செய்ய போவதாக கூறி, வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலர், ஒரே தொகுதியில் போட்டியிடும், இரு வேட்பாளர் களிடம், பணம் வசூலித்து வருகின்றனர்.தொகுதி தோறும்உள்ள, ஜாதி சங்கங்களும், தேர்தல் கால வசூல் வேட்டையில் இறங்கி விட்டன.

வேட்பாளர்களை சந்தித்து, இந்த தொகுதியில், தங்கள் சமுதாய ஓட்டுகள் தான் கணிசமாக உள்ளது எனக்கூறி, விலை பேசுகின்றனர். இப்படி, ஒவ்வொரு ஜாதி சங்க நிர்வாகிகளும், ஓட்டுகளை விலை பேசும் தகவல் வெளியாகி உள்ளது.ஒரே கட்சியை சேர்ந்த, பலரும் வந்து, வெவ்வேறு பதவி களை கூறி, பணம் கேட்பதுடன், லெட்டர் பேடு ,ஜாதி சங்கங்களும் பணம் கேட்டு வருவதால், யாருக்கு தருவது என தெரியாமல், வேட்பாளர்கள் திணறி வருகின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
29-மார்-201914:09:00 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>கூட்டம் தொல்லையே தாங்காதுபோல இருக்கே எலெக்ஷன் என்றால் எதனால் இப்படி ஓசி சொத்துக்கும் சாராயம்கும் அலையுதுங்கோ தமிழ்நாடே உன் நேர்மை உண்மை எல்லாம் செத்துபோயாச்சா இதெல்லாம் பாக்கும்போது திமுக அதிமுக பாமக எல்லோரும் டெபாசிட்டும் இல்லாமல் தோத்து ஓடணும்

Rate this:
blocked user - blocked,மயோட்
23-மார்-201908:14:33 IST Report Abuse

blocked user40 ஆண்டு திருட்டு திராவிட மதத்தினர் ஆண்டதால் பிச்சைக்காரர்களை உருவாக்கி வளர்த்து விட்டு இருக்கிறார்கள்... இதை அவ்வளவு எளிதில் சீர் செய்து விட முடியாது...

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
23-மார்-201908:05:53 IST Report Abuse

Bhaskaranஇன்னும் தேர்தல் முடியும்வரை தினமும் பிரியாணியும் டாஸ்மாக்கும் வேட்பாளர்களின் செலவில்தான் என்று முடிவெடுத்து ஒருகூட்டம் எப்போதோ தயாராகி விட்டது அழுதுதான் தீரணும் வேறுவழியில்லை ஒரு ச.ம. தொகுதிக்கு ஆயிரம்பேர் வேட்பாளர்களின் செலவில் தினமும் இவர்கள் மஞ்சக்குளிப்பார்கள் கிட்டத்தட்ட மூணு லட்சம் பேருக்கு உணவும் மதுவும் இவர்களின்செலவில்தான் நடக்கும் இதற்கணச்செலவை வெற்றிபெற்றவர்கள் மீண்டும் மக்களிடம் தொழிலதிபர்களிடம் வசூல் செய்துவிடுவார்கள்

Rate this:
skv - Bangalore,இந்தியா
30-மார்-201909:19:34 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இதுவும்மக்களுக்குத்தருமலஞ்சமேதான் புரியாதமாதிரி இருக்கானுக மக்களே உங்க கைகாசுலே துன்றதுதான்யா ஓட்டும் ஓசில துன்னாலை கேவலமான எண்ணங்களும் இவளை அளிக்கலாம் என்று வெறியும் வரும் நல்லவன் கையால் ஒருவாய் நீர் குடிச்சாள் புத்தி தெளிவுவரும் தீயாயவன் திருடன் கைலே எதை துன்னாலும் உன் புத்தி மழுங்கிடும் மணமகளும் பண்ணவே என்னும் இவ்ளோபெருங்க டெபாசிட்கட்டி நிக்குறானுகளே எவ்ளோபெருக்கு ரேபாசிட் திரும்பிவரும் ???????????????ப்ளீஸ் சிநிதிக்கவும் நிற்கும் எல்லோரும் வின் பண்ணபோறதேயில்லே இது உண்மை ...

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X