அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வேட்பாளர் யார்; பின்னணி என்ன?
இணையதளத்தில் தேடும் வாக்காளர்கள்

தமிழகத்தில், 1967 முதல், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் தான், மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இரு கட்சிகளின் தலைமையில் தான், மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கின்றன.

வேட்பாளர் யார்,பின்னணி என்ன?,இணையதளத்தில்,தேடும் வாக்காளர்கள்

ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க., சார்பில், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், கட்சியில் எதிர்ப்பு வராது.அதற்கு ஏற்ப, வாக்காளர்களும், தங்கள் தொகுதி வேட்பாளர் யார் என்பதை பார்க்காமல், ஜெயலலிதாவுக்கு ஓட்டளித்ததாக கூறுவர்.

இதேபோல், தி.மு.க., வில் நிறுத்தப்படும்

வேட்பாளர்களை அறிவதைவிட, அக்கட்சியின் சின்னமான, உதயசூரியனுக்கு ஓட்டளிப்பதையே, சிலர் வழக்கமாக வைத்து உள்ளனர்.தற்போது, லோக்சபாதேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளு க்கான இடைத் தேர்தலும், அடுத்த மாதம் நடக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற, இருபெரும் தலைவர்கள் இல்லாதமுதல் தேர்தலை, தமிழகம் சந்திக்கிறது.

இந்த தேர்தலில், கட்சிகளின் சார்பில், புதிய முகங் களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அரசியலில் குதித்துள்ள அனைவரிடமும் தற்போது மொபைல் போன்கள் உள்ளன. இதன் விளைவாக, சிறுவர்கள் முதல்,முதியவர்கள் வரை, மொபைல் போன் வாயிலாக, நாட்டு நிகழ்வுகளை தெரிந்து கொள்கின்றனர். இதனால், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, இளைஞர்களும், முதல் முறையாக, ஓட்டளிக்க போகும் வாக்காளர்களும், தன் தொகுதி வேட்பாளர்யார்; குடும்பம், தொழில், சமூக நலனில்

Advertisement

அக்கறை உள்ளவரா என்பது உள்ளிட்ட, பின்னணி விபரங்களை, இணைய தளம் வாயிலாக தெரிந்து கொள்ள, ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், பெற்றோர் அறிவுறுத்தும் கட்சிக்கு ஓட்டு போடாமல், சுய விருப்பப்படி முடிவு செய்யும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது, உறுதியாகி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-மார்-201913:44:00 IST Report Abuse

Malick Rajaதமிழகத்தில் பிஜேபிக்கு இடமில்லை .. எனவே பிஜேபி வேட்பாளர்களுக்கும் தமிழக மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் .. பிஜேபி கட்சியினரின் ஓட்டுக்கள் கண்டிப்பாக பிஜேபிக்கு கிடைப்பது மட்டும் உறுதி . அது நோட்டாவுக்கு கீழ் கூட பல தொகுதிகளில் கிடைக்கவும் வாய்ப்புக்கள் அதிகம் அப்புறம் என்ன பிஜேபிக்கு தமிழகத்தில் ஆப்பூ என்பது உறுதி

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
23-மார்-201912:23:46 IST Report Abuse

தமிழ்மைந்தன் என்னதான் ஜோக்அடித்தாலும் பழமொழி நாயகன்,ஜப்பான் துணை முதல்வர்,உலக ஊழல்வாதி மகன், ஜாதி மற்றும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளவர்,வாரிசு அடிப்படையில் திமுக கம்பெனி தலைவர்,சர்ச் மற்றும் தர்க்காவிற்கு மட்டுமே செல்லும் மத சார்பற்ற தலைவர், போன்ற பல பட்டங்களை உடைய உமது தலைவர்போல மக்களை சிரிக்க வைக்க ""குளோரோபாம் " கூட தோல்வியே...............அதுவும் அந்த பூனை பழமொழி அடடே..........பேஷ்...பேஷ்

Rate this:
Sangeedamo - Karaikal,இந்தியா
23-மார்-201910:49:49 IST Report Abuse

Sangeedamoதேடுங்க நல்லா தேடுங்க... ஆனா சரியாய் யோசிச்சி சரியான ஆள தேர்ந்தெடுத்து,சரியான பாதையில் வழிநடத்தும் மிக சரியான தலைமையை மிக பொருத்தமா தேர்ந்தெடுத்து அதில் வளமான, பலமான பாரதத்தை உருவாக்க வேண்டிய கடமை உணர்வு நமக்கும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டிய தரும் இது... நாம் மட்டும் அல்ல நம் சந்ததியினரும் வளமோடும், நலமோடும் வாழ வேண்டும்....

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X